நபி (ஸல்) அவர்களை கடவுளாகக் கருதும் சூஃபி மதத்தவர்கள்!

வரலாற்று நெடுகிலும் பார்த்தோமென்றால் கடவுளை பற்றி போதிக்க வந்தவர்களே ஒரு கட்டத்தில் கடவுளாக்கப்பட்டதை அறியலாம்!

ஒவ்வொரு சமயத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்கள் தோன்றியமைக்கு முதல் காரணமும் இதுவே!

இப்படி மனிதர்களை கடவுளாக போதித்தவர்களையும், அவர்களையே வணங்கியவர்களையும் காபிர்கள் என்றும் வழிகேடர்கள் என்றும் போதித்த மார்க்கம் தான் இஸ்லாம்!

ஈசா (அலை) அவர்களை வணங்கியவர்களின், இன்னும் பிற நபிமார்களான நல்லடியார்களை வணங்கியவர்களின் மனிதனை வழிபடும் வழிபாட்டுக் கொள்கைகளை துடைத்தெரிய வந்தவர் தான் நபி (ஸல்) அவர்கள்.

முந்தைய நபிமார்களை அவர்களுக்குப் பின்வந்தவர்கள் வணங்கியதைப் போல தமக்குப் பின்வருபவர்கள் தங்களையும் வணங்கிவிட கூடாது என்பதில் ஆரம்பம் முதலே மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தவர்கள் தான் நபி (ஸல்) அவர்கள்.

முந்தைய நபிமார்கள், நல்லடியார்களை வணங்கியவர்களை அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் என்றும் படைப்புகளிலேயே மிகவும் மோசமானவர்கள் என்றும் சொல்லி சொன்றவர்கள் நமது நபி (ஸல்) அவர்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

“நபி (ஸல்) அவர்கள் ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.

பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

(ஸஹீஹ் புகாரி 1330.)

ஆனால் இன்று சில கூட்டம் நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ்வாக்க துடித்துக் கொண்டு இருக்கிறது!

அல்லாஹ்வின் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்றும்

அல்லாஹ் தான் நபிகள் நாயகம் வடிவில் பூமிக்கு வந்தான் என்றும் சொல்லி மக்களை வழிகெடுக்க துவங்கி இருக்கிறார்கள்!

மக்களும் நபி ஸல் அவர்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவும், இந்த படு பாதக செயலை செய்ய தூண்டுவது சாமானிய மனிதர்கள் அல்ல என்ற காரணத்துக்காகவும்,

இவ்வாறு கூறுபவர்கள் ஏழு வருடம் மார்க்க கல்வி பயின்ற இமாம்களாகவும் , ஆலிம்களாகவும், பெரியார்களாகவும், ஷைகுமார்களாகவும் இருப்பதால் அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் கண்மூடி அவர்களை பின்பற்ற தொடங்கி விடுகிறார்கள்.

இவர்களுக்கு அல்லாஹ்வின் வேதம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை!

நபி ஸல் அவர்களை புகழ்கிறோம் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டாலும் அவர்களது வழிகாட்டுதல்களை எல்லாம் இவர்கள் கண்டுகொள்ள தயாரில்லை.

நபி ஸல் அவர்களை அல்லாஹ்வாக்கி அவர்களை வணங்க வைக்க செய்யப்பட்ட சதி வலையில் இன்று சுன்னத் ஜமாத் என்று சொல்லிக்கொள்ளும் சமுதாயத்தில் கனிசமான தொகையினர் விழுந்து நரகத்தின் படுகுழியை நோக்கி விரைந்து செல்கின்றனர்!

“அறிந்துகொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள்.”

“மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 6830

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (அல்குர்ஆன் : 2:159)

அல்லாஹ் தான் நபியாக வந்தார்கள் என்றால் யார் யாருக்கு அடிமை?

அறிவை அடமானம் வைத்த கூட்டம் சிந்திக்குமா?

Hits: 149

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *