1- இறையச்சமிக்க வாழ்வு:
وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏ وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ
“எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்” (அல்குர்ஆன் 65: 2,3).

“நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.” (அல்குர்ஆன் 7: 96.)

===============================
2- இறை அருள்களுக்கு நன்றி செலுத்துங்கள்:
لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌

“ நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன். (அல்குர்ஆன் 14: 7).

===============================
3- அதிகம் இஸ்திஃபார் செய்யுங்கள். (பாவ மன்னிப்புத் தேடுங்கள்):

மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (அல்குர்ஆன் 71: 10-12).

===============================
4- தொழுகையை நிறைவேற்றுங்கள்:

“(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.” (அல்குர்ஆன் 20: 132).

===============================
5- தான தர்மம் செய்யுங்கள்:
“நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 34: 39).
வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவுசெய்வேன்’ என்று சொன்னான். மேலும்’ அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்ட எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிட வில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையுளம் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். (புஹாரி 4684)

அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’ (புஹாரி 1442).

===============================
6- ஹஜ்ஜையும், உம்ராவையும் தொடர்ந்து நிறைவேற்றுவது:
“இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று ஹஜ்ஜையும், உம்ராவையும் தொடர்ந்து நிறைவேற்றுவது ஏழ்மைமையையும், பாவத்தையும் நீக்கவிடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நஸாயி 2629).
===============================
7- திருமணம்:

“இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 24: 32).

===============================
8- உறவினர்களுடன் செர்ந்து வாழ்வது:
“ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்’ என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!'” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 2067).
===============================
9- ஏழைகளுக்கு அன்பு காட்டுங்கள், உபகாரம் செய்யுங்கள்:

முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), (தம் வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்) எனக் கருதினார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள், ‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) மூலம் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது, உணவளிக்கப்படுகின்றது” என்று கூறினார்கள். (புஹாரி 2896).

===============================
10- உரிய முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்:

“நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய முறையில் நம்பிக்கை வைத்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான். அவை காலையில் பசியுடன் செல்கின்றன, மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரலி) அவர்கள், திர்மிதி 2344)

===============================
இறுதியாக!
உணவளிப்பவன் அல்லாஹ் என்பதை உறுதியாக நம்பி அனுமதிக்கப்பட்ட வழியில் அதைத் தேடுங்கள். உங்களுக்கு அல்லாஹ் முடிவு செய்து விட்ட உணவை எவனாலும் தட்டிப் பரிக்க முடியாது. உணவை அல்லாஹ்விடமே கேளுங்கள்.
“என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.” என அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸுல் குத்ஸியின் ஒரு பகுதி) (அறிவிப்பவர்: அபூ தர் (ரலி) அவர்கள், முஸ்லிம் 5033)
அல்லாஹிவடம் வாழ்வாதாரத்தைக் கேட்பதற்கு ஒரு பிரார்த்தனை:
தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي.
“அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ”
(இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக” என்றார்கள். இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, “இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை” என்று சொன்னார்கள். முஸ்லிம் 5229)
===============================
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *