1- முதல் மனிதர் ஆதம் நபி படைக்கப்பட்டது போன்றே இறைவனின் “ஆகுக” என்ற கட்டளையின் மூலம் படைக்கப்பட்டார்.
“அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “ஆகுக” எனக் கூறினான்; அவர் ஆகிவிட்டார்.” (குர்ஆன் 3:59)
===========================================
2- “இறைவனின் அற்புதத்தால் தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இயேசு மக்களிடம் பேசினார்.” (குர்ஆன் 19:30-33)
===========================================
3- இயேசு தொட்டில் குழந்தையாக இருந்த போது இதோ அவர் பேசியவை:
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன்;
அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்;
இன்னும், என்னை நபியாகவும் ஆக்கியிருக்கிறான்.”
“இன்னும், நான் எங்கிருந்தாலும் அவன் என்னை (நற்)பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான்;
மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.”
“என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஏவியிருக்கிறான்);
நற்பேறு அற்றவனாகவும், பெருமைக்காரனாகவும் என்னை அவன் ஆக்கவில்லை.”
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர் பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்றும் (அக் குழந்தை) கூறியது.
(குர்ஆன் 19:30-33)
===========================================
4- “இயேசுவுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களையே அவர் பின் தொடர்பவராக இருந்தார்” (திருக்குர்ஆன் 5: 46)
===========================================
5- ஒரே இறைவனை மட்டுமே வணங்குங்கள் என்றே இயேசு மக்களுக்குப் போதித்தார்:
“இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்று; எனவே, எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பானோ, அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாகத் தடுத்துவிட்டான்; மேலும், அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (குர்ஆன் 5: 72)
===========================================
5- இயேசு ஓர் இறைத் தூதரே (குர்ஆன் 5: 75)
நிச்சயமாக இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே குர்ஆன் 4: 171
===========================================
6- ஏனைய மனிதர்களைப் போன்று உணவு உண்டவர் எப்படி கடவுளாக முடியும்?
“இயேசுவும், அவரது தாயாரும் (மற்ற மனிதர்களைப்போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்” (குர்ஆன் 5: 75)
===========================================
7- “இயேசு தன்னை இறைவனின் மகன் எனக் கூறவில்லை, தன்னை இறைவனின் அடிமை என்றே கூறினார்” (குர்ஆன் 19: 30)
===========================================
8- இறைவனின் உதவியால் பல பிரம்மிப்பூட்டும் அற்புதங்களை இயேசு நிகழ்த்தினார். (குர்ஆன் 3:49), (குர்ஆன் 5:110)
===========================================
9- “இஸ்ராயீல் மக்களே இறைவனிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதராவேன் என இயேசு கூறினார்” (குர்ஆன் 61: 06)
===========================================
10- “மோஸேவுக்கு இறைவன் அருளிய தவ்ராத்தை உண்மைப் படுத்துபவனாகவே நான் வந்துள்ளேன் என இயேசு கூறினார்.” (குர்ஆன் 61: 06)
===========================================
11- இறுதித் தூதர் முஹம்மத் நபியின் வருகையைப் பற்றியும் நற்செய்தி கூறினார்:
எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயரில் வர விருக்கும் தூதரைப் பற்றியும் நற்செய்தி கூறினார். (குர்ஆன் 61: 06)
===========================================
12- இறைவனுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? என இயேசு தனது சீடர்களிடம் கேட்டபோது, நாம் இறைவனின் உதவியாளர்கள் என அவரது சீடர்கள் கூறினர். (குர்ஆன் 61: 14), (குர்ஆன் 03: 52)
===========================================
13- இயேசு தன்னை வணங்குமாறு கூறவில்லை, மாறாக ஒரே இறைவனை வணங்குவதே நேர்வழி எனக் கூறினார்:
“நிச்சயமாக, அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே, அவனையே வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்.” (குர்ஆன் 03: 51)
===========================================
14- “இயேசு கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை. இறைவன் தன் பால் அவரை உயிருடன் உயர்த்திக் கொண்டான்” (குர்ஆன் 4:157)
===========================================
15- இயேசு இறைவனின் அடியாரே (திருக்குர்ஆன் 43: 59)
===========================================
16- இயேசு வானுலகிலிருந்து உலக அழிவுக்கு முன்னர் இறங்கி வருவார்
‘நிச்சயமாக அவர் (இயேசு) மறுமைநாளின் அத்தாட்சியாவார்” (திருக்குர்ஆன் 43: 61)
===========================================
17- இறைத் தூதராகிய இயேசுவுக்கு பெயர் வைத்தது இறைவனே (குர்ஆன் 4: 45)
===========================================
18- இயேசு இறைவனுக்கு அடிமையாக இருப்பதை ஒரு போதும் குறைவாகக் கொள்ள மாட்டார் (குர்ஆன் 4: 172)
===========================================
19- இயேசு இறைவனின் மகனல்ல (குர்ஆன் 9: 30)
===========================================