1- மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
2- தொழுகையை கடைப்பிடிப்பார்கள்.
3- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள்.
4- அல்லாஹ்வின் தூதருக்கு அருளப்பட்ட வேதத்தையும் அவருக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களையும் நம்புவார்கள்.
5- இறுதி நாளை உறுதியாக நம்புவார்கள்.
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 2: 3,4,5).
===============================
6- மக்களை நன்மையின் பக்கம் அழைப்பார்கள்.
7- நன்மையை ஏவுவார்கள்.
8- தீயதை விட்டு மக்களைத் தடுப்பார்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 3: 104).
===============================
9- நன்மையின் எடை கனத்தவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 7: 8. (அல்குர்ஆன் 23: 102).
===============================
10- இறுதித் தூதரை உண்மையாகவே நம்பியவர்கள்.
11- அவரை கண்ணியப்படுத்தியவர்கள்.
12- அவருக்கு உதவி செய்தவர்கள்.
13- அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தை பின் பற்றியவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 7: 157).
===============================
14- தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து அல்லாஹ்வின் வழியில் போர் புரிபவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 9: 88)
===============================
15- அல்லாஹ்வினதும், அவனது தூரினதும் தீர்ப்புக்கு செவியேற்றுக் கட்டுப்பட்டவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 24: 51)
===============================
16- அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 24: 52)
===============================
17- இறை திருப்திக்காக உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துதவுபவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 30: 38)
===============================
18- தொழுகையை கடைப்பிடிப்பார்கள்.
19- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள்.
20- இறுதி நாளை உறுதியாக நம்புவார்கள்.
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 31: 4,5).
===============================
21- அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட இவர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. படியுங்கள்: (அல்குர்ஆன் 58: 22).
===============================
22- உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 59: 09). (அல்குர்ஆன் 64: 16).
===============================
23- இறை நம்பிக்கை கொண்டவர்கள்.
24-ஹிஜ்ரத் செய்தவர்கள்.
25- தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்கள். படியுங்கள்: (அல்குர்ஆன் 9: 20).
===============================
26- பொறுமையாளர்கள். படியுங்கள்: (அல்குர்ஆன் 23:111).
===============================
27- தொழுகையை உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.
28- வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
29- ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
30- தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
31- தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
32- தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 23:1-9).
===============================
33- தங்கள் ஆத்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டவர்கள்.
படியுங்கள்: (அல்குர்ஆன் 90: 9).