அல்லாஹ்வின் பண்புகளுக்கு சுய விளக்கம் கூறுபவரின் பின்னால் தொழலாமா?

“அல்லாஹ் வானத்திலும் பூமியிலும் இருக்கிறான்” என்று கூறக் கூடியவனின் பின்னால் தொழமுடியுமா?

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா

தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 13 : அல்லாஹ் வானத்திலும் பூமியிலும் இருக்கிறான் என்றும், பூமியில் அவன் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது ஏதோ ஒரு பயத்தின் காரணத்தால் என்று சொலலக் கூடியவனின் பின்னால் தொழமுடியுமா?

பதில் : ஸுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்பவர்களின் கொள்கை யாதெனில், அல்லாஹ் அனைத்து படைப்பினங்களுக்கு மேல் உள்ளான். அல்லாஹ் அர்ஷின் மீது அவனது கண்ணியத்திற்கேற்ப உள்ளான் என்பதாகும்.

அல்லாஹ் திருமறையில்,

“அல்லாஹ் (தன் கண்ணியத்தற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான்’ (தாஹா: 5).

‘வானங்களிலுள்ளவைகளும், பூமியிலுள்ளவைகளும் அவனுக்கே உரியவையாகும், (யாவரையும் விட) அவனே மிக்க உயர்வானவன், மிக மகத்தானவன்’ (அஷ்ஷுரா: 4).

‘மேலும் அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன், அன்றியும் அவனே தீர்க்கமான அறிவுடையவன், (யாவையும்) நன்கு உணர்பவன்’ (அல் அன்ஆம் : 18).

ஈஸா நபியைப் பற்றி சொல்லும் போது

‘அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்’ (4: 158).

அவன் வானத்திலும், பூமியிலும்’ இதன் மூலம் பொருள் கொள்வது படைப்பினங்களைச் சூழ அவனது ஞானம் இருப்பதென்பதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

‘நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் இருக்கிறான்'”

‘அல்லாஹ் தனது தாத்துடன் பூமயில் இருக்கிறான்’ என எவன் நம்பிக்கைக் கொள்கிறானோ அது குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும், ஏகோபித்த முடிவுக்கும் மாற்றமானதாகும். இது ‘ஹலூலியா’ என்ற பிரிவினரின் கொள்கையாகும். அவர்கள் அல்லாஹ் அனைத்து இடங்களிலும் அல்லாஹ் இருப்பதாக பலர் தவறான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எவர் அறியாமையில் இவ்வாறு கூறுகிறாரோ அவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்த முயல வேண்டும். எவர் தெரிந்து இவ்வாறு கூறுவாரோ அவன் நிராகரிப்பாளனாகக் கருதப்படுவான். அவனுக்குப் பின்னால் தொழுவது கூடாது, அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed