சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-015

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள்,

  • நம் வசனங்களை பொய்ப்பித்து
  • இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ

நிச்சயமாக அவர்களுக்கு

  • வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா –
  • மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் –

இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். Nike Air Max 2017 Femme chaussures de foot puma அவர்களுக்கு

  • நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும்,
  • (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு –

இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். Asics Gel lyte 3 Pas Cher chaussures nike tn requin ஆனால், எவர்கள்,

  • நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ – எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்;
  • அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் – அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
  • தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்;
  • அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;

இன்னும் அவர்கள் கூறுவார்கள்:

  • “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்;
  • அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் –
  • நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்”

(இதற்கு பதிலாக,

  • “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்”

என்று அழைக்கப்படுவார்கள். nike tn requin New Balance Heren சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து,

  • “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்;
  • உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?”

என்று கேட்பார்கள். nike air max 2016 goedkope air max pas cher அதற்கு அவர்கள்,

  • “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள்.

அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர்,

  • “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.

(ஏனெனில்) அவர்கள்,

  • அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்;
  • மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.

(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து

  • “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)”

என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை – அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள். nike air max 2017 grijs nike air max 2017 goedkoop அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள்

  • “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை – அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு – அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்:

  • “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
  • “அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே?

(என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,)

  • நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து,

  • “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்;

அதற்கு அவர்கள்:

  • “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்”

என்று கூறுவார்கள்.

Tags: , ,

Leave a Reply