முஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்

புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.

ஜாஹிலிய்யக் காலத்திலே வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் பொறுத்தவரை தவ்ஹீதுர் ருபூபிய்யாவை – அதாவது இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவர்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ்வே என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தார்கள்! இதை அல்லாஹ்வும் அவனது திருமறையின் மூலமாக உறுதிப்படுத்துகின்றான்! (பார்க்கவும்: 10:31, 23:84-89, 26:63, 43:87)

அதே நேரத்தில் அவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவெனில் படைத்துப் பரிபாலிப்பவன் ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான் என்று ஏற்றிருந்த அவர்கள், அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்ற ஏகத்துவத்திலும்,

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுக்கே உரித்தானது என்று ஏற்றுக் கொள்ளும் விசயத்திலும் கோட்டை விட்டு அந்த இருவகையான ஏகத்துவத்தில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அதன் மூலம் முஷ்ரிக்குகளாக ஆனார்கள்!

அதாவது,

அல்லாஹ் தான் தம்மைப் படைத்துப் பரிபாலிப்பவன் என்ற நம்பிக்கையை மக்கத்து முஷ்ரிக்குகள் கொண்டிருந்த போதிலும் பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப்பலியிடுதல், அழைத்து உதவி தேடுதல், பாதுகாப்பு தேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ் அல்லாத அவர்களின் அவர்களின் முன்னோர்களின் வடிவில் உள்ள சிலைகளுக்கு செய்து அதன் மூலம்  தவ்ஹீதுல் உலூஹிய்யா என்ற வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஏகத்துவத்தில் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்தனர்!

அது போலவே, மறைவான விசயங்களை அறியும் ஆற்றல், ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை அறிந்து அவரது தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல், ஒரே நேரத்தில் எத்தனை பேர்கள் அழைத்தாலும் எத்தனை தூரத்தில் இருந்து அழைத்தாலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கேட்டு அனைத்தையும் அவர்களுக்கு உதவும் ஆற்றல் அவர்களின் முன்னோர்களுக்கும் இருக்கு என்று நம்பிக்கை கொண்டு அதன் மூலம் அஸமா வஸ்ஸிபாத் என்ற அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் பெயர்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும் என்ற ஏகத்துவத்தில் இணை கற்பித்தனர்!

நல்லோர்களாக வாழ்ந்த அந்த முன்னோர்களின் வடிவில் உள்ள சிலைகளிடம் பிரார்த்தித்தால் அவை நம்மை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைக்கும் என்று நம்பிக்கைகொண்டிருந்தனர் மக்கத்து முஷ்ரிக்குகள்!

இது குறித்து அல்லாஹ் கூறும் போது,

‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)

என்று அந்த மக்கத்து முஷ்ரிக்குகள் கூறியதாக கூறுகின்றான்.

எந்த வகையான ஏகத்துவத்தை ஏற்று மற்ற இரண்டு வகை ஏகத்துவத்தை மறுத்த காரணத்திற்காக அல்லாஹ்வும் அவனது தூதரும் ஜாஹிலிய்யாக் கால மக்கத்துவாசிகளை முஷ்ரிக்குகள் என்றும் இறை நிராகரிப்பாளர்கள் என்றும் கூறி அவர்களுடன் போர்கள் பல புரிந்து அவர்களைச் சிறைப் பிடித்தார்களோ அதேபோல தான்,

தற்காலத்திய கப்ர் வணங்கிகளும் படைத்துப் பரிபாலித்தலில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்திவிட்டு மற்ற இருவகை ஏகத்துவங்களை மறுக்கின்ற விதத்திலே பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப்பலியிடுதல், அழைத்து உதவி தேடுதல், பாதுகாப்பு தேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ் அல்லாத இறைநேசகர்களுக்கும் அவுலியாக்களுக்கும் செய்வதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகளான மறைவான விசயங்களை அறியும் ஆற்றல், இதயங்களிலுள்ளதை அறியும் ஆற்றல், மரணித்தாலும் உயிருடன் இருப்பவர்களுக்கு உதவும் ஆற்றல் போன்றவை அல்லாஹ்வின் அடிமைகளுக்கும் இருப்பதாக கருதி அவர்களின் சமாதிகளிலே தட்டழைந்து திரிந்து அல்லாஹ்வுக்கு மாபெரும் இணை கறபிக்கின்றனர்.

