தவ்ஹீதும் அதன் வகைகளும்

இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்

தவ்ஹீது (ஏகத்துவம்)

தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர்.

இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

தவ்ஹீதின் வகைகள்: –

தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: –

1) தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
2) தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
3) தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: –

இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யா” என்று பெயர்.

அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: –

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங்கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யா’ என்று பெயர்.

அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: –

அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு “தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்” என்று பெயர்.

தவ்ஹீதின் முக்கியத்துவம்: –

மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.

இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப்பானாவும்).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “தவ்ஹீதும் அதன் வகைகளும்”
  1. உங்கள் கருத்துக்களில் இது போன்ற கட்டுரைகளில் அதன் மூல ஆதார நூல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எதன் அடிப்படையில் நீங்கள் தவ்ஹீதை வகைப்படுத்தியுள்ளீர்கள்? என்பதை தெளிவு படுத்தவும். இது போன்ற செயல்களில் மத்ஹபு வாதிகளுக்கும் குர்ஆன் ஹதீஸ் பேசுபவர்களுக்கும் அது ஒன்றே வேறுபாடு என நான் கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed