திரித்துவம் – பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது?

அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஒரே இறைவனுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகுக!

இறைவன் எண்ணற்ற படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பினமாக மனித இனத்தைப் படைத்து அவர்களுக்கு வாழ்வியல் முறையை பயிற்றுவிக்க பல தீர்க்கதரிசிகளையும் இறைவன் அனுப்பி வைத்தான். இறைவனின் வேதவாக்கைப் பெற்ற அந்த தீர்க்கதரிசிகள் மனிதர்களுக்கு தேவையான வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒரே இறைவனை வணங்க வேண்டுமென்ற இறை கட்டளையையும் போதித்து வந்தார்கள். ஒவ்வொரு தீர்க்க தரிசிக்கும் இடையில் மனிதர்கள் வழி தவறும் போதெல்லாம் புதிய தீர்க்கதரிசிகளை இறைவன் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த வகையில் நோவா, ஆப்ரஹாம், பாக்கோபு, ஜோசப், மோஸஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் வரிசையில் வந்தவர் தான் இயேசு கிறிஸ்து ஆவார்.

இயேசு நாதரின் சீடர்களும் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களும் அவர் போதித்த தூய ஒர் இறைக் கொள்கையைத் தான் பின்பற்றினர். இவ்வாறு இந்த ஒர் இறைக்கொள்கையே கிறிஸ்தவக் கொள்கையாக மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. ஆனால் இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு 329 ஆண்டுகளுக்கு பிறகே எகிப்து நாட்டின் அலெக்ஸ்ஸாண்டரியா நகரைச் சேர்ந்த அதானாசியஸ் என்பவரால் கிறிஸ்தவர்கள் தற்போது பின்பற்றுகின்ற முக்கடவுள் கொள்கையான திரித்துவக் கொள்கை உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த திரித்துவக் கொள்கைக்கும் இயேசுநாதர் இறைவனிடமிருந்து பெற்று தன் சீடர்களுக்கு போதித்த உண்மையான கிறிஸ்துவக் கொள்கைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.

கிறிஸ்தவ மதத்தில் இந்த திரித்துவக் கொள்கை ஊடுருவியதில் ரோமர்களின் மூடக் கொள்கையைப் பின்பற்றியவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கு உதாரணங்களாகப் பின்வருபவற்றைக் கூறலாம் .

– இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய கிறிஸ்தவர்களின் புனித வார நாளாகிய சனிக்கிழமையை மாற்றி ஞாயிற்றுக் கிழமையை புனித நாளாக அறிவித்தார்கள்.

– அறியாமைக் கால ரோமர்களின் சூரியக் கடவுளான மித்ராவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதியை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக ஆக்கினார்.

உண்மை என்னவென்றால் பைபிளின் ஜெர்மியா 10:2-5, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து கொண்டாடுவதற்கு தடை விதிக்கிறது. ஆனால் கிறிஸ்துமஸ் மரம் வைத்து கொண்டாடாத கிறிஸ்தவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் கொண்டாடுகின்றனர்.

“புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஜெர்மியா 10:2-5)

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற தற்போதைய கிறிஸ்தவம் இயேசு நாதரின் போதனைகளுக்கு முற்றிலும் புறம்பானது என்பதை நாம் உணரலாம். ஏனென்றால் இயேசு நாதரின் போதனைகளான

 • பன்றியின் மாமிசத்தை உண்ணக் கூடாது
 • அனைவரும் விருத்த சேதனம் செய்ய வேண்டும்

போன்றவைகளை பவுல் அடியார் நீக்கிவிட்டு தமது கருத்தைச் சேர்த்துவிட்டார்.

“இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (கலாத்தியர் 5:2)

இதுபோல தான் இயேசுவிற்குப் பிறகு வந்தவர்களால் ‘கிறிஸ்தவ மதத்தில் திரித்துவ கொள்கை புகுத்தப்பட்டது’ என்பதை அறிய முடிகிறது. ‘திரித்துவம்’ தான் உண்மையான கிறிஸ்தவம் என்றால் இதை இயேசு நாதர் வலியுறுத்தி போதனை செய்திருக்க வேண்டும்.

மேலும் இதைப் பற்றி பைபிளின் எங்கேயாவது ஒர் இடத்தில் குறிப்பிடபட்டிருக்க வேண்டும். ஆனால் பைபிள் இந்த திரித்துவக் கோட்பாட்டைப் பற்றி ஒன்றுமே கூறாதது மட்டுமல்லாமல் இந்த திரித்துவக் கொள்கைக்கே எதிரான பல வசனங்களைக் கூறுவதை நாம் காணமுடிகிறது. இருப்பினும் உலகின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்ற இந்தக் கொள்கையைத் தக்க வைப்பதற்காக கிறிஸ்தவ மிஷனரிகள் பைபிளிலிருந்து சில வசனங்களை ஆதாரமாகக் கூற முற்படுவர். இந்த சிறிய கட்டுரையில் திரித்துவத்திற்கு ஆதாரமாகக் கூறப்படும் அந்த வசனங்களை நாம் ஆராய்வோம்.

ஆதாரம்-1: –

“[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது” (I யோவான் 5-7-8)

மேற்கூறப்பட்ட வசனம் கி.பி. 1611 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட ‘கிங் ஜேம்ஸ் வெர்ஸன்’ (King James Version) பதிப்பு பைபிளிலும் அதையொட்டிய பிற மொழிபெயர்ப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த வசனமே கிறிஸ்தவர்களின் திரித்துவத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஆனால் 1971 ஆம் ஆண்டு வெளியான “ரிவைஸ்டு ஸ்டாண்டர்ட் வெர்ஸன்” (Revised Standard Version) மற்றும் பல பைபிள்களில் மேற்கூறப்பட்ட வசனங்கள் ‘இட்டுக்கட்டப்பட்டு பைபிளில் இடை செறுகப்பட்ட வசனங்கள்’ என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அறிஞர்களால் கூறப்பட்டு அந்த வசனங்களை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.

மேலும் மேற்கூறப்பட்ட I யோவான் 5:7-8 என்ற வசனங்கள் ‘நியூ அமெரிக்கன் ஸ்டான்டர்ட் பைபிள்’ (New American Standard Bible) மற்றும் ‘நியூ வேர்ல்ட் டிரான்ஸ்லேசன் ஆஃப் த ஹோலி ஸ்கிரிப்சர்ஸ்’ (New World Translation of the Holy Scriptures) என்ற பைபிள்களில் வெவ்வேறு விதமாக வருகிறது.

கிறிஸ்தவ அறிஞர்களால் மேற்கூறப்பட்ட வசனங்கள் ‘இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்டவை’ என்று நீக்கிய பின்னரும் சில கிறிஸ்தவ மிஷனரிகள் அதையே ஏன் போதிக்கின்றனர்? பைபிளிலே இல்லாத ஒன்றை இருப்பதாக எப்படி கருத முடியும்? எனவே இந்த வசனங்கள் திரித்துவத்திற்கு சான்றாக இருக்கிறது என்பதை அறிவுடைய எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆதாரம்-2: –

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:19)

இந்த வசனம் பைபிளிலிருந்து நீக்கப்படவில்லையே! திரித்துவத்திற்கு ஆதாரமாக இந்த வசனமும் இருக்கிறதே என்று சிலர் கூறலாம்.

சிந்திக்கின்ற எவரும் இதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள இயலாது. ‘மூன்று நபர்கள்’ ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டு ஒரு செயலைச் செய்வதாக ஒருவர் கூறினால் ‘அந்த மூன்று நபர்களும்’ எப்படி ‘ஒரு நபராக’ மாறமுடியும்? அது போல் தான் கிறிஸ்தவர்களின் இந்த வாதமும். ‘மூவரின்’ பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு அவர்கள் ‘மூவர் அல்ல’! மாறாக ‘ஒருவர்’ என்கின்றனர். எனவே இதுவும் அடிப்படையற்ற ஆதாரம் என்பதை விளங்க முடிகிறது. ‘திரித்துவம்’ என்பது ஒரு ‘மாயை’! ‘கற்பனை’ என்றுணர்ந்த கிறிஸ்தவ மிஷனரிகள் திரித்துவம் குறித்து கேள்வியெழுப்பும் கிறிஸ்தவர்களை எப்படியாவது தங்களின் மதத்திலேயே தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தேடியலைந்து பைபிளில் இருந்து மற்றும் சில ஆதாரங்களைக் கூறமுற்படுவர்.

ஆதாரம்-3: –

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்” (யோவான் 14:11)

இந்த வசனத்தையும் ஆதாரமாக ஏற்கமுடியாது. ஏனென்றால், கிறிஸ்தவ மிஷனரிகளின் கூற்றுப்படி ஒரு விவாதத்திற்காக இதை ஆதாரமாக ஏற்றுக் கொண்டால், இந்த வசனத்தில் இயேசு நாதர் பிதாவிலும் பிதா இயேசு நாதரிலும் இருப்பதாகக் கூறப்படுவதைப் போல இதே பைபிளின் மற்றுமொரு வசனத்தில் இயேசு நாதரின் சீடர்களும் பிதாவினிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறதே! அப்படியென்றால் தேவன் சீடர்களோடு சேர்த்து பதினைந்து பேர்களில் இருக்கிறாரா?

“அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:21)

ஆதாரம்-4: –

“அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? (யோவான் 14:9)

மேற்கண்ட வசனத்தில் ‘என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்’ என்று கூறப்பட்டுள்ளதே! அப்படியானால் இயேசுவும் பிதாவும் ஒன்று என்று தானே அர்த்தம் என சிலர் கூறுவர். இந்த வசனங்களின் கருத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் இதற்கு முந்தைய இருவசனங்களைப் படித்துப் பார்த்தால் இந்த வசனத்தின் உண்மையான பொருள் புரியும்.

“பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” (யோவான் 14:8-9)

அதாவது என் மூலமாகவே நீ பிதாவை அறிந்து கொள்வாய் என்பதே! இயேசுவின் கூறியவற்றின் பொருள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். ஒரு வாதத்திற்காக கிறிஸ்தவர்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டால், இது பைபின் மற்ற வசனங்களுக்கு முற்றிலும் முரண்படுவதைக் காணலாம்.

யோவான் 4:24 -ல் ‘தேவன் ஆவியானவர்’ என்றும், யோவான் 5:37 – ல் ‘நீங்கள் ஒருக்காலும் தேவனின் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளதே!

ஆவியானவரான, யாராலும் அவருடைய சத்தத்தைக் கேட்டிராத தேவனை இயேசு நாதரின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படி பார்த்திருக்க முடியும்? அப்படியென்றால் அவர்கள் பார்த்தது இயேசுவைத் தான் என்பது புலனாகிறதல்லவா? யோவானின் 14:9, ‘என்னைக் கண்டவர் பிதாவைக் கண்டார்’ என்ற வனத்திற்கு நீங்கள் கூறிய பொருளைக் கொண்டால் இந்த வசனங்கள் (யோவான் 4:24 & யோவான் 5:37) முற்றிலும் முரணாக அமைகிறதே!

“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” (யோவான் 5:37)

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்” (யோவான் 4:24)

மேலும் பவுல் அடியார் கூறுவதைப் பாருங்கள்: –

“ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (I தீமோத்தேயு 6:16)

இதையே இறைவன் தனது இறுதி வேதத்தில் கூறுகிறான்: –

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்-குர்ஆன் 6:103)

பரிசுத்த ஆவி என்பவர் யார்?

திரித்துவத்தைப் புரிந்துக் கொள்வதற்காக பின்வருபவற்றை விளக்குகிறோம். மத்தேயு 1:18 என்ன கூறுகிறது என்று பாருங்கள்: –

“இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது” (மத்தேயு 1:18)

இப்போது லூக்கா 1:26-27 வசனங்களைப் படித்துப் பார்ப்போம்!

“ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். (லூக்கா 1:26-27)

மேற்கண்ட வசனங்களைப் படிக்கும் போது, இயேசு கிறிஸ்துவின் அற்புதப் பிறப்பை பற்றி மத்தேயு கூறும் போது ‘பரிசுத்த ஆவியை’ யும் லூக்கா கூறும் போது ‘காபிரியேலையும்‘ குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் ‘பரிசுத்த ஆவி’ என்று கிறிஸ்தவர்களால் கூறப்படுகின்றவர் தேவ தூதன் ‘காபிரியேல்’ என்பதை அறிய முடிகிறது.

இறைவன் அனுப்பிய தேவ தூதர்கள் (மலக்குகள்) அன்னை மேரியிடம் வந்து அவருக்கு ஓர் ஆண்மகவு பிறக்க இருக்கும் நற்செய்தி கூறிய நிகழ்ச்சியை இறைவனின் இறுதி வேதம் இவ்வாறு கூறுகிறது:-

“(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (Angels),

“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்’ (என்று கூறினர்) (அல்-குர்ஆன் 3:42)

“மலக்குகள் கூறினார்கள்,

‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; ‘மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.’

(அச்சமயம் மர்யம்) கூறினார்,

‘என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?’

(அதற்கு) அவன் கூறினான்,

‘அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.’ இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)

எனவே எனதருமை கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகின்ற இந்த திரித்துவம் என்பது இயேசு நாதரால் போதிக்கப்பட்டதன்று! மாறாக இயேசு நாதருக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்வந்தவர்களாலே கிறிஸ்தவத்தில் தோற்றுவிக்க்பட்டது என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு இயேசு நாதர் போதித்த உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் சிதைவுற்று பவுல் மார்க்கம் உருவான போது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் அவனது இறுதி தீர்க்கதரிசியை அனுப்பி சத்தியமார்க்கத்தை நிலைநிறுத்தச் செய்தான். அந்த இறுதி தீர்க்கதரிசியான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அனுப்பிய இறுதி வேதத்தில்,

 • இறைவன் ஒருவனே!
 • அவன் யாரையும் பெறவுமில்லை என்றும்; யாராலும் பெறப்படவும் இல்லை என்றும்,
 • இயேசு நாதர் என்பவர், நோவா, ஆபிரஹாம், மோஸஸ் ஆகியோரின் வரிசையில் வந்த இறைவனின் தீர்க்கதரிசியேயன்றி வேறில்லை என்றும்,
 • கிறிஸ்தவர்கள் கூறுவது போல இறைவன் மூவரில் இருக்கிறான் என்று கூறுவது ஆகாது என்றும், அவ்வாறு கூறியவர் இறைவனை நிராகரித்தவர் போலாவார் என்றும்,
 • நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனை நிராகரித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கிறது என்றும்,
 • பரிசுத்த ஆவி (ரூஹ் என்னும் ஜிப்ரீல்) என்பவர் இறைவனின் தூதுச் செய்திகளை அவனது தீர்க்கதரிசிகளுக்கு எடுத்துவரும் ஒரு இறை தூதராவார் என்றும்,
 • முஹம்மது நபி (ஸல்) என்பவர் மேற்கூறப்பட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் வந்த இறுதியானவர் என்றும்,
 • முஸ்லிம்கள் என்பவர்கள் மேற்கூறப்பட்ட அனைத்தையும் உண்மை என்று ஏற்றுக் கொண்டவராவார் என்றும்

இறுதி வேதம் கூறுகிறது.

“(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை” (அல்-குர்ஆன் 112:1-4)

மேலும் விளக்கம் தர காத்திருக்கிறோம். தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும்!

1) கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் – திரித்துவம் (Trinity)! .
2) திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்!
3) பைபிள் கூறும் ஏகத்துவம்!

Hits: 609

மற்றவர்களுக்கு அனுப்ப...

15 comments

 • santhanam

  very nice your story
  (story is lie) and (histry is truth)
  bible not story its a histry
  please tell another lie story
  THANK YOU THANK YOU
  THANK YOU THANK YOU

 • Burhan

  சகோதரர் சந்தானம் அவர்களே!

  ஒரு விஷயத்தை உண்மை என்றோ பொய் என்றோ கூறுவதற்கு அதற்குரிய ஆதாரங்களின் அடிப்படையிலே கூறவேண்டும். இயேசு கிறிஸ்து போதிக்காத ஒன்றை அதுவும் மாபெரும் கற்பனையை அவரின் பெயரிலும் இறைவனின் பெயரிலும் கட்டவிழ்த்துவிட்டு, இயேசு தான் இறைவன்; இறைவன் தான் இயேசு என்று கூறுவது தான் மாபெரும் பொய்யாகத் தோன்றவில்லையா உங்களுக்கு? திரித்துவம் என்ற பெயரிலே பெரும்பாண்மை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கூற்றுக்கு ஏதாவது நேரடியான பைபிள் ஆதாரங்கள் இருக்கின்றனவா? நீங்கள் கூறுகின்ற ஆதாரங்கள் எல்லாம் கிறிஸ்தவக் கொள்கைக்கு எதிராகவே இருக்கின்றது என்பது இந்த கட்டுரையின் மூலம் தெளிவாகவே விளங்கிவிட்டதே!

  எனவே! உங்களின் கருத்தை வெறுமனே இது பொய் என்று கூறாமல் ஆதாரங்களின் அடிப்படையில் கூறினால் மற்றவர்களுக்கு புரிவதற்று ஏதுவாக இருக்கும்.

 • புர்ஹான்

  சகோதரர் ஸ்டீஃபன் அவர்களே!

  ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களின் மீது உண்டாவதாக!

  தாங்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறு அடங்கிய இணைய தளத்தின் சுட்டியை தந்துள்ளேன். தயவுசெய்து திறந்த மனத்துடன் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்களுக்கு மேற்கொண்டு தகவல்கள் வேண்டுமானாலும் தருவதற்கு தயாராக இருக்கின்றோம்.

  நூல் வடிவில் படிக்க:

  http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-2.html

  ஆடியோ (MP3) வடிவில் கேட்க, தரவிறக்கம் செய்ய:

  http://www.islamkalvi.com/portal/?p=1509

  அன்புடன்,
  புர்ஹான்.

  • christian

   engaludaya ore meiyaana devan Yesu Kristhuve thavira veroruval illai,

   Mele vanathilum, Keele pumiyilum veroru namam kodukkappadavum illai enbathai nee ariyayo…?

 • stephen

  அன்புள்ள சகோதரரே ,

  தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களுடனே இருப்பதாக , நாம் ஒரே தேவனின் பிள்ளைகளாக இருக்கிறோம் நமக்குள்ளே பிரிவினை இல்லாதிருப்பதாக , திரித்துவத்தை பற்றிய உங்களுடைய அர்டிகலை படித்தேன் , நீங்கள் குர்ஆன் வாசிக்கிறதிலே எவ்வளவு
  உண்மையோடு கனப்படுகிரீர்களோ ஆதே அளவுக்கு பரிசுத்த வேதாகமத்தை வசிக்க முற்படுங்கள் அப்பொழுது உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் பற்றியும் பிதாவாகிய தேவனை குறித்தும் குமாரனாகிய கிறிஸ்து இயேசு குறித்தும் முழு வெளிப்பாடு கிடைக்கும் ,
  உங்களுடைய முழு கூற்றும் ரோமன் கதொளிக்கவர்களை பற்றி காணப்படுகிறது இஸ்லாத்தில் சில பிரிவுகள் இருப்பது போல கிறிஸ்தவத்திலும் பிரிவுகள் இருக்கிறது , இஸ்லாத்தில் எல்லோரும் நீதியை கொண்டு(முஹம்மது நபி (ஸல்)போல ) நடக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா ,ஒருவரை ஒருவர் குறை கூறாமல் இருப்பதே தேவனுக்கு பிரியமான காரியமாக இருக்கிறது,
  நான் ஒரு பெண்டிகோஸ்ட் சபை விசுவாசியாக இருக்கிறேன் , தேவன் என் வாழ்கையிலும் என் குடும்பதிலும் அனேக அற்புதங்கள்
  செய்திருக்கிறார் நான் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவுக்குல் வந்தவன் , என் வாழ்வில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அற்புதங்களை பெற்றுள்ளேன் என் வயது 27 , வேதத்தை தினமும் ருசிக்கவும் தியானிக்கவும் கிறிஸ்து எங்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார் ,
  உங்களுடைய அர்டிகலில் மிக சில காரியங்கள் உண்மையாக இருந்தாலும் அனேக காரியங்கள் வேத தெளிவில்லாமல் நீங்கள் சொல்லி இருக்கிறதை காட்டுகிறது , நிச்சயமாய் தேவன் எனக்கு கொடுத்த பலத்த கிருபையின் படி ஒரு முழுமையான தெளிவை(ஆதாரத்துடன்) உங்களுக்கு எனது அடுத்த கடிதத்தில் தெரிவிக்கிறேன் , தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  நன்றி
  ஸ்டீபன்

 • mohamed fazal

  what is the bible says? jesus is god or is father ?

 • புர்ஹான்

  அன்பு சகோதர் ஸ்டீஃபன் அவர்களே!,

  இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகி இறைவனின் நேரிய வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆவலோடு துவங்குகின்றேன்.

  //தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களுடனே இருப்பதாக, நாம் ஒரே தேவனின் பிள்ளைகளாக இருக்கிறோம் நமக்குள்ளே பிரிவினை இல்லாதிருப்பதாக//

  சகோதரரின் உயர்ந்த நோக்கம் பாராட்டுக்குரியது. உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்களின் சந்ததியியில் வந்தவர்களே என்பதை இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது.

  2:213 (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

  //திரித்துவத்தை பற்றிய உங்களுடைய அர்டிகலை படித்தேன் , நீங்கள் குர்ஆன் வாசிக்கிறதிலே எவ்வளவு உண்மையோடு கனப்படுகிரீர்களோ ஆதே அளவுக்கு பரிசுத்த வேதாகமத்தை வசிக்க முற்படுங்கள் அப்பொழுது உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் பற்றியும் பிதாவாகிய தேவனை குறித்தும் குமாரனாகிய கிறிஸ்து இயேசு குறித்தும் முழு வெளிப்பாடு கிடைக்கும்//

  சகோதரரே! நான் வேதாகமத்தையும் வாசிப்பதால் தான் அதிலிருந்தும் என்னால் வசனங்களை குறிப்பிடமுடிகின்றது.மேலும் உலகில் இருக்கின்ற பல மதங்களிலே இயேசு கிறிஸ்துவின் மீதும் அவருக்கு கர்த்தரால் அருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை (விசுவாசம்) வைக்க கட்டளையிடுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். எனவே ஒருவர் திருக்குர்ஆனுக்கு முன்பாக இயேசு, மோசஸ் மற்றும் தாவீது போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இறைவன் புனிதவேதங்களை அருளினான் என்று விசுவாசம் கொள்ளவில்லையானால் அவன் முஸ்லிமாகவே இருக்கமுடியாது.

  இவ்வாறு முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு வேதங்கள் அருளப்பட்டன என்று விசுவாசம் வைக்கச் சொல்கின்ற அதே இறைவன் அவ்வேதங்கள் அருளப்பட்டதற்கு பிற்காலத்தில் வந்தவர்களால் அவைகள் எல்லாம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டது என்றும் சான்று பகர்கிறார். இதை நீங்கள் ஆதாரப்பூர்வமாக இன்று கண்கூடாக பார்க்கலாம். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பைபிளிலே எத்தனை எத்தனை வகைகள்! ஒரே வசனத்திற்கு அவையனைத்திலும் எத்தனை வேறுபாடுகள்! இவை அனைத்தும், இயேசுவுக்கு இறைவன் அருளிய வேதத்திலே மனிதக்கரங்கள் ஊடுருவி அவை மாசுபட்டிருக்கின்றன; அவை இறைவனால் அருளப்பட்டவாறே இல்லாமல் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது என்பதையே தெளிவாக விளக்குகின்றது.

  எனவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தீர்க்கதரிசிகளுக்கு இறைவன் அனுப்பிய வேதங்கள் மனிதர்களால் மாசுபடுத்தப்பட்ட பின்னர் அவ்வப்போது புதிய தீர்க்கதரிசிகளையும் அவர்களுக்கு வேதங்களையும் அனுப்பியவாறே இருந்தான். அந்த வகையில் அவன் அனுப்பிய இறுதி தூதர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். அவருக்கு இறைவன் அனுப்பிய வேதமே திருக்குர்ஆன். குர்ஆனை இறைவன் அனுப்பி அதை இறுதிநாள் வரை பாதுகாக்கும் பொறுப்பையும் அவனே ஏற்று அதை பாதுகாத்து வருகின்றான்.

  //உங்களுடைய முழு கூற்றும் ரோமன் கதொளிக்கவர்களை பற்றி காணப்படுகிறது இஸ்லாத்தில் சில பிரிவுகள் இருப்பது போல கிறிஸ்தவத்திலும் பிரிவுகள் இருக்கிறது, இஸ்லாத்தில் எல்லோரும் நீதியை கொண்டு (முஹம்மது நபி (ஸல்)போல) நடக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா, ஒருவரை ஒருவர் குறை கூறாமல் இருப்பதே தேவனுக்கு பிரியமான காரியமாக இருக்கிறது,//

  இஸ்லாம் பிரிவுகளை வன்மையாக கண்டிக்கின்றது. இறைவன் கூறுகின்றான்:

  “3:103 இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்”

  சகோதரரே! குர்ஆனின் இவ்வசனத்தில் இறைவனின் கயிற்றாகிய அல்குர்ஆனை வலுவாப் பற்றிப்பிடித்துக்கொள்ளுமாறும் பிரிந்துவிடக்கூடாது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்கின்றான். இறைவனின் கடுமையான இந்த எச்சரிக்கைகளை மீறி செயல்பட்டு பிரிவினைகளை ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குற்றத்திற்குரியவர்களே!

  சகோதரரே! நீங்கள் ஒரு பேருண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது ‘நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்’ என்ற இறைவனின் கடுமையான எச்சரிக்கையை மீறியவர்களாக அரசியல் ஆதாயத்திற்காகவும், அற்ப உலக இன்பங்களான உலக ஆதாயங்களை அடைவதற்காகவும் தமக்குள் பிரிவுகள் ஏற்படுத்தியவர்கள் கூட இன்றளவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையான

  – இறைவன் ஒருவனே என்பதிலும்,
  – முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார் என்பதிலும்
  – திருக்குர்ஆன் இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதிவேதம்

  என்பதிலும் எவ்வித வேறுபாடும் இன்றி அவற்றை முழுதாக ஏற்று செயல்பட்டுவருகிறார்கள். மற்ற சில புரிந்துணர்தலிகளிலே சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவது இறைவன் அருளியவாறே இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே குர்ஆனைத்தான்.

  ஆனால் கிறிஸ்தவர்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பைபிள்! கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பைபிளிலே காணப்படுகின்ற பல பாகங்கள் புரோட்டஸ்டன்ட் பைபிளிலே காணவில்லை! கடவுள் கொள்கையிலே வேறுபாடுகள்! சிலர் இயேசு தான் கர்த்தர்; கர்த்தர் தான் இயேசு என்கின்றனர் சிலர்; தேவன் மூவரில் இருக்கிறார் என்கின்றனர் பலர். சிலர் இல்லை இல்லை; கர்த்தர் வேறு; இயேசு வேறு; இயேசு கர்த்தரின் மகன் மட்டுமே! என்கின்றனர். இப்படியாக, கிறிஸ்தவர்களின் அடிப்படை கடவுள் நம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

  இதை உங்கள் மனதை புண்படுத்துவதற்காக கூறவில்லை! இந்த எண்ணம் நமக்கு துளிகூட இல்லை! மாறாக நீங்கள் சிந்தித்து தெளிவுபெறவேண்டும் என்பதே நமது எண்ணம்.

  //நான் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவுக்குல் வந்தவன்//

  நல்வாழ்த்துக்கள் சகோதரரே! பெற்றோர்களையும் முன்னோர்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றுபரல்லர் நீங்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். உலகில் இருக்கும் பெரும்பாண்மையான மக்கள் தம் பெற்றோர் எந்த கொள்கையில் இருக்கிறார்களோ அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகின்றனர். அவைகள் சரியா? பகுத்தறிவுக்கு ஏற்றதா? என்பதைக்கூட சிறிதும் சிந்திப்பதில்லை! ஆனால் தாங்கள் அதிலிருந்து வித்தியாசமாக சுயபரிசோதனை செய்து பழைய கொள்கை தவறானது என்பதை விளங்கி புதிய கொள்கையினை உங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  சகோதரரே! சிலவேளைகளில் நாம் சத்தியம் எது என்று தேடிச்செல்கின்ற வேளைகளிலே நமக்கு வெற்றியும் கிட்டலாம்! சிலவேளை ஒரு அசத்தியத்திலிருந்து இன்னொரு அசத்தியத்தின்பாலும் சென்றுவிடக்கூடும். எனவே நாம் மிகுந்த கவனமுடன் ஒரு பாதையை சத்தியப்பாதை என்பது போன்று தோற்றமளித்தாலும் அதை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து அந்த பாதை உண்மையிலேயே சத்தியப்பாதைதானா என்பதை நன்கு ஆராயவேண்டும். அப்பொழுதான் அதில் உள்ள பாதங்களும் அவை உண்மையிலேயே நேரான வழியில் நம்மை அழைத்துச்செல்கின்ற பாதை தானா என்பது நமக்கு நன்கு விளங்கும்.

  இந்த அடிப்படையில் உங்களின் சத்தியத்தேடலை நீங்கள் நிறுத்திவிடாமல் தொடருங்கள்! அப்பொழுது உங்களுக்கு இறைவன் வழிகாட்டுவார்! நீங்கள் உங்களுக்குள் பலகேள்விகளை கேட்டுப்பாருங்கள்!

  – இந்தப்பிரஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து அவற்றை பரிபாலித்து வருகின்ற இறைவனுக்கு மகன் இருக்கமுடியுமா? அது அவனுக்கு அவசியம் தானா?

  – அப்படி இருக்க வேண்டும் எனில் ஏன் ஒரு மகனோடு நிறுத்திவிட்டார்?

  – பைபிளில் தேவகுமாரர் என்று இயேசுவை மட்டுமல்லாமல் இன்னும் பலரை தேவகுமாரர் என்று கூறுகிறதே! நாம் ஏன் அவர்களையும் கர்த்தரின் குமாரர்கள் என்று கூறுவதில்லை! இயேசுவை மட்டுமே தேவனின் குமாரர் என்று கூறுகிறோம்?

  – வருங்காலத்தில் நிகழப்போகின்ற எத்தனையோ செய்திகளைப் பற்றி முன்னறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற வேதாகமத்திலே, இயேசு கிறிஸ்துவிற்குப் பிறகு பிறந்து உலக வரலாற்றிலே மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி இன்று உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் பின்பற்றுகின்ற அளவிற்கு சரித்திர சாதனைப்படைத்த ஒருமாமனிதரைப் பற்றி என்ன கூறப்பட்டிருக்கின்றது?

  பைபிள் தேற்றரவாளர் என்று யாரைக் கூறுகிறது?

  – பன்றியின் மாமிசத்தை உண்ணக்கூடாது; வட்டி வாங்கக்கூடாது; விருத்த சேதனம் பண்ண வேண்டும் என்று பைபிள்கூறியிருக்க, அவற்றை இயேசு கிறிஸ்துவும் கடைபிடித்திருக்க அவற்றுக்கு மாற்றமாக கிறிஸ்தவர்கள் செயல்படுவதேன்? அதற்கு அனுமதியளித்தவர்கள் யார்?

  – கிறிஸ்தவம் உண்மையான மார்க்கம் என்றால் பல ஆண்டுகள் கிறிஸ்தவத்தைப் பற்றி ஆய்வு செய்து கிறிஸ்தவ மதபோதகராகவும், பாதிரியார்களாகவும், சன்னியாஸ்திரியர்களாகவும் பணியாற்றிய மேதைகள் கிறிஸ்தவத்தை துறந்து இஸ்லாமிய மார்க்கத்திலே தம்மை ஏன் இணைத்துக் கொள்கிறார்கள்?

  //உங்களுடைய அர்டிகலில் மிக சில காரியங்கள் உண்மையாக இருந்தாலும் அனேக காரியங்கள் வேத தெளிவில்லாமல் நீங்கள் சொல்லி இருக்கிறதை காட்டுகிறது, நிச்சயமாய் தேவன் எனக்கு கொடுத்த பலத்த கிருபையின் படி ஒரு முழுமையான தெளிவை (ஆதாரத்துடன்) உங்களுக்கு எனது அடுத்த கடிதத்தில் தெரிவிக்கிறேன், தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்//

  நன்றி சகோதரரே! வேத தெளிவில்லாமல் குறிப்பிட்டிருக்கின்றவற்றை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்! தவறு இருப்பின் யாராக இருந்தாலும் திருத்திக்கொள்வது அவசியமே! மேலும் உங்களின் விளக்கத்தையும் தாருங்கள். அதே நேரத்தில் நமது அன்பான வேண்டுகோள் என்னவெனில் உங்களின் சத்தியத்தேடுதலை தொடருங்கள்! ஒருமுறையேனும் இறைவனின் இறுதிவேதமான அல்-குர்ஆனை படித்துப்பாருங்கள்!

  இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவேண்டும் என்று பிரார்த்தித்தவனாக,

  அன்புடன்,
  புர்ஹான்.

  • stephen

   @புர்ஹான்,

   if you want any answer pls login this website

   Thanks & Rgards
   Stephen

   • புர்ஹான்

    @stephen,

    சகோதரர் ஸ்டீஃபன் அவர்களே!

    நீங்கள் எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறிபவர்; கண்மூடித்தனமாக எந்த ஒரு விசயத்தையும் பின்பற்றுபவரல்லர்; அதனால் தான் முன்னோர்களின் மதமான இந்து சமயத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் பகுத்தறிந்து அது தவறு என உணர்ந்து கிறிஸ்தவ சமயத்தை தேர்தெடுத்தீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னடாவென்றால் இந்து மதத்தில் இருக்கும் போது பயன்படுத்திய பகுத்தறிவை கிறிஸ்தவ மதத்திற்கு வந்ததும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டீர்களே!

    அவ்வாறு செய்யாதீர்கள் சகோதரரே! உங்களின் சத்தியப்பாதையை தேடும் வேட்கையைத் தொடருங்கள். கண்மூடித்தனமாக காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக இஸ்லாத்தின் மீது கிறிஸ்தவ மிசனரிகள் வாரியிறைக்கும் சேறுகளை அலசாமல் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அதன் ஒரிஜினல் ஸ்சோர்களிலிருந்து படியுங்கள். அதைவிட்டு விட்டு காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக பொய்களை மட்டுமே பரப்புவதற்காக துவக்கப்பட்ட ஒரு வளைதளத்தைப் படிக்க கூறுவதென்பது எவ்வகையில் நியாயம் சகாதரரே!

    நீங்கள் உண்மையை அறிய வேண்டுமானால், வேதாகமத்தைப் படிப்பதைப் போலவே நடுநிலையோடு இறைவனின் இறுதிவேதமான அல்-குர்ஆனை வாசித்துப் பாருங்கள்! இறைவன் நாடினால் அதிலே உங்களுக்கு தெளிவு ஏற்படலாம்.

    புர்ஹான்.

 • dear sir bible is only histry not only that now one man said genaration create monkey now why monkey create man?jesus is broken histry before birth and after the christ so you told total lies

 • samuel.G

  thank you for reply

 • Guru

  intha unmaigalai veliyel solla yar ierukkirargal

 • christian

  unmayana thelivu manathu, Devan Velipaduthi irukira Manitharkalukku mattumae Velicham…

  Yarkellam Velippadu illayo avargaL Eriyum Akkni Kadalthan Enbathil Santhegameillai.

 • Priscilla

  எப்போதும் உங்கள் பேச்சு அர்தமற்றதாக இருக்கிறதே அது எப்படி ?உங்கள் குரான் ஈசா நபி குறித்து அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்பதை ஒத்துக்கொண்டது .நியாதீர்ப்பு நாளில் இயேசு மீண்டும் வருவார் என்று சொல்கிறது.தமிழ் ஆங்கிலம் மற்றும் அரேபியில் இருக்கிற உங்கள் குரானில் அநேக குறைபாடுகள் பிழைகள் இருக்க .வேதாகமத்தை குறித்து நீங்கள் எப்படி குறை என்று பேசுகிறீர்கள் . நாங்கள் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் சகோதரர்களாக நினைக்கிறோம்.ஆனால் உங்கள் மதம் அல்லாவிடம் சேராதவர்களை கொலை செய்கிறீர்களே . தீவிரவாதிகள் எங்கே அதிகமாக இருக்கிறார்கள் . மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதபடி பரிசுத்த வேதாகமத்தில் உள்ளதை முழங்கால் படியிட்டு உண்மையாக வாசியுங்கள் ஒருவேளை தேவன் உங்களுக்கு இரக்கம் பாராட்டுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *