ஈமானின் தடைகற்களும் படிக்கட்டுகளும்!!

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

A) ஈமானை அதிகரிக்கச் செய்யும் காரணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) கல்வி அறிவு:

“எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 4:162)

2) அகம்பாவம் இல்லாமல் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளல்:

“அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு” (அல்-குர்ஆன் 28:83)

3) பிரபஞ்சத்தில் உள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பிரதிபலித்தல்:

“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன” (அல்-குர்ஆன் 3:190)

4) இறை நிராகரிப்பாளர்களின் முடிவை சிந்தித்து பார்த்தல்:

“அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன” (அல்-குர்ஆன் 22:46)

5) அல்லாஹ்வின் வேதத்தையும், வசனங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தல்:

“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்: (அல்-குர்ஆன் 38:29)

6) மனோ இச்சைகளைப் பின்பற்றாதலிருத்தல்:

“எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் – அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக” (அல்-குர்ஆன் 42:15)

7) நம்பிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்து நிராகரிப்பவர்களுடன் தொடர்பை விட்டுவிடுதல்:

“அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்” (அல்-குர்ஆன் 25:27)

“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?” (அல்-குர்ஆன் 25:28)

8) நற்சிந்தனைகளை மேம்படுத்துதல்:

“இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்” (அல்-குர்ஆன் 67:10)

9) நற்செயல்களை நேசித்து பாவச்செயல்களை வெறுத்தல்.:

“அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் – அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்” (அல்-குர்ஆன் 49:7)

10) ஈமானை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம், அல்லாஹ்வின் விருப்பம்:

“மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்” (அல்-குர்ஆன் 10:25)

B) ஈமானின் தடைகளாக இருக்கும் காரணிகளை பார்ப்போம்!

1) அறியாமையையும், உயரிய இஸ்லாமிய போதனைகளைகளையும் பின்பற்றாமல் இருத்தல்:

“அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக” (அல்-குர்ஆன் 10:39)

“அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 6:111)

2) யூதர்களைப்போல பொறாமை மற்றும் வெறுப்பு கொள்ளுதல்:

“வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:109)

3) இறை நிராகரிப்பு:

“எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்” (அல்-குர்ஆன் 7:146)

4) உண்மையை புறக்கணித்தல்:

“எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை – நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் – நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 42:48)

“ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ – இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்” (அல்-குர்ஆன் 53:29)

5) உண்மையை உணர்ந்த பின்பும் அதை ஏற்க மறுத்தல்:

“எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:20)

6) ஆடம்பரம், வீண்விரயத்தில் திளைத்திருத்தல்:

“அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 46:20)

7) உண்மையையும் அதை பின் பற்றுபவர்களையும் அற்பமாக நினைத்தல்:

“அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 26:111)

8) இறைவனை புறக்கணித்து ஷைத்தானை பின்பற்றுதல்:

“பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 10:33)

9) கடின நெஞ்சமுடையோராக இருத்தல்:

“நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்” (அல்-குர்ஆன் 6:43)

10) அல்லாஹ இறக்கிய வேதத்தை வெறுத்தல்:

“அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான். ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்” (அல்-குர்ஆன் 47:8,9)

அல்லாஹ் நன்கறிந்தவன்.

Hits: 155

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *