நோன்பு திறக்கும் போது எந்த துஆவை ஓதவேண்டும்? – Audio/Video

நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 20-08-2008

இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 467 KB}

வீடியோ : (Download) {FLV format – Size : 2.93 MB}

தொடர்புடைய ஆக்கங்கள்:

மற்றவர்களுக்கு அனுப்ப...

4 comments

 • முபாரக் அலி (மலேசியா)

  இந்த துஆவும் பலவீனமான அறிவிப்பென்று படித்தேன். அது பற்றி விளக்க முடியுமா?

  • அன்வர்தீன்

   அஸ்ஸலாமு அலைக்கும் சகோ முபாரக் அலி
   இந்த துஆ ஸஹீஹான அறிவிப்பு என்று தான் இதுவரை அறியப்பட்டுள்ளது. பலவீனமான அறிவிப்பென்று படித்த தாங்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும். நீங்கள் எங்கு படித்தீர்கள்? பலவீனமானது என்பது யாருடைய கருத்து போன்றவற்றை அறியத்தாருங்கள்.

 • mimismath

  ‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

  பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)’ பின்வரும் காரணங்களினால் ஆதாரபூர்வமற்றதாகும்.

  ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் நேரம் ‘தஹபழ்ழமஉ, வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அழ்ழாஹ்’ எனும் பிரார்த்தனையை ஓதுபவர்களாக இருந்தார்கள்.’ (நூற்கள்: அபூதாவூத்-2359, தாரகுத்னி-25, சுனனுன் நஸாயி-3329, ஹாகிம்-1536)

  இந்த ஹதீதில் இடம்பெறும் ‘மர்வான் பின் ஸாலிம் அல் முகப்பஃ’ என்பவர் இனங்காணப்படாத ஒரு அறிவிப்பாளராகும். இவரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைத் தவிர வேறு எந்த அறிஞரும் நம்பகமானவர் என்று குறிப்பிடப்படவில்லை.

  இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைப் பொறுத்தமட்டில் அறிவிப்பாளர்களை நம்பகப்படுத்தும் விடயத்தில் கவன யீனமானவர் என விமர்சிக்கப்பட்டவராகும். காரணம் அவர் இனங்காணப்படாத அறிவிப்பாளர்களைக் கூட நம்பகமானவர்கள் என சொல்லும் வழக்கமுடையவர். ஏனெனில் அவரிடத்தில் நம்பகமானவர் என்பதற்கு வரைவிலக்கணம் ‘எவரிலே விமர்சனம் கூறப்படவில்லையோ அவர் நம்பகமானவர்’ என்பதாகும்.

  உதாரணத்திற்கு ரஹீம் என்ற மனிதர் ஒரு ஹதீதை அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி ஹதீத் துறை அறிஞர்கள் நல்லபிப்பிராயம் கொண்டுள்ளனரா? அல்லது கெட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனரா? என்று பார்ப்போம். நல்லபிப்பிரா யங்கள் கொண்டிருந்தால் நம்பகமானவர் என தீர்ப்புச் சொல்லப்படும்.

  தீய அபிப்பிராயங்கள் கொண்டிருந்தால் பலவீனமானவர் என தீர்ப்புச்சொல்லப்படும். இரண்டுமே இல்லாவிட்டால் ரஹீம் என்பவரை ‘இனங்காணப்படாதவர்’ என அழைப்போம். இதுதான் இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர உள்ள அனைத்து அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

  ஆனால் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களோ ‘யார் என்றே அறியப்படாத ரஹீமையும் நம்பகமானவர் என்றுதான் குறிப்பிடுவார். இதே நிலைதான் குறித்த செய்தியில் இடம்பெறும் ‘மர்வான் பின் ஸாலிம் அல் முகப்பஃ’ என்பவரின் நிலையுமாகும். அவரை எவரும் புகழ்ந்து கூறியதும் இல்லை. இகழ்ந்து கூறியதும் இல்லை. எனவே இப்படிப்பட்ட அறிவிப்பாளரைத்தான் ஹதீத் துறை சார் அறிஞர்கள் ‘இனங்காணப்படாத அறிவிப்பாளர்’ என்று அழைப்பர். எனினும் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் மாத்திரம் இவரை நம்பகப்படுத்தியிருப்பதானது அவர்களது கவனயீனத்தை தெளிவாக எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

  மேலே நாம் குறிப்பிட்டவற்றிற்கப்பால் குறித்த ‘மர்வான் இப்னு ஸாலிம்’ என்ற அறிவிப்பாளரை இனங்காணுவதில் ஹாகிம் தஹபி போன்ற அறிஞர்கள் தவறிழைத்துள்ளனர். (அழ்ழாஹ் அவர்களின் நல்லெண்ணங்களுக்கும் தேடலுக்கும் நற்கூலிகளை வழங்க வேண்டும்).

  இதனால்தான் ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறுகின்ற நம்பகமான ‘மர்வான் அல் அஸ்பர்’ என்ற அறிவிப்பாளர்தான் என அவ்விருவரும் தவறுதலாக கருதிவிட்டனர்.

  இவ்வாறு சகோதரர் ஒருவர் http://islamkuralblog.blogspot.com/2010/08/blog-post.html எனும் இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்

  இதன் நிலையை பற்றி விளக்கமளிக்கவும்

 • ashiq

  neengal melai ullathukku ethuvym sollavillai so please tell me intha dua saheeha or laeafa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *