அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு

அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும்.

இந்த அணு என்பதே மிகச்சிறிய பொருள் என்றும், இதை யாராலும் பிளக்க முடியாது என்ற தத்துவத்தை 23 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறியவர் டெமாக்ரேட்ஸ் (Democritus) என்ற கிரேக்க அறிஞர். அரபுலகிலும் சரி உலகின் மற்ற பாகங்களிலும் சரி இந்தக் கொள்கையே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அறிவியலின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட இக்காலத்து விஞ்ஞான உலகம், ஓர் அணுவை எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள் என பிரிக்க முடியும் என்று நிரூபித்து விட்டனர்.atoms partsw

அணு என்பதற்கு அரபியில் ‘ஜர்ரா‘ என்று அழைக்கப்படுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் இந்த அணுவை விடச் சிறிய பொருட்களும் உண்டு என கூறியிருப்பின் இது நமக்கு எல்லோருக்கும் ஆச்சரியமளிக்காதா என்ன? ஆம் திருக்குர்ஆன் இந்த உண்மையையும் கூறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: –

“எனினும் நிராகரிப்பவர்கள் ‘(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது‘ என்று கூறுகிறார்கள். அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன். வானங்களிலோ பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது. இன்னும் அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹூல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக” (அல்குர்ஆன்: 34:3, 10:61.)

இவ்வசனத்தில் அணுவை விடச் சிறியதோ அல்லது பெரியதோ என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் அணுவைவிட சிறிய பொருட்களும் உண்டு என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை கூறியிருப்பதை நாம் அறியலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed