1- கற்பொழுக்கத்துடன் வாழ்வதற்கு

اَللَّهُمَّ اغْفِرْ ذَنْبِيْ، وَطَهِّرْ قَلْبِيْ، وَحَصِّنْ فَرْجِيْ

அல்லாஹும்மஃ ஃபிர் தன்பீ, வதஹ்ஹிர் கல்பீ, வஹஸ்ஸின் ஃபர்ஜீ

யா அல்லாஹ் எனது பாவத்தை மன்னிப்பாயாக, எனது உள்ளத்தைத் தூய்மையாக்குவாயாக, எனது வெட்கத் தலத்தைப் பாதுகாப்பாயாக

நபியவர்கள் தனது ஒரு தோழருக்கு செய்த பிரார்த்தனையை தனக்காகக் கேட்டுக் கொள்வது. (அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி) அவர்கள், அஹ்மத் 5/256)

2- பாவங்களிலிருந்து உறுப்புக்களைக் காத்துக் கொள்ள ஒரு பிரார்த்தனை

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ، وَمِنْ شَرِّ بَصَرِيْ، وَمِنْ شَرِّ لِسَانِيْ، وَمِنْ شَرِّ قَلْبِيْ، وَمِنْ شَرِّ مَنِيِّيْ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஷர்ரி ஸம்ஈ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிஸானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யி

யா அல்லாஹ் நான் உன்னிடம் எனது செவியின், எனது பார்வையின், எனது நாவின், எனது உள்ளத்தின், எனது மறைவுறுப்பின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஷகல் இப்னு ஹுமைதுல் அபஸீ எனும் தோழர் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத்தாருங்கள் என நபி (ﷺ) அவர்களிடம் கேட்ட போது எனது கையைப் பிடித்து இவ்வாறு கற்றுத்தந்தார்கள் என அறிவிக்கின்றார். (நூல் நஸாயி 5444)

3- இணை வைப்பிலிருந்து காத்துக் கொள்ள ஒரு பிரார்த்தனை.

அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்த ஒரு பிரார்த்தனை

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு வஅஸ்தஃபிருக லிமா லா அஃலமு

யா அல்லாஹ் அறிந்த நிலையில் உனக்கு இணை வைப்பததை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். நான் அறியாதவற்றிற்கும் (அறியாமல் செய்தவற்றிக்கும்) உன்னிடம் மன்னிப்புத் தேடுகின்றேன்

(அறிவிப்பவர்: மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள், ஸஹீஹ் அதபுல் முஃப்ரத் 551)

4- நரக விடுதலையைப் பெற்றுத் தரும் ஒரு சிறந்த பிரார்த்தனை

اَللَّهُمَّ إِنِّيْ أُشْهِدُكَ وَأُشْهِدُ مَلَائِكَتَكَ وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ

அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக வஉஷ்ஹிது மலாஇகதக வஹமலத அர்ஷிக வஉஷ்ஹிது மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபில் அர்ழி அன்னக அன்தல்லாஹுல்லதீ லா இலாஹ இல்லா அன்த வஹ்தக லா ஷரீக லக வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸுலுக

யா அல்லாஹ் நிச்சயமாக நீ தான் அல்லாஹ். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை, நீ தனித்தவன், உனக்கு எந்த ஒரு இணையுமில்லை என்பதற்கு உன்னையும், உனது மலக்குகளையும், உனது அர்ஷை சுமக்கும் மலக்குகளையும், வானங்களில் பூமியிலுள்ளவர்களையும், சாட்சியாக ஆக்குகின்றேன். நிச்சயமாக முஹம்மத் (ﷺ) அவர்கள் உனது அடியாரும், தூதரும் என சாட்சி கூறுகிறேன்.’
யார் இப்பிரார்த்தனையை 3 முறை ஓதுவாரோ அல்லாஹ் அவரை நரகை விட்டு விடுதலை செய்கிறான் என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: ஹாகிம் 1920)

5- பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பிரார்த்தனை

اَللَّهُمَّ إِنِّيْ أَسْألُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க பிஅன்னீ அஷ்ஹது அன்னக அன்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்தல் அஹதுஸ்(ص)ஸமதுல்லதீ லம் யலித் வலம் யூலத் வலம் யகுல்லஹு குபு(ف)வன் அஹத்

யா அல்லாஹ் ! நிச்சயமாக நீயே இறைவன், வணக்கத்திற்கு உரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை, நீ ஒருவன், எந்தத் தேவையுமற்றவன், எவரையும் பெறாதவன், எவராலும் பெறப்படாதவன், அவனுக்கு நிரகராக எவரும் இல்லையென்றும் நான் சாட்சி கூறுகிறேன்

சிறப்பு
இவ்வாறு ஒருவர் பிரார்த்திப்பதை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக எதைக் கொண்டு பிரார்த்தித்தால் ஏற்றுக் கொள்ளப்படுமோ, எததைக் கொண்டு கேட்டால் கொடுக்கப்படுமோ அந்த மகத்தான அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அவனிடம் கேட்டு விட்டார் எனக் கூறினார்கள்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *