புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

‘இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும’. (அல்குர்ஆன் 2:185)

திரு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதே ரமழான் மாதத்தின் முக்கியமான சிறப்பம்சமாக விளங்குகிறது. அதனடிப்படைலே நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான்.

குர் ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து நன்மை கொடுக்கப்படும்.  அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (திர்மிதி)

அலிஃப், லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று இந்த சமுதாயம் தவறாக விளங்கிக் கொள்வார்களோ என்று அதை மூன்று எழுத்து என்று சிறு குழந்தைக்கு விளக்குவதை போல் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

மற்ற காலங்களைப்போல் அல்லாமல் ரமழான் மாதத்தில் அதிகமாக குர் ஆனை ஓதக்கூடியவர்களாக நாம் ஆக வேண்டும்.

பாங்கு சொன்னவுடன் (இகாமத் சொல்லும் வரை காத்திருக்காமல்) ஒழுச்செய்து பள்ளிவாசலுக்கு சென்று சுன்னத் தொழுதுவிட்டு, இகாமத் சொல்லும்வரை குர் ஆன ஓதுவதை வழக்கமாகக் கொள்ளலாம். ஒரு நேரத்துக்கு 15 நிமிடம் என்று வைத்துக் கொண்டால்,  5 நேரத்துக்கும் 75 நிமிடங்கள்.  ஒரு எழுத்துக்கு பத்து நனமை என்ற அடிப்படையில் (அல்லாஹ் நாடினால் 700 மற்றும் அதற்கு மேலும் தர வல்லவன்) 75 நிமிடங்களுக்கு….  அல்ஹம்துலில்லாஹ்.  நன்மைகளை மூட்டை கட்டிக்கொண்டு வந்து விடலாம்.

இந்த சுலபமான முறையை பின்பற்றி ரமழான் மாத்தில் குர் ஆனை ஓதி அதை பின்பற்றி நடக்கக்கூடியவர்களாகவும்,  பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களாகவும், இறைவன் நம் அனைவர்களையும் ஆக்கி அருள்வானாக.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

One thought on “புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed