1- குர்ஆனை சிரமப்பட்டு ஓதுபவர்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதிவருகின்றவர் இரு மடங்கு நன்மைகளுக் குரியவரைப் போன்றவராவார். (இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 4937)

===============================

2- நெருங்கிய உறவினருக்கு தர்மம் செய்பவர்:

“இரு நன்மை கள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ((அறிவிப்பவர்: ஸைனப் (ரலி) அவர்கள், புஹாரி 1466). ஹதீஸின் ஒரு பகுதி.

===============================

3- தம் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கமும், கல்வியும் கற்பிப்பவர்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து, தாமே அவளை மணமுடித்துக்கொள்கி றாரோ அவருக்கு இரு நன்மைகள் உண்டு.” (இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 2544).

===============================

4- நல்ல அடிமை:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அடிமை, தன் எசமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நன்முறையில் வழிபடுவானாயின் அவனுக்கு இரு முறை நன்மை கிடைக்கும்.” (இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 2547)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.” இதை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘எவனது கையில் என் உயிர் இருக்கிறதோ அவன்மீது சத்திய மாக! அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாம லிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று சொன் னார்கள். புஹாரி 2548)

===============================

5- மூவருக்கு இரட்டை நன்மை:

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: “மூவருக்கு இரட்டை நன்மைகள் அளிக்கப்படும். அவர்கள்:

1.) ஒருவரிடம் அடிமைப் பெண் இருந்தாள். அவளுக்கு அவர் கல்வி கற்பித்தார்; அதையும் செம்மையாகச் செய்தார்; அவளுக்கு ஒழுக்கம் கற்பித்தார். அதையும் செய்மையாகச் செய்தார். பிறகு அவளை (விடுதலை செய்து) தாமே மணமுடித்துக்கொண்டார். அவருக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கும்.

2.) வேதக்காரர்களில் (ஏக இறையை) நம்பியவர். அவர் (தம்) இறைத்தூதரை நம்பினார்; பிறகு (இறுதித் தூதரான முஹம்மத்) நபி (ஸல்) அவர்களையும் நம்பினார். அவருக்கும் இரட்டை நன்மை கள் கிடைக்கும்.

3.) இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.

அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் ஹை (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை எனக்கு அறி வித்த) ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘(கட்டணம் ஏதுமின்றி இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதைவிட சின்ன விஷயங்களை அறிந்துகொள்ள சிலர் மதீனாவரை கூட பயணம் சென்றுகொண்டி ருந்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி 3011)

===============================

6- சரியான தீர்ப்பு வழங்கும் நீதிபதி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. (இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 7352)

===============================

7- அஸ்ருத் தொழுகையைப் பேணித் தொழுபவர்:

அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முகம்மஸ்” எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு “இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால்,அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத் தொழுகையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. (முஸ்லிம் 1510).

நன்மைகள் அதிகம் அதிகம் செய்து இறை அன்பைப் பெறுவோமாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *