இரு இதழ் பூ – கவிதை

பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்?
பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா?
பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா?

புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்!
ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்!

‘பூக்களை வெறுக்காதீர்’ எங்கோ நான் படித்த வரிகள்!
எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?
கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா?
பறித்த பூக்களையா? யாரும் பறிக்கா பூவையர் பூக்களையா?

ஒரு கொடியிலிருந்து உதிர்ந்த பூ இன்னுமோர் கொடியின் கூந்தலிலே மலரும்!

‘பூ’ இரு பாலாரும் பரவசத்துடன் சூடிக் கொள்ளும் ஒன்றாகும்.
ஆனால் – ஆண்கள் சூடிக் கொள்ளும் பூ வேறு!
பெண்கள் சூடிக் கொள்ளும் பூ வேறு!

பல பூக்கள் நாரோடு ஒட்டி உறவாடும் போதெல்லாம் அதிசயிக்கும் கவர்ச்சி தந்து கண்ணைக் கவரும்!
பல பூக்களோடு நாறியவர்கள் உறவாடும் போதெல்லாம் – அங்கே
அசிங்கமான கவர்ச்சிகள் கண்ணை உறுத்தும்!

கூந்தலில் விழுந்த பூக்கள் வாடும் போதெல்லாம்
கூந்தல் கொடுத்த பூக்கள் இதழ் விரிக்கின்றன!
சில பூக்கள் அஸ்தமமாகும் நேரங்களில் தான்
சில பூக்கள் இதழ் விரிதாடுகின்றன!

சிகப்பு ரோஜாக்கள் கொடியிலே இருக்கும் போது எத்தனை அழகு!
ஆனால் – சில ரோஜாக்கள் சிகப்பாய் மாறும் போது, இராக் காலங்களில் வீதியோரங்களில் கசங்கிக் கிடக்கின்றன!

கொடியிலே இருக்கும் வரைதான் பூக்களுக்கு மதிப்பு, அது சாலையிலே உதிர்ந்து விட்டால் வெரும் சருகு!

இரு இதழ் பூவுக்கு இல்லையேல் இறையச்சம் வாழ்க்கையிலே எச்சாது மீதி மிச்சம்!
ஏன்றென்றும் வழி தவறும் பட்சம்
ஈருலக வாழ்க்கையும் தரும் பெரும் அச்சம்!

பூவே! ஹிஜாபிட்டு உன்னை அலங்கரித்துக் கொள்
அது – ஹிமாலயா வரைக்கும் உன்னை உயர்த்தும்!

மனிதா! வசந்தம் தரும் பூக்களை நடு!
உன்னைச் சுற்றி ஒரு பூங்காவனமே இருப்பதாய் உணர்வாய்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

One thought on “இரு இதழ் பூ – கவிதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed