அத்தியாயங்களின் விளக்கம் – 51 முதல் 60 வரை

51) சூரத்துத் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று

அத்தியாயம் 51

வசனங்கள் 60

புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான்.

“(நன்மை, தீமைக்குக்) ‘கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?’ என்று அவர்கள் கேட்கின்றனர்.

நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).

‘உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்’ எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.” (51:12-14)

52) சூரத்துத் தூர் – தூர் மலை

அத்தியாயம் 52

வசனங்கள் 49

தூர் மலை, எழுதப்பட்ட வேதம், பைதுல் மஃமூர், உயர்ந் முகடு, பொங்கும் கடல் என்பவற்றில் சத்தியம் செய்து மறுமை நிகழ்ந்தே தீரும் என்கின்றான்.

“நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்! அதனைத் தடுப்பவர் எவருமில்லை.” (52:7,8)

“இன்னும் அந்நாளில் வானம் சுற்றிக் குமுறி, மலைகள் தூள் தூளாகிடுன் என்று கூறிவிட்டு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை எல்லாம் வல்ல அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு விடுக்கின்றான்.

(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.” (52:11)

53) சூரத்துந் நஜ்ம் – நட்சத்திரம்

அத்தியாயம் 53

வசனங்கள் 62

முஹம்மது நபியவர்கள்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விழுகின்ற நட்சத்திரம் மீது சத்தியம் செய்து,

“உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அவர் பேசுவது எல்லாம் அவருக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.” (53:1-4)

மேலும் இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில்

“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.” என்று மனித சமுதாயத்திற்கு கட்டளை இடுகின்றான்.

54) சூரத்துல் கமர் – சந்திரன்

அத்தியாயம் 54

வசனங்கள் 55

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரும் அத்தாட்சிகளில் ஒன்றாகிய சந்திரன் பிளக்கப்பட்ட சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றான்.

“(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், ‘இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்’ என்றும் கூறுகிறார்கள்.

அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.” (54:1-3)

அன்று நிராகரிப்பாளர்கள் இதனை பொய்ப்பித்தாலும் இன்றைய நவீன யுகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

55) சூரத்துர் ரஹ்மான் – அளவற்ற அருளாளன்

அத்தியாயம் 55

வசனங்கள் 78

அல்லாஹ் மனிதனை படைத்து, மனிதனுக்கு செய்த அருட்கொடைகளை பட்டியல் இடுகின்றான். அதில் அல்குர்ஆனை கற்றுத் தந்ததை ஞாபகப்டுத்திவிட்டு பின்னர் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றான். இந்த கேள்வியை இந்த அத்தியாயம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் மனித, ஜின் வர்கங்களாகிய நம் இரு சாராரைப் பார்த்தும் பல தடவை எழுப்புகின்றான்.

“ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?”

மீண்டும் இந்த அத்தியாயத்தின் இறுதியில் சுவர்க்கத்தில் நல்லாடியார்களுக்கு சித்தப்படுத்தியுள்ள சுவண்டிகளை ஞாபகப்படுத்தி இருதியாக.

“மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.” (55:78)

என்ற வசனத்துடன் இவ்வத்தியாயத்தை நிறைவு செய்கின்றான்.

56) சூரத்துல் வாகிஆ – மாபெரும் நிகழ்ச்சி

அத்தியாயம் 56

வசனங்கள் 96

நிராகரிப்பவர்கள் இறுதி நாள் தொடர்பில் அவநம்பிக்கையில் இருந்தாலும் அது நிகழ்ந்தே தீரும் என்பதனை இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றான்.

“மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்

அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.

அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்இ (நல்லோரை) உயர்த்தி விடும்.” (56:1-3)

தொடர்ந்தும் மறுமை நாளில் இடம் பெரும் சில சம்பங்களை குறிப்பிடுகின்றான்.

“பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,

பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.” (56:4-6)

57) சூரத்துல் ஹதீத் – இரும்பு

அத்தியாயம் 57

வசனங்கள் 29

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம் இன்னும், இரும்பையும் இறக்கினோம், அதில் (போருக்கு வேண்டடிய) கடும் சக்தியும், மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.” (57:25)

மேலும் இவ்வத்தியாயத்தின் நடுப்பகுதியில் மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகள் தொடர்பாக ஞாபகப்படுத்தி, நேர்வழியை கொடுத்தது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்.” (57:9)

58) சூரத்துல் முஜாதலா – தர்க்கிப்பவள்

அத்தியாயம் 58

வசனங்கள் 22

அவ்ஸ் இப்னு ஸாமித் என்பரின் மனைவி ஹவ்லா பின்து தஃலபா அவர்கள் நபியவர்களிடம் தனது கணவன் தொடர்பாக முறையிட்ட சம்பவத்தை குறிப்பிடும் இவ்வத்தியாயம் லிஹார் என்கின்ற ‘மனைவியை பார்த்து நீ எனது தாய்’ என்று கூறி அவளை விட்டும் தூரமாகும் செயலில் ஈடுபடும் கணவன்மார்கள் தொடர்பான சட்டதிட்டங்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

“‘உங்களில் சிலர் தம் மனைவியரைத் ‘தாய்கள்’ எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்’ (ஆகிவிடுவது) இல்லை! இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.

மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.” (58:2,3)

59) சூரத்துல் ஹஷ்ர் – ஒன்று திரட்டுதல்

அத்தியாயம் 59

வசனங்கள் 24

மறுமை நாள் கபுருகளில் இருந்து எழுப்பபட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவதை அல்லாஹ் இரண்டாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

“ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும் பாவிகள் ஆவார்கள்.” (59:18,19)

60) சூரத்துல் மும்தஹினா -சோதிப்பவள்

அத்தியாயம் 60

வசனங்கள் 13

மக்காவில் இருந்து மதீனாவை நோக்கி வரக்கூடிய பெண்களின் ஈமானை பரிசோதித்து அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிராகரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பிவிடாதீர்கள் என்ற கட்டளையை இவ்வத்தியாயத்தின் 10வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

“ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம். அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள். (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் – இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும். உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் – மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.” (60:10)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed