சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-013

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள். (அல்-குர்ஆன் 54:54-55)

“எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் – அதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்-குர்ஆன் 85:11)

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக

(தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக

அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும்

  • தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்;
  • மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும்

என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

நிச்சயமாக, எவர்கள்

  • ஈமான் கொண்டு,
  • ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ,

அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.

அவர்களுடைய நற்கூலி,

  • அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும்.
  • அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்;
  • அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்;
  • அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான்,
  • அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்;

தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

(அல்-குர்ஆன் 98:5-8)

 

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed