அறிவுடையோரின் பிரார்த்தனைகள்

“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து,

‘எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!’ (என்றும்;)

‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;

மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!’ (என்றும்;)

‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்;

‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!

எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக;

இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!’ (என்றும்;)

‘எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக!

கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக!

நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல!

(என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்). (அல்-குர்ஆன் 3:190-194)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “அறிவுடையோரின் பிரார்த்தனைகள்”
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்காக தங்களின் இந்த முயற்சி இறைவனின் அங்கீகாரம் பெற்று அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்களாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சிறந்த கூலியை தர இறைவனிடம் பிராத்திக்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed