ஒரு தடவை சூரா யாஸீன் ஓதினால் 10 தடவை அல்-குர்ஆனை ஓதிய நன்மை கிடைக்குமா?

இமாம் திர்மிதி அவர்கள் 2887 இலக்கத்திலும் இமாம் அல்காலி அவர்கள் தனது முஸ்னதுஸ் ஷிஹாப் எனும் கிரந்தத்தில் 1035 இலக்கத்திலும் ஹாரூன் அபீ முஹம்மத் என்பர் ஊடாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எல்லாவற்றுக்கும் இதயம் இருக்கின்றது. அல்குர்ஆனின் இதயம் யாஸீன் (அத்தியாயம்) ஆகும். யார் யாஸீனை ஒரு தடவை ஓதுகின்றாறோ அவர் அல்குர்ஆனை 10 தடவை ஓதியதற்கு சமமாகும் “

இந்த செய்தியை அறிவிக்கும் இமாம் திர்மிதி அவர்கள் இந்த செய்தி அறிமுகமற்ற செய்தியாகும். மேலும்

‘இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரூன் அபூ முஹம்மத் என்பவர் அறியப்படாதவராவார்’ என்கிறார்.

இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள்,

‘இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது’ என தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

இமாம் பைஹகியின் ‘ஷுஅபுல் ஈமான்’ எனும் கிரந்தத்தில் 2232 இலக்கத்தில் பதியப்பட்ட இன்னொரு செய்தியில் ‘ஹஸ்ஸான் இப்னு அதிய்யா’ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக

“யார் யாஸீனை ஓதுகின்றாரோ அவர் அல்குர்ஆனை 10 தடவை ஓதியவர் போன்றவராவார்”

என்று கூறுகிறார்.

இந்த செய்தியை அறிவிக்கும் ‘ஹஸ்ஸான்’ ஒரு சஹாபி கிடையாது. இவர் ஒரு தபஃ தாபியாவார். எனவே இந்த செய்தியையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இமாம் பைஹகி அவர்கள் பதிவுசெய்திருக்கும் இன்னுமொரு செய்தியில் (2238) ‘ஸுவைத் இப்னு அபீ ஹாதிம்’ வழியாக அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில்

“யார் யாஸீனை ஓதுகின்றாரோ அவர் அல்குர்ஆனை 10 தடவை ஓதியவர் போன்றவராவார்”

“இந்த அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஸுவைத் என்பர் பலஹீனமானவர்” என இமாம் நஸாயீ கூறுகின்றார். மேலும் இவர், ‘நம்பத்தகுந்தவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்’ என இமாம் இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்.

மேலும் இந்த செய்தியை இமாம் அல் காலி தனது “முஸ்னதுஸ் ஷிஹாப்” எனும் கிரந்தத்தில் 1036 இலக்கத்திலும்

இமாம் அஹ்மத் இப்னு மனீஃ தனது “அல் மதாலிபில் ஆலிய்யா” எனும் கிரந்தத்தில் (15-136) பக்கத்திலும்

இமாம் அல் முஸ்தஃபிரி தனது “பலாயிலில் குர்ஆன்” எனும் நூலின் 865, 866 இலக்கங்களிலும் அறிவித்திருந்தாலும் மேற்படி அனைத்து அறிவிப்புக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி தொடர்பான அறிவிப்புக்களை ஒன்று சேர்த்த அஷ் ஷெய்க் முஹம்மத் அம்ரு அப்துல் லதீப் (ரஹ்) அவர்கள் ‘தராசில் வைக்கப்பட்ட யாஸீன் அல்குர்ஆனின் இதயம் என்ற செய்தி’ என்று ஒரு நூலை நமக்காக விட்டுச் சென்றுள்ளார். அதில் இந்த செய்தி எந்த அளவுக்கு பலஹீனமானது என்பதை விபரிக்கின்றார் .

மேலும் இந்த செய்தியின் தரம் தொடர்பாக இமாம் இப்னுல் பாஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்க்கப்பட்ட போது, ‘இந்த செய்தி அடிப்படைகள் அற்ற பலஹீனாமான செய்தியாகும்’ என பதிலளித்தார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed