1- “இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்.” (அல்குர்ஆன் 3: 133)
===============================
2- “எவர்கள் தவ்பாச் செய்து மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.” (அல்குர்ஆன்49: 11).
===============================
3- “அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யார்?” (அல்குர்ஆன் 3: 135)
===============================
4- “அல்லாஹ்வோ தன்னிடமிருந்து உங்களுக்கு மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.” (அல்குர்ஆன் 2: 268).
===============================
5- “அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்.” (அல்குர்ஆன் 2: 221).
===============================
6- “அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை – பாவ மன்னிப்புக் கோறுதலை – ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அல்குர்ஆன் 42: 25)
===============================
7- “நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (அல்குர்ஆன் 24: 31).
===============================
8- “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 39:53)
===============================
9- “இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 5: 74).
===============================
10- “மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்” (அல்குர்ஆன் 4: 27).
===============================
11- “எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்” (அல்குர்ஆன் 9: 74).
===============================
12- “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.” (அல்குர்ஆன் 24: 22).
===============================
13- “பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 222).
யா அல்லாஹ் உன் மன்னிப்பை எம் மீது அள்வாயாக!