நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டியதன் அவசியம்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

‘இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்’ (அல்குர்ஆன் 33:56)

ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ”உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்” என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ).

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து: –

ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே உங்கள் மீது ‘ஸலாம்’ உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ‘ஸலவாத்’ சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ‘அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்’ எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

ஸலவாத்தின் பொருள்: “இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய்”

பித்அத்தான ஸலவாத்துகள்: –

நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்து கூறுவது என்பது இறைவனின் கட்டளையாகும். எனவே அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எவ்வாறு கற்றுத் தந்தார்களோ அதன்படி தான் நாம் ஸலவாத்து கூறவேண்டும்.

இன்று நமது சமுதாயத்தவர்களால் பரவலாக ஓதி வரப்படும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்துக்கள் அனைத்தும் பித்அத்தான ஸலவாத்து ஆகும். இவற்றை நாம் தவிர்த்து நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கூறிய ஸவாத்தையே கூறவேண்டும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)இ ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed