இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம் – Part 6

இந்த பகுதியைப் படிப்பதற்கு முன்னர் முந்தைய பகுதிகளைப் படிக்கவும் – நிர்வாகி.

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம் Part-1, Part-2, Part-3, Part-4 & Part-5

இதுவரை ஆண்களுக்கான உபயோகமுள்ள குறிப்புகளைப் பார்த்தோம். இனி பெண்களுக்கு: –

(1) திருமணம் நிச்சயம் செய்வதற்கு முன்பு உங்களுக்கு கணவராக தேர்ந்தெடுக்கப்படுகிறவரை பற்றிய எல்லா விபரங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டு, நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவியுங்கள். உங்களுக்காக உங்கள் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் ஆணின் உடல் நலம் குறித்து நன்கு விசாரித்து அறியுங்கள். சந்தேகமாய் இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை (medical test) செய்யச் சொல்லி அதன் முடிவுகளை உங்கள் குடும்ப மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை கேளுங்கள்.

(2) வரதட்சனை கேட்கும் ஆண்களை கண்டிப்பாக கணவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவ்வரதட்டசனை எந்த விதத்தில் இருந்தாலும் சரியே! அந்த ஆணையும் அவரின் குடும்பத்தையும் நிராகரியுங்கள்.

(3) நீங்கள் திருமணம் செய்யப் போகும் ஆண், இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு நபராக (practicing muslim) இருக்கிறாரா என்று அறிந்து அதன் பின்னரே திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளுங்கள். இந்தோனேஷியா போன்ற இஸ்லாமிய நாடுகளில், திருமணத்திற்கு பெண் தேடும் ஆணிடம், பல பெண் வீட்டார்கள், அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டாரா என்று அறிந்து அதன் பின்னரே திருமணம் முடிக்க ஒத்துக் கொள்கின்றனர். இது பலகாலமாக அங்கு இருந்துவரும் நடைமுறை. நம் இந்தியத் திருநாட்டைப் பொறுத்தமட்டில், ஐவேளை தொழுது கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஜக்காத்தை கணக்குபார்த்து கொடுப்பவராக இருந்தால் அவரை கணவராக அடைவது மிக சிறப்புடையதாக இருக்கும்.

(4) உங்கள் பெற்றோர் உங்களுக்காக தேர்ந்தெடுத்தவர் இஸ்லாத்தைப் பற்றி சரியாக அறியாதவராக இருந்தால், திருமணத்திற்கு பின் உங்கள் அன்பாலும், நல்லுபதேசத்தாலும் அவரை இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் முஸ்லிமாக மாற்ற முயலுங்கள். உங்கள் கனிவான சொல்லும், இடைவிடா முயற்சியும், இறைவன் நாட்டப்படி அவரை நேர்வழியின்பால் இட்டுச்செல்லும்.

(5) திருமணத்திற்குப் பிறகு தாய்மை அடைவதை தள்ளிப்போடாதீர்கள். தாய்மை அடைவதை தள்ளிப்போட கருத்தடை மாத்திரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகக்கேடு விளைவிக்கும். நீண்ட நாட்களுக்கு கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் பெண்களுக்கு பிறகு எவ்வளவு தான் முயற்சித்தாலும் கருவுற இயலாமல் போகும். இக்காலத்தில் படித்த பெண்களிடையே, குழந்தை அதிகம் பெற்றுக் கொள்ளும் ஆசையில்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் ஓரிரு குழந்தையோடு நிறுத்திக் கொண்டு வேலை செய்பவராக இருந்தால் தனது வேலை (career), பதவி உயர்வு (promotion) போன்றவற்றிற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் தான் பெற்ற குழந்தைகளையே நன்கு கவனித்து வளர்க்க முடியாமல் ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழமுயற்சி செய்யலாம். அல்லது தன் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்வித்து தன் குழந்தைகளையும் அப்பெண் கவனித்துகொள்ள ஏற்பாடு செய்யலாம்.

(6) நீங்கள் முதல் மனைவியோ அல்லது இரண்டாம் மனைவியோ, உங்கள் கணவர் உங்களிடம் தங்கும் நாட்களில் அவர் தாம்பத்ய உறவுக்கு உங்களை அழைத்தால் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் அவருடன் முழுமனதுடன் ஒத்துழையுங்கள். இவ்விஷயத்தில் கணவரின் திருப்தி ஒன்றை ஒன்றை மட்டுமே உங்களின் லட்சியமாக கருதுங்கள். கணவன் அழைக்கும் போது ஏதாவது காரணம் கூறி மறுத்துக்கொண்டிருந்தால் அக்கணவன் மறுக்கும் மனைவியை விவாகரத்துச் செய்ய இஸ்லாமிய சட்டத்தில் இடமுண்டு. ஒரு பெண்ணை திருமணம் செய்யும் முதல் நோக்கமே தகர்ந்து போனபட்சத்தில், அவளுடன் போலியான வாழ்க்கை வாழ எந்த ஆணும் விரும்பமாட்டார். திருப்தியான தாம்பத்யம் இல்லையெனில் அதிக குழந்தைகளை பெறுவது காணல் நீர்தான்.

(7)குழந்தைப் பிறந்த அன்றிலிருந்து ஒரு முஸ்லிம் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். எவ்வளவு உயர்ந்த வகை புட்டிப்பாலாக இருந்தாலும், பசும்பாலாய் இருந்தாலும் தாய்ப்பாலுக்கு ஈடாகாது என்பதை இக்காலத்தில் மருத்துவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் தாய்ப்பால் கொடுக்காமல் குழந்தையை வளர்க்கும் பெண்களுக்கு அதிகமாய் மார்பு புற்றுநோய் (Breast cancer) வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை பிறந்து முதல் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் வரை தாயிடம் சுரக்கும் பாலை, ‘சீம்பால்’ (colostrum) என்பார்கள். இந்த சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும், மருந்துப்பொருட்களும் உள்ளன. இந்த சீம்பாலில் தேவையான அளவிற்கு கால்ஷியம் (calcium), பொட்டாஷியம் (Potasium), புரதச்சத்துக்கள் (Protiens), கொழுப்பு மற்றும் கரையக்கூடிய வைட்டமீன்கள் (Fat Soluble Vitamins), தாதுப்பொருட்கள்(minerals), மற்றும் ஆண்டிபாடீஸ்(anti-bodies) அடங்கியுள்ளன. இப்பாலை அருந்துவதால் குழந்தைக்கு நான்கு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக மருத்துவக்குறிப்புகள் கூறுகின்றன.

(8) குழந்தை பெற்றுக்கொள்வதில், அண்டை வீட்டுக்காரியையோ, உங்கள் நெருங்கிய சொந்தக்காரர்களையோ பின்பற்றி ஒன்று அல்லது இரண்டு போதும் என்று நிறுத்திவிடாதீர்கள். அதிகமாக குழந்தைகளை பெற்று அவர்களை நல்ல முறையில் வளர்த்து மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக வாழமுயலுங்கள். உங்கள் வாழ்க்கையின் சாவி (key)உங்கள் கையில் தான் உள்ளது.

இதுவரை பெண்களுக்கான சில பயனுள்ள குறிப்புகளை கண்டோம். இதுவரையில் நீங்கள் படித்த இந்த ஆக்கத்தில் ஏதேனும் சந்தேகமோ அல்லது மாற்றுக் கருத்துக்களோ இருந்தால் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ் அதற்குரிய பதிலைத் தருகிறோம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
4 thoughts on “இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம் – Part 6”
  1. Assalamu alaikum !
    Really a scientific approach ! I appreciate Br. Abu Rizwan.

  2. alhamdulillah your article is very nice allah will help for this website and br.Abu Rizwan
    jazakallahu qair..

  3. அஸ்ஸலாமு அலைக்கும் மாஷாஅல்லாஹ் இந்த கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது.நீங்கள் சொல்வது போல் நாம் இஸ்லாமியர்கள் நடந்துகொண்டார்கள் என்றால் நம் இஸ்லாம் சீக்கிரமே வளர்ச்சியடையும் இன்ஷாஅல்லாஹ்.பெண்களுக்கு கொஞசம் விட்டுகொடுக்கும் மனப்பாண்மை வந்துவிட்டால் போதும்.நீங்கள் ஆண்கள் மறுமணம் செய்வதற்க்கு முதல் மனைவி அனுமதி தேவையில்லை என்கிறீர்கள்,ஆனால் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்தால் முதல் மனைவி விவாகரத்து கேட்கிறார்களே…இத்னால் குழந்தைகளை தரகூட மறுக்கிறார்கள்.இது எனது ஊரில் நடந்தது.உங்களுடைய இந்த கடுரையை எல்லரும் படித்தால் கொஞ்சமாவது புரியும். அல்லாஹ் எல்லாருக்கும் நல்ல காண்பித்து இஸ்லாம் மென்மேலும் வளர தௌfபீக் செய்வானாக ஆமீன்.

    1. @abdul hameed,

      As per our Islamic Shariah, if you want to marry a second wife while your first wife is alive and has children too, you do not need the permission of your first wife to marry another girl for second wife. But it does not mean that you should secretly marry the second wife. Moreover, You must inform the first wife before marrying the second girl about your intension. And then you can go ahead with the marriage with second girl.

      For children custody, as per shariah, the children from first wife must be brought up by the first wife only. If the first wife ask for diverse, the husband need not give diverse to her if she likes her and loves her, he can keep the first wife and second wife and make justice between two girls. If the first wife does not want to live with the husband after his second marriage due to anger, she can go the Jama’at leader and ask for Qula. It is a self induced diverse from wife side. There is no need for a reason from the girl side but she must understand she will be even worst looser if she asks for Qula. If a Qula is given and Jama’at is notified and the husband is notified about the Qula, then the children can stay with the first wife upto the age of 6 years complete. After 6th year completed, the children must be handed over to the father to raise them in a very good Islamic way. The first wife now got the Qula from her husband and she has to observe Iddah for one month only and then she can remarry any muslim whom she likes. She is not entitled to have the children from her first husband and the children are his children and he has to bring them up until their adult age. However, the children can visit their mothers often and can have social relationship with her. This is the Shariah rules.

      Now you can compare the Shariah rules with the Muslim community customs in our places.

      For spreading this article amoung Muslim males and females, you can email it to anyone you want to and make copy and distribute to anybody.

      Allah knows the best.

      Your brother in Islam
      Abu Rizwan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed