விலகாமல் செல்லும் கோள்கள்

பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன.

பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலம் (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியும் இன்னும் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், நெப்டியூன், புளுட்டோ, சனி போன்ற கோள்களும் அவற்றிற்கு பல சந்திரன்களும் இருக்கின்றன.Milky Way Galaxy

இந்த சந்திரன்கள் கோள்களின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. கோள்கள் சூரியனின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் விண்ணடுக்குகளில் காணப்படும் ஈர்ப்பாற்றலால் அந்த விண்ணடுக்குகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்கின்றன. நமது பூமி, சந்திரனை சூரியக் குடும்பத்திலிருந்து விலகி சென்றிடாமல் பாதுகாப்பாக தடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பாற்றல்கள் என்றுமே மாறாத (Constant) தன்மையுடையதா என்றால் இல்லை என்றே நவீன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஈர்ப்பாற்றல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கக் கூடியது. பின்னர் அவைகள் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஈர்ப்பாற்றலில் மாற்றம் ஏற்படும் என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால்,

வானம், பூமியைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றைப் படைத்த இறைவன் உருவாக்கியிருக்கும் ஈர்ப்பாற்றல் தான்.Solar System Planets

அல்லாஹ்வால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஈர்ப்பாற்றலை, அல்லாஹ் நீக்கி விட்டால் அல்லது அதில் அவன் மாற்றத்தை ஏற்படுத்தினால் வானங்கள், பூமி இவைகள் ஒன்றோடொன்றிலிருந்து விலகி சென்று விடும். அதை தடுத்து நிறுத்த வேறு யாராலும் முடியாது.

அல்லாஹ் கூறுகிறான்: –

“நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன்: 35:42)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “விலகாமல் செல்லும் கோள்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed