குர்ஆனைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்

அல்லாஹ் தன் திருமறை அத்தியாயம் 2 வசனம் 185 -ல் கூறுகிறான்: –

“ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும், (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்துக்காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 44 வசனம் 58 -ல் கூறுகிறான்: –
“அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 -ல் கூறுகிறான்: –
“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 41 வசனங்கள் 2-4 -ல் கூறுகிறான்: –
“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 18 வசனங்கள் 1-3 -ல் கூறுகிறான்: –
“தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 18 வசனங்கள் 1-3 -ல் கூறுகிறான்: –
“(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்”

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறை வசனங்களில் இருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்னவெனில், குர்ஆன்:-

  • மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும்
  • நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும்
  • சத்திய, அசத்தியத்தைப் பிரித்துக்காட்டக் கூடியதாகவும்
  • அறிந்து நல்லுபதேசம் அளிப்பதாகவும்
  • ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும்
  • நேர்வழி காட்டியதாகவும்
  • ரஹ்மத்தாகவும்
  • முஸ்லிம்களுக்கு நன்மாராயம் கூறுவதாகவும்
  • அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாகவும்
  • அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும்
  • இது கீர்த்தியளிக்கும் உபதேசமாகவும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் “(இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள”் என அல்லாஹ் கூறுகிறான். எனவே சகோதர சகோதரிகளே, நாம் திருக்குர்ஆனை ஓதும் போது சடங்கு சம்பிரதாயங்களுக்காக ஓதிக்கொண்டிருக்காமல் அதனுடைய பொருள் அறிந்து ஓதுவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் திருமறை நமக்கு கற்றுத்தரும் வழிமுறைகளையும் உபதேசங்களையும் நாம் பின்பற்றி நடக்க முடியும்.

நபி (ஸல்} அவர்கள் கூறினார்கள்: –

‘குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுங்கள்; அது மறுமையில் பரிந்துரை செய்யும்”

“உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஓன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்), மற்றொன்று என்னுடைய வழிமுறை (சுன்னத்-ஹதீஸ்). இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீகள்”.

மேற்கண்ட ஹதீஸின் இறுதியில் நபி (ஸல்) அவாகள் கூறியதை நாம் சற்று சிந்தித்துப் பாக்க வேண்டும். “இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள்” என்று கூறியிருக்கிறாகள். இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகிய இவ்விரண்டையும் தவிர்த்து மற்றவைகளையெல்லாம் பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றோம். திருக்குர்ஆனை சடங்கு சம்பிரதாயங்களுக்காவும், ஹத்தம், பாத்திஹா ஓதுவதற்காகவும் தான் பயன்படுத்துகிறமே தவிர குர்ஆன் என்பது நாம் எப்படி வாழவேண்டும் என்று அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய சட்டதிட்டங்கள் என்பதை உணர்வதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமறை வசனங்களில் மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான வசனங்களில் அல்லாஹ்வின் திருமறையை பின்பற்றி வாழவேண்டும் என வலியுறுத்துகிறான்.

– அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் – (39:9)
– கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் – (34:6)
– குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நன்பனாக்கப்படுவான் – (43:36-39)
– குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் – (42:52)
– குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது – (45:20)
– குர்ஆன் நம்பிக்கையாளாகளுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது – (45:20 , 27:77)
– குர்ஆன் நேர்வழி காட்டுகிறது – (17:9 , 46:30 , 45:11)
– குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது – (27:2)
– குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது – (41:4 , 44:3)
– குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது – (50:8)
– குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது – (50:8 , 81:27-28)
– குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது – (50:37)
– குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது – (41:3)
– குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் – (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
– குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது – (86:13-14)
– குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் – (41:44)
– குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீனான வார்த்தைகளைக் கொண்டது இல்லை – (86:13-14)
– குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை – (2:2)
– பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் – (2:2)
– தெளிவான வசனங்களை இறக்கியிருக்கின்றோம்: பாவிகளைத் தவிர வேறெவரும் அவற்றை நிராகரிக்க மாட்டார்கள் – (2:99)
– அல்லாஹ் இறக்கியருளியதின் பால் வாருங்கள் என்று கூறப்பட்டால், எங்கள் தந்தையரைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறர்ாகள் – (5:104)
– குர்ஆனைப் பின்பற்றுங்கள் என்று கூறினால் எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள் – (2:170)
– எந்தவித ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் வசனங்களைப்பற்றித் தர்க்கம் செய்யக்கூடாது – (40:35 , 40:56 , 40:69 , 42:35)

எனவே சகோதர, சகோதாகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புவானாகவும். ஆமீன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed