தொழுகையை முறிக்கும் செயல்கள்

தொழுகையை முறிக்கும் செயல்களின் எண்ணிக்கையில் அறிஞர்களுக்கிடையில் வேறுபாடுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பின்வரும் செயல்கள் தொழுகையை முறிக்கும் என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

1) உளுவை முறிக்கும் அனைத்துச் செயல்களும் தொழுகையையும் முறிக்கும். (உதாரணங்கள் : காற்றுப் பிரிதல், ஒட்டக இறைச்சி உண்ணுதல், மல ஜலம் வெளியாகுதல் …)

2) மர்மஸ் தானங்களை வேண்டுமென்றே திறந்து வைத்தல். வேண்டுமென்றில்லாமல் எதேச்சையாக நிகழ்ந்து உடனடியாக அவர் அதை சரி செய்து விட்டால் தவறில்லை.

3) கிப்லாவின் திசையல்லாமல் வேறு திசையை நோக்கியிருத்தல்

4) உடலிலோ, ஆடையிலோ அல்லது தொழுமிடத்திலோ அசுத்தம் இருத்தல். ஒருவர் தொழுகையில் அசுத்தத்தைக் கவனித்து உடனடியாக அதை நீக்கி விட்டால் தவறில்லை. தொழுது முடித்த பிறகு தான் அவருக்குத் தெரிய வந்தது என்றாலும் அவருடைய தொழுகை கூடும்.

5) தேவையில்லாத அதிகப்படியான உடலசைவுகள்.

6) ருகூவு, சஜ்தா போன்ற தொழுகையின் முக்கிய கடமைகளை விட்டுவிடுதல்

7) வேண்டுமென்றே அதிகப்படியான தொழுகையின் கடமையான செயல்களைச் செய்தல் (உதாரணம் : அதிகப்படியான ருகூவு செய்தல்)

8.) வேண்டுமென்றே தொழுகையின் கடமையான செயல்களை முன் பின் முரணாக மாற்றிச் செய்தல்

9) தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்னரே வேண்டுமென்றே சலாம் கொடுத்தல்

10) வேண்டுமென்றே குர்ஆனை தவறாக ஓதுதல்

11) வேண்டுமென்றே தஸஹ்ஹூத் போன்ற தொழுகையின் முக்கிய கடமையினை விட்டுவிடுதல். மறதியில் விட்டிருப்பின் சஜ்தா ஸஹவு செய்ய வேண்டும்.

12) தொழுகையை விடுவதாக தீர்மானித்தல்

13) வேகமா சிரிப்பது (வெடிசிரிப்பு). இலேசாக புன்னகைப்பதால் தொழுகை முறியாது.

14) வேண்டுமென்றே பேசுவது. ஒருவர் தவறுதலாகவோ அல்லது அறியாமையினாலோ பேசிவிட்டால் பரவாயில்லை.

15) சாப்பிடுவது மற்றும் குடிப்பது.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

You missed