புனித முஹர்ரம் மாதம்

அல்ஜுபைல் தஃவா நிலையத்தின் தஃவா உதவியாலர்களுக்கு 1429-12-1 நடைபெற்ற வகுப்பின் பாடம்.

புனிதமான மாதங்களில் ஒன்று: –

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ(36: 9).

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).

عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ (البخاري).

நிச்சயமாக வானங்கள் பூமிக்கு படைக்கப்பட்ட நாள் முதலே காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வரக்கூயவை. அவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ் ஸானி)வுக்கும் ஷஃபானுக்கும் மத்தியிலுள்ளதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி). ஆதாரம்: புஹாரி).

ஆரம்பத்தில் கடமையாக இருந்தது: –

1863 أَنَّ عَائِشَةَ رَضِي اللَّه عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ (البخاريஇ ومسلم)

குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷூரா தினம் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர், நபியவர்களும் அன் நாளில் நோன்பு நோற்றார்கள். நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்ததன் பின், தானும் அன் நாளில் நோன்பு நோற்றதோடு ஸஹாபாக்களையும் ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் பின் ஆஷூரா நோன்பை விட்டு விட்டார்கள். உங்களில் நாடியவர்கள் (ஆஷூரா) நோன்பை நோற்கலாம், நாடியவர்கள் விடலாம் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَوَجَدَ يَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ يَوْمَ نَجَّى اللَّهُ مُوسَى وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ فَصَامَهُ مُوسَى شُكْرًا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنِّي أَوْلَى بِمُوسَى وَأَحَقُّ بِصِيَامِهِ فَصَامَهُ وَأَمَر بِصِيَامِهِ (أحمد).

நபியவர்கள் மதீனாவுக்கு வந்து போது யூதர்கள் ஆஷ{ரா நாளில் நோன்பிருப்பதைப் பார்த்தார்கள். இது என்ன? என நபியவர்கள் யூதர்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்கள் இது ஒரு மகத்தான நாளாகும், இது போன்ற ஒரு நாளில் தான் அல்லாஹ் மூஸாவை பாதுகாத்தான், பிஃர்அவ்னின் கூட்டத்தாரை மூல்கடித்தான். மூஸா நன்றி செலுத்தும் விதமாக நோன்பு நோற்றார் என்றனர். அப்போது நபியவர்கள் நிச்சயமாக நான் மூஸாவுக்கும், அந்த நோன்பிருப்பதற்கும் மிகத் தகுதியுடையவன் நபியவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் ஏவினார்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி). அஹ்மத்).

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு: –

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم).

ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்).

………..ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ (مسلم).

பின் நபியவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் வரை செய்வது காலம் முழுக்க நோன்பு நோற்பதைப் போன்றாகும். அரஃபா நாள் நோன்பு கழிந்த ஒரு வருடத்தின், வரும் ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என எண்ணுகிறேன். ஆஷூரா தின நோன்பு வரும் வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் என எண்ணுகின்றேன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ கதாதா (ரழி), முஸ்லிம்).

யூதர்களுக்கு மாற்றம்: –

عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا يَوْمَ عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ صُومُوا قَبْلَهُ يَوْمًا أَوْ بَعْدَهُ يَوْمًا (أحمد).

‘நீஙகள் ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்னாலோ பின்னாலோ ஒரு நாள் நோன்பிருங்கள்.” என் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), அஹ்மத்).

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (أحمد).

ஆஷூரா தினத்தில் நபியவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்துவிட்டார்கள்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி). அஹ்மத்).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed