இஸ்லாம் கூறும் ஆண், பெண் சமத்துவம்

உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.

– பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது!

– கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது!

– பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும் அவர்களை உயிருடன் புதைத்து வந்த போது! (இன்றளவும் இது சிலரிடையே தொடர்கிறது)

– உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் என கிரேக்க தத்துவம் கூறிய போது!

– பெண்களுக்கு சொத்துரிமை இல்லை! ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது! (எண்ணாகமம் 27:8)

– மனிதனின் முதல் பாவத்திற்கு காரணம் பெண்ணே எனவும் அதனால் பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (ஆதியாகமம் 3:16)

– பெற்றோர்களே தங்களின் புதல்விகளை அடிமைகளாக விற்கலாம் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (யாத்திராகமம் 21:7-8)

– பெண் குழந்தை பிறந்தால் அது “பெரிய இழப்பு” என்று சில வேத வசனம் கூறுகின்ற போது! (Ecclesiasticus 22:3 From New Jerusalem Bible)

– பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் ஆண்கள் அவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என சில வேத வசனம் வலியுறுத்தும் போது! (வெளி 14:4)

– ஒரு பெண், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 7 நாட்கள் தீட்டுபட்டிருக்க வேண்டும்! அதே நேரத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 14 நாட்கள் தீட்டுபட்டிருப்பாள் என்று கூறி பெண் இனத்தையே இழிவு படுத்துகிறபோது! (லேவியராகமம் 12:2-5)

– ஒருவரின் மனைவியை அவன் கண் முண்ணாலேயும், பொதுமக்ககள் மற்றும் சூரியனுக்கு முன்னிலையிலும் அடுத்தவர் அனுபவிக்க சில வேத வசனம் ஆணை பிறப்பிக்கும் போதும்! (II சாமுவேல் 12:11-14)

– பெண்கள் சபைகளிலே வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும்! சந்தேகங்கள் இருப்பினும் கேள்விகள் கேட்காமல் தத்தம் கனவன்மார்களிடத்தில் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்று சில வேத வசனம் கட்டளையிடுகின்ற போது! (I கொரிந்தியர் 14:34-35-புதிய ஏற்பாடு)

– போரிடும் ஒருவருக்கு அவருடைய மனைவி உதவி செய்தால் உதவி செய்த மனைவியின் கைகளை வெட்டுமாறு சில வேத வசனம் கட்டளையிடும் போது! (உபாகமம் 25:11-12)

– பெண்களையும், சிறுவர் சிறுமியர் மற்றும் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்க சில வேத வசனங்கள் ஆணையிடும் போது! (நியாயாதிபதிகள் 21:8-12)

– பெண்களை விபச்சாரிகளாகவும், அடிமைகளாகவும் நினைத்திருந்த போது! மேலும் மேற்கத்திய சமூகம் இன்றளவும் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கின்ற போது!

– தங்களின் சரக்குகளை சந்தையிலே விற்பதற்கு விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் கவர்ச்சிகரமான காட்சிப் பொருளாக பெண்களைப் பயன்படுத்துகின்ற போதும்!

இஸ்லாம் மட்டுமே,

– பெண்களும் ஆண்களைப் போலவே கடவுளின் படைப்புகள் என்று கூறியது!

– பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உரிமைகள் இருக்கிறது என்று கூறியது!

– பெண்களை கண்ணியப்படுத்தி கவுரவித்தது!

– பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கியது!

– ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை அளித்தது!

– பெண்கள் தங்களின் சொத்துக்களைத் தாமே நிர்வகித்துக்கொள்ளும் அதிகாரம் வழங்கியது!

இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாதவர்கள், தரமிழந்த தங்களின் கொள்கைகளை தாங்கிப் பிடிக்க இயலாதவர்கள் மற்றும் தங்களுடைய வேதங்களின் அடிப்படையில் பெண்களை தாம் இழிவு படுத்தியதையும் மேலும் இன்றளவும் தங்களுடைய வேதப் புத்தகங்களின் மூலம் பெண்கள் இழிவு படுத்தப்படுவதையும் மறைத்து விட்டு, பெண்களை கண்ணியப்படுத்தி கவுரவித்துக் கொண்டிருக்கும் தூய இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுகின்றனர்.

ஆனால் சத்திய இஸ்லாமோ இவர்களின் இத்தகைய பொய் பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் மீறி அவர்கள் பெரும்பாண்மையாக இருக்கின்ற அவர்களுடைய நாடுகளிலேயே படுவேகமாக, அதுவும் குறிப்பாக பெண்கள் மத்தியிலே அதி வேகமாக வளர்கின்றது. காரணம் இஸ்லாம் என்பது இந்த வையகத்திலிலுள்ள ஆண், பெண் அனைவரும் ஈடேற்றம் பெற ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாகும். அதனால் தான் ஆண், பெண் சமத்துவ மிக்க இந்த சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி பெண்களின் படையெடுப்பு நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்தே படைக்கப்பட்டார்கள்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:1)

பெண் குழந்தை பிறந்தால் அதன் மீது வெறுப்புக் கொள்ளக் கூடாது என்கிறது இஸ்லாம்!

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (அல்-குர்ஆன் 16:58-59)

நெருங்கிய உறவினர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பங்கு உண்டு: –

அல்லாஹ் கூறுகிறான்: –

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்-குர்ஆன் 4:7)

அடிமைப் பெண்ணுக்கு கூட கல்வி கற்பித்து, திருமணம் செய்வித்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம்!

‘தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

இறைவனின் மன்னிப்பு மற்றும் நற்கூலி ஆண், பெண்களுக்கு பொதுவானது, அதில் பாகுபாடு இல்லை: –

அல்லாஹ் கூறுகிறான்: –

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்-குர்ஆன் 33:35)

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:97)

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்-குர்ஆன் 4:124)

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; ‘உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்’ (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு. (அல்-குர்ஆன் 3:195)

சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “இஸ்லாம் கூறும் ஆண், பெண் சமத்துவம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed