ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து தொகுகப்பட்ட மகத்தான பொக்கிஷங்கள். இவைகள் எல்லாக் காலங்களிலும் செய்து வரவேண்டிய மகத்தான நற்செயல்கள்.
1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை நீங்கள் ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்.
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 சதகாக்களுக்கு நிகரான நன்மையை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்.
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்.
7) எவர் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் நாளை மறுமையில் அவரது பதவிகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் விளங்கி மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் வுழூச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து நிகழ்த்தப்படும் உரையை மொளனமாக செவி தாழ்த்தி கேட்பாரோ இரு ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், இன்னும் மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது வாழ்வாதாரத்தை (ரிஸ்கை) விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது வாழ்நாளிலும் பரக்கத் செய்கின்றான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் நியமிக்கப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று எனக் கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் சபையின் முடிவில் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் சபையில் இருக்கும் போது நிகழ்ந்த பாவங்களுக்கு அது பரிகாரமாகும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் நூறு முறை “சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.
16) ‘எவர் லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் என்பதை பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் 70 வருட தொலைவுக்கு அவரது முகத்தை அல்லாஹ் நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாத் தொழுகையிலும் கலந்து, அந்த ஜனாஸாவைப் பின் தொடர்ந்து அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்.
21) எவர் உபரியான ஒரு நோன்பை நோற்று, ஒரு நோயாளியை நலம் விசாரித்து, ஒஜனாஸாவைப் பின் தொடர்ந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் (மார்கக்) கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிம் தனக்கொரு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ எனக் கூறினால் அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை பகரமாக வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்வாரோ, அவரது (சிறிய) பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) எவர் சகோதர முஸ்லிமின் கஷ்டத்தை இந்த உலகில் நீக்குவாரோ, அவரது கஷ்டத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் சகோதர முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் சிரமத்திலிருப்பவருக்கு அவர் தர வேண்டிய கடனுக்கு அவகாசம் அளிக்கிறாரோ அல்லது அதை தள்ளுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் வுழூச் செய்த பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸுலுஹு’ எனக் கூறுவாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.