6- மார்க்கத்தின் உறுதிக்காக ஒரு சிறந்த பிரார்த்தனை:
اَللَّهُمَّ ثَبِّتْنِيْ، وَاجْعَلْنِيْ هَادِيًا مَهْدِيًّا
அல்லாஹும்ம ஸப்பித்னீ வஜ்அல்னீ ஹாதியம் மஹ்திய்யா
”இறைவா! என்னை உறுதிப்படுத்துவாயாக! என்னை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!’
நபி (ஸல்) அவர்கள் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு செய்த பிரார்த்தனையை நாமும் ஓதி வருவோம். (புஹாரி 4357)
===========================================
7- நாளை மறுமையின் உயர்வுக்காக ஒரு சிறந்த பிரார்த்தனை:
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ اَللَّهُمَّ اجْعَلْنِيْ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيْرٍ مِّنْ خَلْقِكَ مِنَ النَّاسِ ، اَللَّهُمَّ اغْفِرْ ذَنْبِيْ، وَأَدْخِلْنِيْ يَوْمَ الْقِيَامَةِ مُدْخَلًا كَرِيْمًا
அல்லாஹும்மஃ ஃபிர்லீ அல்லாஹும்மஜ் அல்னீ யவ்மல் கியாமா ஃபவ்க கஸீரிம் மின் ஹல்கிக மினன் நாஸ். அல்லாஹும்மஃ ஃபிர்லி தன்பீ வஅத்ஹில்னீ யவம்ல் கியாமதி முத்ஹலன் கரீமா
‘இறைவா! என்னை மன்னிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (தகுதியில்) உயர்ந்தவராக என்னை ஆக்குவாயாக!’ ‘இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு என்னை அனுப்புவாயாக’
அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களுக்காக செய்த பிரார்த்தனையை நாமும் ஓதி வருவோம். (அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்ரிய் (ரலி) அவர்கள், புஹாரி 4323
===========================================
8- வாழ்க்கையின் செல்வச் செலிப்புக்காக ஒரு சிறந்த பிரார்த்தனை:
اَللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ، وَوَلَدِيْ، وَبَارِكْ لِيْ فِيْمَا أعْطَيْتَنِيْ
அல்லாஹும்ம அக்ஸிர் மாலீ வவலதீ வபாரிக் லீ ஃபீமா அஃதய்தனீ
யா அல்லாஹ் எனது செல்வத்தையும், குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! எனக்கு நீ வழங்கியவற்றில் வளத்தை அளிப்பாயாக!’
நபியவர்கள் அனஸ் (ரலி) அவர்களுக்கு செய்த பிரார்த்தனையை நாமும் ஓதி வருவோம்
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6334)
===========================================
9- மார்க்க விளக்கத்துக்காக ஒரு சிறந்த பிரார்த்தனை:
اَللَّهُمَّ فَقِّهْنِيْ فِي الدِّيْنِ
அல்லாஹும்ம ப(ف)க்கிஹ்னீ பி(ف)த்தீன்
யா அல்லாஹ் ! எனக்கு மார்க்கத்தில் விளக்கம் அளிப்பாயாக!
சிறப்பு:
مَنْ يُّرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ في الدِّينِ
அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க விளக்கம் உள்ளவராக ஆக்குகிறான் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: முஆவியதிப்னு அபீ ஸுஃபயான்(ரலி) அவர்கள், புகாரி 71
===========================================
10- தங்கம் வெள்ளிப் பொக்கிஷங்களை மனிதர்கள் சேமித்துக் கொள்ளும் போது நீர் இந்தப் பிரார்த்தனையை சேமித்துக் கொள்வீராக என நபியவர்கள் உபதேசித்த சிறப்பு மிகு பிரார்த்தனையை நாமும் மனனமிட்டு ஓதி வருவோம்:
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَأَسْأَلُكَ عَزِيْمَةَ الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا، وَقَلْبًا سَلِيْمًا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகஸ் ஸபாத ஃபில் அம்ரி, வஅஸ்அலுக அஸீமதர் ருஷ்தி, அவஸ்அலுக ஷுக்ர நிஃமதிக, வஹுஸ்ன இபாததிக, அவஸ்அலுக லிஸானன் ஸாதிகன், வகல்பன் ஸலீமன், வஅஊது பிக மின் ஷர்ரி மா தஃலமு, அவஸ்அலுக மின் ஹய்ரி மா தஃலமு, வஅஸ்தஃபிருக மிம்மா தஃலமு இன்னக அன்தல் அல்லாமுல் உயூப்
யா அல்லாஹ் (சகல நல்ல) காரியங்களில் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும், உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உண்மை உரைக்கும் நாவையும், தூய்மையான உள்ளத்தையும், நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லா) கெடுதிகளிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன். உனக்குத் தெரிந்த (எல்லா) நலவுகளையும் கேட்கின்றேன். உனக்கு தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை எல்லாம் அறிந்தவன். (அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள், திர்மிதீ 3407, நஸாயீ 1304, அஹ்மத் 17155).
===========================================
11- ஈருலகிற்கும் பயனுள்ளதைக் கேட்போம்
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَّافِعًا، وَأَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَّ يَنْفَعُ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாஃபிஆ, வஅஊது பிக மின் இல்மில் லா யன்ஃபஉ
யா அல்லாஹ் நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன், பயனற்ற கல்வியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.
(அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நூல்: இப்னு மாஜஹ் 3843