என்றோ இறந்து மக்கி மண்ணாகிப் போனவர்களும் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்று அன்று மக்கத்து முஷ்ரிக்குகள் கூறியதாக அல்லாஹ் கூறுகின்ற அதே டயலாக்குகளை தற்காலத்திய முஷ்ரிக்குகளும் கூறுகின்றனர்.

எந்த செயல்களை செய்ததால் ஜாஹிலிய்யக் காலத்து மக்காவாசிகள் முஷ்ரிக்குகளாகவும் காஃபிர்களாகவும் ஆனார்களோ அதே காரியத்தை தான் தற்காலத்திய கப்ர் வணக்கஸ்தர்களும் செய்கின்றனர். பிறகு இவர்கள் மட்டும் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ள என்ன தகுதியிருக்கிறது? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

இந்தக் கட்டுரையின் தலைப்பு இதுவல்ல! இது அன்றைய முஷ்ரிக்குகளின் நம்பிக்கையுடன் தற்காலத்திய முஷ்ரிக்குகளின் நம்பிக்கையை ஒரு ஓப்பீடு செய்வதற்காக மட்டுமே! இப்போது விசயத்திற்கு வருவோம்!

நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சார பீரங்களின் மூலமாக மக்கத்து முஷ்ரிக்குகளின் ஷிர்க்கின் கோட்டை தகர்ந்து சின்னாமாகி மக்கள் சாரை சாரையாக ஏகத்துவத்தை நோக்கி வருகின்ற வேளையிலே செய்வதறியாது திகைத்த அந்த முஷ்ரிக்குகள் நரித்தனமாக கையாண்ட தந்திரம் தான் வரலாற்றிலே மிக மிக முக்கியமானது! நபி (ஸல்) அவர்களையே மனம் நோகும் அளவிற்கு அவர்களின் அந்த விசமத்தனமான நரித்தனம் அமைந்தது!

அதாவது ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகளான அந்த மக்கத்து முஷ்ரிக்குகள், அந்த ஏகத்துவப் பிரச்சாரம் செய்த நபி (ஸல்) அவர்கள் மீது களங்கத்தைச் சுமத்தினார்கள்!

காரணம் நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை எடுத்துக் கூறுகின்ற போது மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த சத்தியத்தில் சேருவதை சகிக்க இயலாத அற்பர்களான அந்த முஷ்ரிக்குகள் அந்த சத்தியத்தைப் போதிப்பவரின் மீது களங்கத்தைச் சுமத்தி அவரை மிக மோசமானவரா மக்கள் மன்றத்திலே காட்டினால் அவரின் எந்தப் பிரச்சாரமும் மக்களிடையே எடுபடாது என்ற விசமத்தனமான, நரித்தனமான வேலையைத் தான் செய்தனர் மக்கத்து காஃபிர்கள்!

அவர்கள் நபி (ஸல்) அவர்களை சூனியக்காரர் என்றும் பைத்தியக்காரார் என்றும் பொய்யர் என்றும் பலவாறாக மக்கள் மன்றத்திலே பரப்பி நபி (ஸல்) அவர்களின் உபதேசங்கள் மக்களை சென்றடையாமல் இருப்பதற்காக என்னென்ன தகிடுதத்தங்கள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்தனர்!

அதே விசமத்தனமான நரித்தனமான செயல்களைத் தான் மக்கத்து முஷ்ரிக்குகளைப் போலவே அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற கப்று வணங்கிகளும் அல்லாஹ்வையும் அவனது படைப்பினங்களை ஒன்றாக்கும் சூஃபித்துவ வழிடேர்களும் தற்போது செய்து கொண்டிருக்கின்றனர்!

இவர்களோடு “நானும் தவ்ஹீதுவாதி தான்” என்று வேடமிடும் முனாஃபிக்குகளும் கலந்துகொள்கின்றனர்.

முன்னோர்களின் வழிமுறை என்ற பெயரிலே அவர்கள் செய்துவந்த அதே இணைவைப்பிலே குருட்டுத்தனமாக உழன்றுகொண்டு இருந்த சமுதாயத்தில் இறைவனின் அருளால் ஏகத்துவம் என்ற ஒளி வீசி தமிழகத்தின் எட்டுதிக்கெல்லாம் பரவி மக்கள் கூட்டம் கூட்டாமக எப்படி அன்றைய ஜாஹிலிய்யக்காலத்தின் மக்காவாசிகள் இஸ்லாத்தில் இணைந்தார்களோ அதுபோல் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்!

சத்தியமான ஏகத்துவத்தை மக்காவாசிகள் ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கத்து முஷ்ரிக்குகள் அந்த ஏகத்துவப்பிரச்சாரம் செய்த நபி (ஸல்) அவர்களின் போதனைகள் மக்களிடம் எடுபடாமல் இருப்பதற்காக எவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மீது அபாண்டணமான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பொய்களையும் கூறினார்களோ அதுபோலவே,

தற்காலத்திய கப்று வணங்கிகளும், அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுடன் ஒன்றாக்கும் வழிகெட்ட சூஃபிகளும், ஏகத்துவ நாடகமாடும் முனாஃபிக்குகளும் அல்லாஹ்வை மடடுமே வணங்க வேண்டும் என்ற ஓரிறைக் கொள்கையை எவ்வித தயவுதாட்சண்யமின்றி எடுத்துரைக்கும் அறிஞர்களின் மீதும் அவதூறுகளை மக்கள் மன்றத்திலே பரப்பி அதன் மூலம் அந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர் முஷ்ரிக்குகள்!

கேவலமான முறையில் அவதூறை அள்ளிவீசுகின்ற அந்த முஷ்ரிக்குகளுக்கும், சூஃபிகளுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக முயன்ற அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் எப்படி தங்களின் முயற்சியில் தோற்று மண்ணைக் கவ்வுமாறு இறைவன் செய்தானோ,

அதே போன்று தான்

நபி (ஸல்) அவர்கள் போதித்த அதே ஏகத்துவ போதனையைச் செய்கின்ற தற்காலத்திய அறிஞர்கள் மீது மக்கத்து காஃபிர்கள் கொண்டிருந்த அதே நம்பிக்கையைக் கொண்டிருக்கும் தற்காலத்திய முஷ்ரிக்குகள் சுமத்தும் அவதூறுகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி மக்கத்து முஷ்ரிக்குகள் மண்ணைக் கவ்வியதை விட மிக மோசமாக மண்ணைக் கவ்வுகின்ற நலையை அல்லாஹ் ஆக்கியருள்வான்!

ஏகத்துவம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட அறிஞரின் சொத்து அல்ல! ஏகத்துவம் என்பது அல்லாஹ்வன் ஒளி! அதை எந்தக் கொம்பனாலும் வாயால் ஊதி அணைக்க இயலாது!

நபி (ஸல்) அவர்கள் போதித்த இந்த ஏகத்துவம் நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு எப்படி அதிவேகமாக உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பரவியதோ அது போல எந்த ஒரு மார்க்க அறிஞரின் மறைவிற்காகவும் இந்த ஏகத்துவம் ஒடுங்கி முலையில் அடங்கிவிடாது என்றும் அந்தக் கொள்கையை ஏற்றிருக்கும் பல இலட்சக் கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்களின் மூலம் பரவிக்கொண்டு தான் இருக்கும் என்பதையும் அறிவீனத்தின் உச்சத்திலிருக்கும் அவதூறுகளைப் பரப்பும் தற்காலத்திய முஷ்ரிக்குகளும் ‘அல்லாம் அவனே’ என்ற வழிகெட்ட சூஃபிகளும் ஏகத்துவ நாடகமாடும் முனாஃபிக்குகளும் உணரவேண்டும்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed