| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,460 views

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-012

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 9th May 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள்

  • அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்;
  • மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்;

ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.” (அல்-குர்ஆன் 57:7)

அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்?

அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு. air max 2017 goedkoop Asics Gel Lyte 3 முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:)

“இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் – இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்). nike air max 2017 dames nike air max pas cher (அல்-குர்ஆன் 57:11-12)

  • நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;
  • இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் –

அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.

மேலும், எவர்கள்

  • அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ,

அவர்கள் தாம்

  • தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும்,
  • உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்;
  • அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும்,
  • (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு;

எவர்கள்

  • நிராகரித்துக் கொண்டும்,
  • நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ

அவர்கள் நரகவாசிகள்தான். nike tn requin oakley pas cher அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை

  • விளையாட்டும்,
  • வேடிக்கையும்,
  • அலங்காரமுமேயாகும்;
  • மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்;
  • பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்;

(இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:)

  • அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது;
  • ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்;
  • பின்னர் அது கூளமாகி விடுகிறது;

(உலக வாழ்வும் இத்தகையதே; எனவே

  • உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு;
  • (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு –

ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

  • உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்;

அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள்

  • அல்லாஹ்வின் மீதும்,
  • அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ,

அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. air max pas cher Chaussures Nike Pas Cher அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் – அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான்.

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,460 viewsMay 9, 2015   பிரிவு: சொர்க்கம் செல்பவர்கள் யார்? - தொடர்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்


AWSOM Powered