பள்ளிக்கு செல்லும் போது இகாமத் சொல்லப்பட்டு விட்டால் விரைந்து சென்று தொழவேண்டுமா?

அபூ கதாதா(ரலி) அறிவித்தார்கள்: –

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)” என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ‘(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்’ என்று பதில் கூறினர். ‘அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: –

“நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: –

“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

You missed