1- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
“லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்”
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’ என்று ஒரு நாளில் நூறு முறை சொல்பவருக்கு,
1- 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமா(க நற்பலன் கிடைக்கும்.
2- மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.
3- அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும்.
4- மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.
5- மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), புஹாரி 6403)
2- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் பத்து முறை ஓதுகிறாரோ
அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர்” ஆவார். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள், முஸ்லிம் 5223).
3- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
‘லாயிலாஹ இல்லல்லாஹுஇ வஹ்தஹுஇ லா ஷரீக்க லஹுஇ லஹுல் முல்க்குஇ வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் என்பதை காலையில் பத்து முறை கூறுவாரோ,
1- அவருக்கு 100 நன்மைகள் எழுதப்பட்டு,
2- 100 பாவங்கள் மன்னிக்கப்பட்டு,
3- ஒரு அடிமையை உரிமையிட்ட நன்மையும்,
4- மாலை வரை ஷைத்தானிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். மாலையில் ஓதும் போதும் அதே சிறப்புக் கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அஹ்மத் 8704)