மனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா?

ஆசி வழங்குதல் என்பதற்கு அருள் புரிதல் (Blessing) என்ற பொருளுடனே முஸ்லிம்களில் பலர் இந்த சொற்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இது இறைவனுக்கு மட்டுமே உரித்தான தனி ஆற்றலானும்! மனிதர்களாலோ அல்லது அல்லாஹ்வால் படைக்கப்பட்ட வேறு எந்தப் படைப்புகளாலும் இன்னொரு மனிதனுக்கு ஆசி வழங்க இயலாது!

மூத்திரக் குழாயின் வழியே வெளியேறிய அற்ப விந்துத் துளியின் மூலமாக பிறந்து மலத்தையும், மூத்திரத்தையும் சுமந்துக் கொண்டு அதுவும் அவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அடக்கி வைக்கக்கூட இயலாத மிக மிக பலகீனமான மனிதன் எப்படி தன்னைப் போலுள்ள மற்ற மனிதர்களுக்கு ஆசி வழங்க முடியும்?

அறிவை ஷைகுமார்களிடத்தில் அடகு வைத்தவர்களின் கிறுக்குத் தனமான பொய் புளுகுகள்களால் புனைந்துரைக்கபட்டவைகள் இந்த மகான்களும், நபிமார்களும் ஆசிவழங்குவார்கள் என்பதாகும்.

சிறிது முளையுள்ளவன் கூட சிந்தித்தால் தெளிவடையக் கூடிய இந்த விசயத்தில் நமது முஸ்லிம்கள் சிந்திக்க மறந்ததேனோ?

கேவலம் தனக்குத் தானே உதவி செய்துக் கொள்ள சக்தியற்ற இந்த மனிதன் ‘செத்து மக்கி மண்ணாகிப் போன பின்பும் உயிரோடிருப்பவர்களுக்கு ஆசி வழங்குகின்றான்’ என்பது தான் அறிவீனத்தின் உச்சம்!

முஸ்லிம்களில் சூஃபியிஸத்தைப் பின்பற்றாத பெரும்பாண்மையானவர்கள் கூட தங்களின் திருமண அழைப்பிதழ்களில் ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும்’ என்ற வாக்கியத்தையும் இன்னும் சிலர் ‘அவுலியாக்கள், அன்பியாக்கள் துஆ பரக்கத்தாலும்’ என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம்!

இது அறியாமையின் உச்சமே தவிர வேறில்லை!

இறந்தவர்களால் எந்தவொரு நல்லமலும் செய்ய இயலாது! அவ்வாறிருக்க அவர்கள் நமக்காக ஆசிவழங்கவும், துஆ செய்யவும் எவ்வாறு இயலும் என்று சிந்தித்தால் இதுபோன்ற தவறுகளிலிருந்து விலகலாம்!

அல்லாஹ் கூறுகின்றான்:

அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (அல்-குர்ஆன் 7:197)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed