தளம் பற்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம்.

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.

இந்த வலைதளம்  எந்த ஒரு இயக்க சார்போ அல்லது எதிர்ப்போ இல்லாதது.  இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ‘நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள்’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.

இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இந்த வலைதளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் அனைத்தும் மக்கள் பயன் பெறுவதற்காகத்தான். எனவே இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் காப்புரிமை இல்லாதது. இதில் உள்ளவாறே எவ்வித மாற்றமும் இல்லாமல் தங்களுடைய தளங்களிலோ அல்லது வலைப்பூவிலோ வெளியிடலாம்.  (No Copyrights; You can utilize as it is including email, publish in your website or blogspot etc.)

மேலும் தங்களுடைய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் உரைகளை இதில் இடம் பெற வேண்டுபவர்கள், எங்களுக்கு அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் அதை நாங்கள் பரிசீலித்து வெளியிடுவோம். ஆக்கங்களை அனுப்புவோர் பின்வருபவற்றை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

 1. ஆக்கங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்
 2. ஆக்கங்கள் சுருக்கமானதாகவும், அதே நேரத்தில் கூற வேண்டிய கருத்தை தெளிவாகக் கூறக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
 3. சமுதாயத்தில் நடைபெறும் ஷிர்க், பித்அத், மார்க்கத்தின் பெயரால் பிரிவினைகள் மற்றும் பிற அனாச்சாரங்கள்,  தவறுகளைச் சுட்டிக் காட்டலாமே தவிர தனிநபர் விமர்சனம் கண்டிப்பாக கூடாது.
 4. ஆக்கங்கள், தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்புடையதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையோ அல்லது அதன் தலைவர்களை எதிர்க்கின்றதாகவோ, விமர்சிப்பதாகவோ கண்டிப்பாக  இருக்கக்கூடாது.
 5. இயக்கங்களின் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் கண்டிப்பாக வெளியிடப்படாது
 6. கருத்து வேறுபாடுகள் நிறைந்த ஆக்கங்களாக இருந்தால்  அவை மார்க்க அறிஞர்களின் பரிசீலனைக்குப் பிறகு பதிவதற்கு தகுதியுடையதாக இருந்தால் மட்டுமே பதியப்படும்.
 7. அனுப்பப்படும் ஆக்கங்களை பதிவதற்கோ அல்லது பதியாமல் இருப்பதற்கோ நிர்வாகிக்கு முழு அதிகாரம் உள்ளது.

இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள், சமுதாயத்தில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க், பித்அத் போன்ற அநாச்சாரங்களைக் களைவதற்காகவும், மார்க்க அடிப்படை விசயங்களைத் தேவைப்படுவோருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் தானே தவிர மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்குவதற்கல்ல! எனவே மார்க்கத்தின் பெயரால் பல பிரிவுகளாகச் சிதறுண்டு கிடக்கின்ற இயக்கங்கள், பிரிவுகள், ஜமாஅத்துகள் ஆகியவற்றின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய, சமுதாய நலனில் அக்கரையுடைய சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் கட்டுரைகள், உரைகள்,  கவிதைகள் வரவேற்கப்படுகின்றது. இத்தகைய ஆக்கங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் தமிழ் பேசும் மக்களிடையே எடுத்துச் கூற எனக்கும் உங்களுக்கும் அதிக ஆர்வத்தைத் தந்து அதன் மூலம் ஈருலகிலும் அதிக பலன்களை அல்லாஹ் நமக்கு அருள்வானாகவும். ஆமின்.

தங்களின் இஸ்லாமிய சகோதரன்.

நிர்வாகி,சுவனத்தென்றல்.காம்

Hits: 2402

மற்றவர்களுக்கு அனுப்ப...

30 comments

 • raja mohammed

  nalla muyarchi

 • jahabarsathik

  எந்த இயக்கமும் இல்லை என்பதால் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்

 • Rajamohamed

  உங்கள் நோக்கம் சரி என்றால் ரஹ்மத்துல்லாஹ் KS மாநாட்டை பற்றி தமது பயானில்
  விமர்சிக்கிறார் அது கீழ் குறிப்பிட்ட விதியை மீறுவதாக உள்ளதே இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

  ‘ஆக்கங்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்புடையதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையோ அல்லது அதன் தலைவர்களை எதிர்க்கின்றதாகவோ, விமர்சிப்பதாகவோ கண்டிப்பாக இருக்கக்கூடாது’

  விளக்கம் கொடுப்பீர்களா?

  • நிர்வாகி

   அன்பு சகோதரர் ராஜா முஹம்மது,

   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

   ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ அல்லது தனிநபர் பற்றிய விமர்சனங்களையோ நமது தளத்திலே பதிவது இல்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதில் எவ்வித மாறுமாடும் இல்லை. நமது மக்கள், இயக்க சிந்தனைகளிலிருந்து விடுபட்டு ‘முஸ்லிம்கள்‘ என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

   அதே நேரத்தில் நமது சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும் விதத்தில், சமுதாய மக்கள் தவறான வழியில் நடத்தப்படும் போது, மார்க்கத்திற்கு முரணான செயல்கள் மக்கள் மன்றத்தில் பரப்பப்படும் போது, இன்னும் மக்கள் குர்ஆன், ஹதீஸின் வழிமுறைகளைப் பின்பற்றுவதை விட்டும் வேறு பாதையிலோ அல்லது தனிநபரையோ பின்பற்றிச் செல்கின்ற போது அல்லது மார்க்கத்திற்கு முரணான இன்னும் ‘பிற தவறுகள்’ நமது சமுதாயத்தில் நடைபெறும் போது ‘விதி எண் மூன்றில்’ கூறப்பட்டிருப்பது போன்று அவைகள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கப்படும் என்பதையும் நாம் தெளிவுபடுத்துகின்றோம். ஆயினும் மார்க்கத்திற்கு முரணான இத்தகைய செயல்கள் தான் சுட்டிக்காட்டப்படுமேயல்லாது ஒருவரது தனிப்பட்ட தவறுகள் சுட்டிக்காட்டப்படமாட்டாது.

   எனவே தாங்கள் குறிப்பிடுவது போல எந்த ஒரு விதியும் மீறப்படவில்லை! ‘விதி எண் நான்கை’ மீண்டும் ஒருமுறை நன்றாகப் படித்துப் பார்த்து அது எவ்வாறு மீறப்பட்டிருக்கின்றது என்பதை ஆதாரத்துடன் கூறுங்கள்.

   • Mohamed Muthu

    Perfect reply…..

    I like this page … bcoz of no relation with any organisation.

    This is the first time i have visited this website. All articles are reflecting today world effects… So I would like to say many thanks to this website creator & his team.
    Today our society don’t have much awareness about our youngsters life style. This website which it has been produced would induce good direction if it is been read.

   • muhammed harish

    @நிர்வாகி, அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் பதிய விதிர்க்கும் ஆடிஎஒ வீடியோ எல்லாம் ஜாக் அமைப்பின் பேச்சாளர்களின் ஆக்கங்கள் ஒரு அமைப்பு சார்ந்து செயல் படும் நீங்கள் ஏன் பொய் சொல்கிறீர்கள்

 • va.me salahudeen

  நண்பர் ராஜா முஹம்மதின் கேள்வி நியாயமானது.அதே சமயம் ஆசிரியரின் பதில் மிகவும் நியாயமாகவும் பொருமையாகவும் இருந்தது.பொருமை மற்றும் சகோதரத்துவம் இவ்விரண்டும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு இறைவன் கொடுத்த அருட்கொடை.நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.ஆமீன்.
  வ.மீ.ஸலாகுத்தீன்.துபை.யு.ஏ.இ

 • shafeeq bin nooh

  Assalamu alaikum varahmathullah, Anbu sahotharar Aasiriyar avarkalukku, Intha Fithnaa niraintha kaalakattathil iyakkam saarbillatha ungal inaya thalathirkum Ungalukkum ALLAH arul puriyattum.ILM-KALVI sambanthamaka iruppadhal Thangal peyaraium pira aasiriyarkalin peyaraium kurippidallamey.yenenil naan arintha varai ILM-KAVI i yaaridam irunthu yedupppadu yentu therivadu avasiyam. unkal peyarai website il veliyida viruppamillavittal yenathu email id kku anuppavum.naan unkalidam irunthu kalvi karka virumbukirane.JAZAKUMULLAAHU KHAIRAN VA BAARAKALLAHU FIKUM

 • haja jahabardeen

  HAJRATH ALI AKBAR OUMARI HIS SPEECH IS VERY CLEAR AND WE COULD FACILITY UNDERSTAND, HE WILL BE REWARDED BY ALLAHU .

 • jahubarjaseem

  alhamthulillah
  ottrumaiyai virumbum sahotharan

 • sheikmasthan

  Alhamdulillah,

  The topics, which are available is very useful and also it has cleared so many doubts also to me.

  can i have ur full name pls.

  regards,\
  sheik,

 • haja jahabardeen

  how can i ask any question , by e-mail or any another way to ask the question please replay me FROM PARIS, ASSALAMU ALAIKKUM.

 • Ashik, Dubai

  மௌலவி அலி அக்பர் உமரியின் உரை மிகவும் எளிமையாகவும் பாமரர்களாலும் புரியும் விதமாக உள்ளது.

 • abdul hameed

  ASSALAMU ALIKUM

  HAJ PROGRAMES IS VERY USEFULL AND EXCELLENT

  REALLY WE GOT MORE INFORMATION ABOUT HOW TO PERFORM HAJ

  THANKS LOT….

  WASSALAM

 • mohammed fazil

  assalamu alaikum.
  very good opportunity to get good information’s every day from your side & i have to ask one question from you.what is the different in between (jinn & Saith an) ? broth are same or different? please try to give the answer in tamil.and if you can insert tamil typing also in your web side it will be easy to all?
  jazakkalah

 • hajira thajun

  அடையாள அட்டை

  பெயர்: வட்டி
  புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி.
  உடன்பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ்.
  நண்பர்கள்: பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள்.
  எதிரி: தர்மம்,ஸகாத்.

  தொழில்: பொருட்களைச்சுரண்டுதல்.
  உபதொழில்: உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல்.
  சுற்றுலாத்தலம்: பேங்க், நகைக்கடை,அடகுக்கடை.
  அலர்ஜி: வட்டியில்லாக்கடன்.
  விரும்புவது: உயிர்,சொத்து.
  விரும்பாதது: தனக்கெதிரான பிரச்சாரம்.

  எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது.
  சாதனை: உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்தியாவிற்கு முதலாவது இடம்.

  பரிசு: நிரந்தர நரகம்.

  எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின்பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.
  இதைப்பற்றி, அல்லாஹ் தன்திருமறையில்,

  2:276 يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

  2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

  3:130 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

  3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.

  இன்னும் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:

  ‘வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி.

  5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்:

  பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

  இப்படி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் ஏன் போக வேண்டும்.
  சிலர், பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள்.வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள்.பிறகு என்ன தான் செய்வது? வட்டிகுதான் கடன் வாங்க வேண்டி வருகிறது என்று கூறுகிறார்கள். பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப்பணம் கிடைக்கும் என்ற எண்ணம் இருப்பதால்தானே வட்டியின் பக்கம் போகிறோம்.வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்று சிந்தியுங்கள். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா? உணவு எதுவும் கிடைக்காத உயிர்போகும்பட்சதில் பன்றிமாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதே போன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றிமாமிசமாகக் கருத வேண்டும்.

  ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தான் எத்தனை? தனது கற்பைப் பரிகொடுத்த பெண்கள் தான் எத்தனை? தனது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் தான் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பதும், வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல. அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். இதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் கூட. இதைப்பற்றி அல்லாஹ் தன திருமறையில்,

  2:275 الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

  2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
  இன்னும் 2085. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  “இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

  “அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.” என ஸமுரா(ரலி) அறிவித்தார்.

  எனவே அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,

  நம்மில் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வட்டியில்லாக்கடன் கொடுக்க முன்வர வேண்டும்.வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப்போராட வேண்டும். வட்டியில்லாக்கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்ப்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க்கொல்லி இந்தஉலகை விட்டு ஒழியும்.இன்ஷா அல்லாஹ்.

  நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

  அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
  ஹாஜிரா தாஜுன். நவி மும்பை

 • hajira thajun

  Assalamu alaikum
  சுவனத்தென்றல் நிர்வாகத்திற்கு ,
  என்னுடைய இந்த கட்டுரையை பதிவு செய்ததற்கு மிகவும் jazaakallaahu khairan kaseerah.ஆனால் நான் இதை கருத்தாக எழுதவில்லை.எந்த அட்டவணையில் அனுப்புவது என்று தெரியாத காரணத்தினால் கருத்துக்களில் அனுப்பி விட்டேன்.மன்னிக்கவும்.தயவுசெய்து இதை கட்டுரையின் தலைப்பில் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.இந்த கட்டுரை மக்கள் மனதில் பதிய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.ஷுக்ரன்.

  • வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்

   தங்களின் கோரிக்கைக்கிணங்க உங்களுடைய ஆக்கம் தனி கட்டுரையாக பதிவு செய்துள்ளோம். http://suvanathendral.com/portal/?p=2943

   அல்லாஹ் உங்களின் எழுத்தாற்றலை மேன்மேலும் மெருகூட்டுவானாகவும் என்று பிரார்த்திக்கின்றோம்.

   ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

   நிர்வாகி,
   சுவனத்தென்றல்.காம்.

 • RIYAAS

  assalamu alaikum

  manaiviyin kadamaikal enaku teriyapadutavum

 • RIYAAS

  who s doing people heart broken what are the punishment for that persons. than what are the punishment for who s giving wrong or false commitment. our allah and our nabi what tells about this can you please sent detail about this.

 • Assalamu alaikum.

  very good opportunity to get good information’s. I have to ask one question from you

  Actually i am girl. Some Muslims gender said when women’s are going to mosque to pray ( Ramzan. Edul fitar etc…) after that they washing the mosque and their after they are starting their prayers ( gender) this made some misunderstanding to non muslims Please Clear me.

 • JAMEELA MUZAMMIL

  PETRORKALUKKU PANIVIDAY SEYVATHIN SIRAPPUKAL ENRA THALAYPIL MAUOLAVI AZHAR ZEELANI AVARKAL BAYAN SEYTHAL ATHAY NAM EINAYA THALATTHIL THARAUOM

 • shajahan

  why no topics comes out in recent times… i am expecting keenly..kindly update with some topics

 • Assalamu Alaikum var….
  Really a good one..

  If you advertise this website, Such good news and true news will reach most of the people.. Insha allah i shall help you in advertising..

  Gazakallah Kair…

 • SADIQ

  thangalin pani men melum sirappudan thodara vallon allah arul purivanaha. ameen

 • அஸ்ஸலாமு அலைக்கும்.
  இணையதள சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
  எங்களுடைய “தமிழ் தவ்ஹீத்.காம் (www.tamilthowheed.com)” இணையதளத்தை தங்கள் இணையத்தளத்துடன் (லிங்க் LINK பகுதியில்) இணைத்துக் கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுகொள்கிறோம்.
  மிக்க நன்றி, இப்படிக்கு,
  தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.
  தொடர்புகளுக்கு:
  Website: http://www.Tamilthowheed.com
  Email: tamilthowheed@gmail.com
  Facebook: http://www.facebook.com/tamil.thowheed
  Twitter: https://twitter.com/TamilThowheed

 • Abu Darwesh

  இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் சேவை செய்யக் கூடிய மக்களோடு எம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் இணைத்திடுவானாக! மனித சமுதாயத்திற்கு செய்யும் பெறும் சேவை அவர்களுக்கு இறை வழிகாட்டலை எத்திவைப்பதாகும். எனவே அந்த பணியை இந்த இனையதளத்தினூடாக செய்யும் உங்கள் சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

 • Satham hussain

  இது போன்ற செய்திகளை whatapp ல் பெற முடியுமா தோழரே?

  • நேரமின்மையின் காரணமாக வாட்ஸ்அப் மூலமாக சேவைகளை நமது தளத்தின் சார்பாக நாம் செய்வதில்லை!

   இருப்பினும் தங்களின் சந்தேகங்களை பின்வரும் சுட்டியின் மூலமாக பதிந்தால் நமக்கு நேரம் கிடைக்கும் போது இன்ஷா அல்லாஹ் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

   http://suvanathendral.com/portal/?page_id=9964

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *