1- மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டு விடும் போது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், யார் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 780).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங்கள். ஏனெனில், யார் ‘ஆமீன்’ கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 782).

===============================

2- மலக்குகளுடன் நேர்பட்டு விடும் போது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால், நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 796).

===============================

3- பதிவதில் 30க்கும் மேற்றபட்ட மலக்குகள் போட்டியிட்ட பிரார்த்தனை:

ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியபோது, ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள்.

அவர்களுக்குப் பின்னா-ருந்த ஒரு மனிதர் “ரப்பனா வ ல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” (எங்கள் இறைவா! புகழ் அனைத் தும் உனக்கே உரியன. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார்.

தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தை களைச்) சொன்னவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள், இதைத் தம்மில் முத-ல் பதிவு செய்வது யார் என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 799)

===============================

4- எடுத்துச் செல்வதில் 12 மலக்குகள் போட்டியிட்ட பிரார்த்தனை:

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி” (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்” எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 1051).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *