தொழுகை இரு ஷஹாதாக்களுக்குப் பிறகு சிறந்த நற்செயலாகும்.
தொழுகை இஸ்லாத்தின் தூணாகும்.
தொழுகை ஈருலகிலும் பிரகாசமாகும்.
தொழுகை சிறு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
தொழுகை இறை நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.
தொழுகை ஈருலகிலும் வெற்றியாகும்
தொழுகை பதவிகளை உயர்த்தும்
தொழுகை பாவங்களை மன்னிக்கும்
தொழுகை சுவனத்தில் நுழைவிக்கும் மகத்தான நற்செயலாகும்.
தொழுகைக்கு வைக்கும் ஒவ்வொரு எட்டும் பாவங்களை மன்னிகும், பதவிகளை உயர்த்தும்
தொழுகைக்கு வைக்கும் ஒவ்வாரு எட்டுக்கும் ஒரு நன்மை பதியப்படும்.
ஒரு தொழுகை மறு தொழுகை வரை நிகழ்ந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
தொழுகை எதிர்பர்த்து அமர்ந்திருப்பவர் தொழுகையில் இருப்பவரைப் போன்றவர்.
தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவருக்கு வானவர்கள் பிரார்த்திக்கின்றனர்.
தனித்துத் தொழுபவரை விட கூட்டாகத் தொழுபவருக்கு 27 மடங்கு நன்மை உண்டு.
நற்செயல்களில் தொழுகையே நாளை மறுமையில் முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்
தொழுகையின் மூலம் உள்ளம் அமைதி பெறும்.
தொழுகை நிம்மதியாகும்
தொழுகை கண் குளிர்ச்சியாகும்.
தொழுகை நெறுக்கடிகளை நீக்கும், கவலைகளைப் போக்கும்.
தொழுகை பாதுகாப்பாகும்.
தொழுகை சீராகிவிடும் போது ஏனைய நற்செயல்கள் சீராகி விடும்.
தொழுகை சுவனத்தில் நுழைவிக்கும் ஒப்பந்மாகும்.
தொழுகை இறைவன் முன்னால் நிற்க்கும் வணக்கமாகும்
தொழுகை இறைவனுடன் உரையாடும் வணக்கமாகும்.
தொழுகை இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் வணக்கமாகும்.
தொழுகை பாவங்களை விட்டுத் தடுக்கும்.
தொழுகை இறைவனிடம் உதவி தேடும் மகத்தான வணக்கமாகும்.
தொழுகை நபியவர்களின் இறுதி வஸிய்யத்தாகும்
தொழுகை இஸ்லாத்தின் அடையாளமாகும்.
தொழுகை இறைநம்பிக்கைக்கும், நிறாகரிப்புக்கும் இடயிலுள்ள ஒப்பந்தமாகும்
தொழுகை நயவஞ்சகத்ததை விட்டு காக்கும்
தொழுகை வாழ்வாதாரத்தில் பரகத்தை ஏற்படுத்தும்
தொழுகை நாளை மறுமையில் இறைவனைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றுத் தரும்.
தொழுகை வெற்றியின் பால் விரைந்து வாருங்கள் என அழைக்கப்படும் வணக்கமாகும்.
தொழுகை மிஃராஜில் (வானுலகில்) கடமையாக்கப்பட்டதாகும்
தொழுகை பதட்டத்தைத் தடுத்து, மன உறுதியைத் தரும்.
தொழுகை நரகத்தை விட்டு காக்கும்.
தொழுகையின் இவ்வளவு சிறப்புகளைப் படித்த பிறகும் ஒருவன் தொழாமல் இருப்பானாக இருந்தால் அவன் உண்மையில் ஒரு துர்ப்பாக்கிவான்தான். எனவே இதைப் படிக்கும் நீங்கள் தொழாதவராக இருந்தால் எனது வாழ்வில் இவ்வளவு காலம் இந்த நற்பாக்கியங்களை நான் இழந்து விட்டேனே! என கவலை கொண்டு இன்றிலிருந்தே தொழுகையை ஆரம்பியுங்கள். அது உங்கள் கடந்த காலத்தையும் சீராக்கிவிடும். உங்கள் எதிர் காலத்தையும் ஒளிமயமாக்கி விடும்.
மேலுள்ள செய்திகள் அனைத்தும் அலகுர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபி மொழிகளிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்