Archive for the ‘மார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் பித்அத்’ Category

இப்லீசின் சதிவலைகள்!

Wednesday, May 4th, 2016

இப்லீசின் சதிவலைகள் ஆறு! அவைகள்: (1) முதலாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அதன் மூலம் இணைவைப்பு செய்து மற்றும் இறைக்கட்டளைகளைப் புறக்ணித்து குஃபஃரான காரியங்களைச் செய்யத் தூண்டுவது! இதில் இப்லீஸ் வெற்றியடைந்தால் அந்த மனிதனை தன்னுடைய படையில் சேர்த்து சத்தியத்தில் இருக்கின்ற மற்ற மனிதர்களுக்கு எதிராக இவரைத் திருப்பி விடுகின்றான். (more…)

புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களும் முஸ்லிம்களின் நிலையும்!

Tuesday, May 27th, 2014

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் பலராலும் விமர்சையாகக் கொண்டாடப்படக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டில் ஒவ்வொரு முஸ்லிமும் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு முன்பு, தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய காலண்டர்களைப் பற்றியும் அவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டது? அந்தக் காலண்டர்கள் எவ்வாறு தோன்றியது? என்பது பற்றியும், முஸ்லிம்களாகிய நாம் எந்த காலண்டரை, ஏதற்காக பின்பற்ற வேண்டும்? என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. (more…)

சபர் மாதமும் மூட நம்பிக்கைகளும்!

Monday, May 19th, 2014

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்: “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது. Mochilas Kanken Classic nike air max heren ‘ஸஃபர்’ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது’ என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே!

அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ஆதாரம்: புகாரி.

மூடப்பழக்க வழக்கங்களும் அறியாமையும் நிரம்பி வழிந்து ஜாஹிலிய்யாக் காலமக்களிடம் சபர் மாதம் என்பது பீடை நிறைந்த மாதம் என்றொரு தவறான நம்பிக்கை இருந்தது. fjällräven kånken Stora Scarpe Nike Italia ஆனால் (more…)

ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்! – Audio/VIDEO

Saturday, January 19th, 2013

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு!

நாள் : 17-01-2013

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃபஃஜி, சவூதி அரேபியா (more…)

புது வருடமும், முஸ்லிம்களும்!

Sunday, December 30th, 2012

newyearவரும் திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01  புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப் பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப் பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.   இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய (more…)

பிறந்த நாள், இறந்த நினைவு நாள், திருமண நாள் போன்ற நாட்களைச் சிறப்பித்துக் கொண்டாடலாமா?

Thursday, December 27th, 2012

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

பிறந்த நாள், இறந்த நினைவு நாள், திருமண நாள் போன்ற நாட்களை சிறப்பித்துக்கொண்டாடுவது என்பது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் உள்ளது கிடையாது! மாறாக இவைகள் மாற்று மதக் கலாச்சாரத்தையுடையதாக இருப்பதால் இத்தகைய தினங்களை சிறப்பித்துக் கொண்டாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஏனென்றால் மேலும் இவைகள் எல்லாம் யூத மற்றும் கிறிஸ்தவக் கலாச்சாரங்களாகும்.. மாற்றுமத கலாச்சாரங்களைப் பின்பற்றுவதற்கு நமக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (more…)