1- உங்கள் வாழ்வில் எந்தளவுக்கு பிரார்த்தனை தாக்கம் செலுத்துகின்றதோ அந்தளவுக்கு நீங்கள் துர்ப்பாக்கிய நிலையை விட்டுத் தூரமானவர் என்பதற்கு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் கூறியது சான்றாக உள்ளது.
وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا
“என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.” (அல்குர்ஆன் 19: 4)
===============================
2- எந்தளவுக்கு பெற்றோருக்கு பணிவிடை செய்கின்றீர்களோ அந்தளவுக்கு நீங்கள் துர்ப்பாக்கிய நிலைய விட்டுத் தூரமானவர் என்பதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறியது சான்றாக உள்ளது:
وَّبَرًّۢابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.” (அல்குர்ஆன் 19:32).
===============================
3- இன்று பலருடைய வாழ்வில் துர்ப்பாக்கிய நிலை ஆதிக்கம் செலுத்துவதற்கு எந்த வணக்கத்தை விட்டது காரணம் என்பதை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கூறியது நல்லதொரு சான்றாக உள்ளது;
وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ ۖ عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا
“நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்). (அல்குர்ஆன் 19:48).
===============================
4- அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்துக் கொள்வதே நற்பாக்கியம்:
مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ
“(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.” (அல்குர்ஆன் 20:02)
===============================
5- நேர்வழியைப் பின்பற்றுவதிலேயே நற்பேறுள்ளது. முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அன்னாரது துணைவிக்கும் வழங்கப்பட்ட செய்தி இது::
فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى
“அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.” (அல்குர்ஆன் 20:123)
===============================
6- அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்பித்து துர்ப்பாக்கிய நிலையை அடைந்தவர்கள் நரகில் போட்டு கரிக்கப்படும் போது கைசேதப்பட்டவர்களாக இவ்வாறு கூறுவார்கள்::
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ
“எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 23: 106).
===============================
7- துர்ப்பாக்கியமுடையவனுக்கு உபதேசம் பயனளிக்காது:
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىؕ سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ
“ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.” (அல்குர்ஆன் 87: 9,10,11).
===============================
8- துர்ப்பாக்கியவான்களே நரகில் நுழைவர்:
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰىۚ لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ
“ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.” (அல்குர்ஆன் 92: 14,15).