தொழுகையில் ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

நம்முடைய தொழுகைகளின் போது சில நேரங்களில் ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ஏற்பட்டு அது குர்ஆன் ஒதுவதில் பிரச்சனையாகி அதன் மூலம் தீய எண்ணங்கள் உண்டாகி எத்தனை ரக் அத்துகள் தொழுதோம் என்று கூட சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது! ஷைத்தானின் ஊசலாட்டங்கள் எந்த அளவுக்கு நம்மை பாதிக்கும் என்றால் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் தொழும் போது கூட எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்ற சந்தேகத்தைக் கிளப்புவான்.

இது போன்ற ஒரு சம்பவம் உதுமான் பின் அபீ அல் ஆஸ் (ரலி) என்ற நபித் தோழருக்கு ஏற்பட்டது. ஆகையால் அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் “நான் தொழும் போது எனக்கும் என் தொழுகைகும் இடையில் ஷைத்தான் வந்து நான் குர்ஆன் ஒதுவதில் பிரச்சனையை உண்டாக்குகிறான்” என்று கூறினார்கள்.

அதற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த ஷைத்தானுக்கு பெயர் “கன்ஜப்” என்று கூறினார்கள். அவன் அவ்வாறு தொழுகையின் இடையூறு செய்தால் “ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறி இடது பக்கமாக முகத்தை திருப்பி மூன்று முறை துப்பிக்கொள்” என்று கூறினார்கள். (இதை தொடர்ந்து) அவர், “நான் இந்த முறையை பின் பற்றிய போது அல்லாஹ் ஷைத்தானை என்னை விட்டும் தூரமாக்கி விட்டான்” கூறினார்.

இந்த ஹதீஸ் இரண்டு முறையில் ஷைத்தானை விரட்டுகிறது.

முதலாவதாக “ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று நாவினால் மொழிவதன் மூலமாக.

இரண்டாவதாக இடது புறம் மூன்று முறை துப்புவதன் மூலம். இது துப்பும் போது காற்றை வெளியாக்குவது போலாகும். ஆனால் பக்கத்தில் தொழுபவருக்கு தொந்தரவு இல்லாமலோ அல்லது பள்ளிவாசலை அசுத்தமாக்காமலோ துப்பும்போது சிறிய அளவு எச்சில் துகள்கள் வந்தால் தவறு ஏதும் இல்லை.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

You missed