வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே வஹ்தத்துல் உஜூத்

சூஃபித்துவம் என்பது மாற்று மதத்தவர்களின் மதங்களின் கலவையே என்பதையும் அவர்களின் சித்தாத்தங்களைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டதே சூஃபித்துவ சித்தாங்கள் என்பதையும் இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமேயில்லை என்பதையும் இதற்கு முன்னர் விளக்கிய சூஃபித்துவம் பற்றிய கட்டுரைகளில் நாம் படித்தோம்!

தற்போது இந்த வழிகேட்டு கொள்கையான வஹ்தத்துல் உஜூத் பிற மதக் கொள்கைகளிலிருந்து எப்படி காப்பியடிக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

‘எல்லாம் அவனே’ என்ற வழிகேட்டுக் கொள்கையுடையவர்களால் அடிக்கடிப் பாடக் கூடிய பாடல் தான் பின்வருபவை:

மண்ணில் நின்று வந்ததெல்லாமே

மண்ணென்றால் அது பொய்யில்லை!

பொண்ணில் நின்று வந்ததெல்லாமே

பொண் என்றால் அது பொய்யில்லை!

ஒன்னில் நின்று வந்ததெல்லாமே

ஒன்றே தான் இரண்டில்லை!

ஹக்கில் நின்று வந்ததெல்லாம்

ஹக்கே தான் வேறில்லை!

அதாவது ‘ஹக்கிலிந்து (இறைவனிடமிருந்து) வந்தவைகள் தான் அனைத்தும் ஆகையால் அனைத்தும் இறைவன்’ என்பதே இவர்களின் இந்த கேடுகெட்ட சித்தாந்தம்!

‘படைப்பாளன் வேறு! அவனது படைப்பினங்கள் வேறு’ என இஸ்லாம் கூறிக்கொண்டிருக்க,

‘படைப்பாளனையும் படைபபினங்களையும் ஒன்றாக்கும்’ இந்த கேடுகெட்ட சித்தாந்தத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை இப்போது பார்ப்போம்!

பிற மதத்தவர்களின் வர்ணாச்சிரமக் கொள்கையின்படி,

மனிதன் கடவுளிலிந்தே பிறக்கின்றான். கடவுள் சிலரைத் தனது நெற்றியிலிருந்தும், சிலரைத் தன் நெஞ்சுப் பகுதியிலிருந்தும், வேறு சிலரைத் தன் வயிற்றுப் பகுதியிலிருந்தும் மற்றும் சிலரைத் தனது கால்ப் பகுதியிலிருந்தும் படைத்திருப்பதாகவும்

கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் உயர்ந்தவர்களென்றும்,

காலிலிந்து பிறந்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும்

பிற மத வேத நூல்களில் காண முடிகின்றது. இது அந்த மதத்தவர்களின் நம்பிக்கை!

சுருங்கச் சொல்வதெனில் அவர்களின் கடவுளின் ஒவ்வொரு பாகத்திலிந்தே மனிதன் தோன்றுகின்றான்!

வருனாசிரமத்தின் இந்தக் கொள்கையைப் பிரதிபலிக்கும் விதத்தில் தான் வழிகேடான வஹ்தத்துல் உஜூத் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இப்பிரபஞ்சத்திலுள்ளவைகள் அல்லாஹ்விடமிருந்தே வந்தததால் அனைத்தும் அல்லாஹ் என்பதாக பிதற்றித் திரிகின்றனர்.

இந்துக்களின் வேத நூலான பகவக் கீதையை அனைத்து இந்துக்களும் தமது வேத நூலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதே போல் ஆதி பராசக்தி எனும் நித்திய ஜீவ ஆத்மா இருப்பதாகவும் நம்புகின்றனர். சிலர் வேறு பெயர் கூறியும் இதை அழைப்பதுண்டு.

இது அவர்களின் நம்பிக்கை! அதை நாம் விமர்சிக்க விரும்பவில்லை! அது நமது நோக்கமும் அல்ல!

ஆனால் அந்தக் கொள்கையை இஸ்லாத்திற்குள் நுழைப்பதைத் தான் நாம் கடுமையாக விமர்சிக்கின்றோம்!

இந்துக்களிடத்தில் ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. எனினும் பிரதானமான கடவுள்கள் மூன்று என அனைவரும் நம்புகின்றனர் .

அவைகளாவன…

1- பிரம்மன் – படைப்பதற்கு,

2- விஷ்னு – காப்பதற்கு.

3- யமன் – அழிப்பதற்கு.

பகவக் கீதையில் வருவதாவது …

‘காக்கும் கடவுளான விஷ்னு ஒரு முறை மனித உருவெடுத்து கிருஷ்னனின் வடிவில் அருச்சுனன் எனும் தேவரிடத்தில் வந்தார்.

அருச்சுனன்: எனக்கு ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும். நீ எனக்குக் தந்த ஆத்மாவின் ரகசியம் என்ன? அதனாலேயே நான் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றேன். நான் உனது திரு வடிவத்தைக் காண விரும்புகின்றேன். உன்னைக் காணக்கூடிய சக்தி எனக்கிருப்பதாக நீ நம்பினால் உனது அழிவற்ற ஆத்மாவை வெளிப்படுத்துவாயாக.

கடவுள்: அருச்சுனா… என் வடிவங்களைப் பார்… அவை நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றுக்குப் பல நிறங்களும் வடிவங்களும் இருக்கின்றன. இப்பிரபஞ்சத்தைப் பார். அதில் நீ பார்க்கும் அனைத்தும் என் உடலிலேயே இணைந்து கலந்திருக்கின்றன. எனினும் உன் மனிதக் கண்களால் என்னைக் காண முடியாது. இருப்பினும்; இயற்கையை வென்ற தெய்வீகக்கண்களை உனக்குத் தருகின்றேன் அப்போது உன்னால் என்னைக் காண முடியும்.

பின்னர் அருச்சுணனுக்கு தெய்வீகக் கண்கள் கொடுக்கப்பட்டதன் பின் பார்த்த போது கடவுளின் உடலிலேயே பல்வேறு வடிவங்களில் முழுப் பிரபஞ்சத்தையும் அவர் கண்டார்.

(மேற்கோள்: அல் பிக்ர் அல் பல்ஸபிய்யா அல் ஹின்திய்யா ப :204)

மனிதன் பண்பட்டு பிரம்மனுடன் இரண்டறக் கலந்து விடும் போது அவனும் பிரம்மனாகி விடுவான். அவனது உயிர் அமைதி பெற்று விடும். அவன் எதற்கும் ஆசைப்படவோ எதற்காகவும் கவலைப்படவோ மாட்டான். தான் யார் என்பதையும் தன் நிலை யாது என்பதையும் அறிந்து கொள்ளும் போது அவன் என்னுள் சங்கமித்து குடி கொண்டு விடுகின்றான். (அதே நூல் ப: 234)

இவர்களின் இந்த சித்தாந்தையே கஸ்ஸாலி இவ்வாறு சொல்கின்றார்..

“மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர்.

எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள், எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். 

அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒருவகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் “நான் தான் அல்லாஹ்’ என்றும், வேறு சிலரோ ‘நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றும், வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை’ என்றும் கூறியிருக்கின்றார்கள்.

(மிஸ்காதுல் அன்வார். ப:122)

இப்போது புரிகின்றதா? அனைத்தும் அல்லாஹ் என்ற வழிகெட்ட கொள்கை எங்கிருந்து வந்ததென்று…

எனவே அனைத்தும் கடவுளே எனும் அத்வைதக் கொள்கையும், ஜத்ப் எனப்படும் தன்னிலை மறக்கும் நிலையும், அதன் பின் ஏற்படும் ஏனைய ஷைத்தானியத் தொடர்புகளால் உண்டாகும் வழக்கத்ததுக்கு மாறான சில அதிசயங்களும் பிற மதத்தினத்தினரிடமும் இருந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது. எனவே இதையெல்லாம் கராமத் என்றும் இவர்களையெல்லாம் அவ்லியாக்கள் – இறை நேசச் செல்வர்கள் என்றும் சொல்ல முடியுமா? சிந்திப்போமாக ..

இதே சித்தாந்தத்தை வழிகேடுகளின் தலைவராக விளங்கிய இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்…

“ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார். ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான் தென்படும்.

முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும்.

இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள்.

அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள்.”

(புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192)

இதுதான் இந்த சூஃபிகள் சொல்லும் ரகசியம்.?? இது வழிகேட்டின் உச்சம், இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை.

மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான்.

இவற்றை வழிகேடுகள் என்பதைச் சாதாரணவன் கூடச் சொல்வான். அல்-குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர், கலப்பற்ற ஷிர்க் என்று விவரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்.

நூல் உதவி:

  1. சூபித்துவ தரீக்காக்கள் – அன்றும் இன்றும்!
  2. The Reality of Sufism in the Light of Quraa’n and Sunnah

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
5 thoughts on “வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே வஹ்தத்துல் உஜூத்”
  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    தெளிவான விளக்கம் தேவை
    நம்பிக்கை கொண்டு வந்த சில சித்தாந்தகள் உருக்குலைந்து விட்டன
    சரியான பார்வையில் பயணிக்கும் போது பல இடங்களில் இயக்க அமைப்பு கள்

    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்

      இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித குழப்பமும் இல்லை! மிகவும் தெளிவான மார்க்கம்.

      நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

      “வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்லுகிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டான்.”

      அறிவிப்பவர் : உமர்(ரழி): நூல் : ரஜீன்.

      “உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல் லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் நெறிநூல். இரண்டு எனது வழிமுறை”. அறிவிப்பவர்: மாலிக் இப்னு அனஸ்
      (ரழி), நூல் : முஅத்தா.

      அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவை விட்டுவிட்டு மனம் போன போக்கில் ஷைத்தானின் உந்துதலினால் ஏற்பட்ட மனக்குழப்பங்களினால் உளறுபவர்களின் கூற்றையெல்லாம் மார்க்கம் எண்ணி செயல்படுவதே இந்த சூஃபியிஸ மதங்கள்!

      இதை புரிந்துக்கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை!

  2. உங்கள் முன் உள்ள ஒரு பொருள் அல்லது நீங்களே எவ்வாறு தணித்து இருக்க முடியும் என்று நம்புகிறீர்கள். இந்த இயற்கையில் எந்த ஒன்றும் அயலாக இருக்க முடியாது. ஏதேனும் ஒன்றை சார்ந்துதான் இருக்க முடியும்.
    அப்படி இருக்க, இப்பிரபஞ்சமே ஓருடல் என்பது தெளிவாகும். ஆக, இருப்பது ஒன்றது. மற்றதன்று. மற்ற எவையும், “இருப்பு” என்ற வார்த்தைக்கு உரித்தானது அல்ல. அனைத்தும் மாறிவிடும். (இந்த அனைத்தும் உள்ளடக்கிய) அல்லாஹ்வை தவிர. இதுதான் வஹ்தத்துல் வுஜூத் என்பது.

    1. இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்…

      “ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார். ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான் தென்படும்.

      முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும்.

      இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள்.

      அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள்.”

      (புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192)

      இப்னு அரபி கூறியது சரிதானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed