அல்லாஹ் ஏவும் மூன்று விடயங்கள்:
1- நீதி செலுத்துமாறு
2- நன்மை செய்யுமாறு
3- உறவினர்களுக்கு கொடுக்குமாறு
———————————————————————————————————————————————————————-
அல்லாஹ் தடுக்கும் மூன்று விடயங்கள்:
1- மானக்கேடான காரியங்களை விட்டும்
2- பாவங்களை விட்டும்
3- அக்கிரமங்களை விட்டும்
படியுங்கள்: அல்குர்ஆன் 16:90.
———————————————————————————————————————————————————————-
நபியவர்களுக்கு அல்லாஹ் இட்ட மூன்று கட்டளைகள்:
1- மன்னிப்பைக் கைக் கொள்வீராக!
2- நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக
3- அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக
படியுங்கள்: அல்குர்ஆன் 7:199
———————————————————————————————————————————————————————-
அவர்கள் பேசும் இரகசியங்களில் நன்மை பயக்கும் மூன்று:
1- தர்மத்தை ஏவுதல்
2- நன்மையை ஏவுதல்
3- மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல்
படியுங்கள்: அல்குர்ஆன் 4:114
———————————————————————————————————————————————————————-
நஷ்டம் போகாத மூன்று வியாபாரங்கள்:
1- அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவது
2 – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்துத் தொழுவது
3- அல்லாஹ் அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்வது படியுங்கள்: அல்குர்ஆன் 35:29
———————————————————————————————————————————————————————-
சுவர்க்கத்தின் வழி இலேசாக்கப்படும் மூன்று விடயங்கள்:
1- (தானதருமம்) கொடுப்பது
2- (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வது,
3- நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மை படுத்துவது.
———————————————————————————————————————————————————————-
கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழி இலேசாக்கப்படும் 3 விடயங்கள்:
1- உலோபித்தனம் செய்தவது
2- அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுவது
3- நல்லவற்றை பொய்யாக்குவது
படியுங்கள்: அல்குர்ஆன் 92:05-10
———————————————————————————————————————————————————————-
தீமையை நன்மயாக மாற்றும் மூன்று விடயங்கள்:
1- தவ்பாச் செய்து
2- ஈமான் கொண்டு
3- நற் செயல்களைச் செய்வது
படியுங்கள்: அல்குர்ஆன் 25:70
———————————————————————————————————————————————————————-
அல்லாஹ் ஸஹாபாக்களுக்கு (முஃமின்களுக்கு) வெறுப்பாக ஆக்கிய மூன்று விடயங்கள்:
1- நிராகரிப்பை
2- பாவத்தை
3- மாறுபாடு செய்வதை
படியுங்கள்: அல்குர்ஆன் 49:07
———————————————————————————————————————————————————————-
நாளை மறுமையில் விசாரணைக்கு உற்படுத்தப்படும் மூன்று:
1- செவிப்புலன்
2- பார்வை
3- இருதயம்
படியுங்கள்: அல்குர்ஆன் 17:36
———————————————————————————————————————————————————————-
சாபத்துக்குரிய மூவர்:
1- அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுபவர்கள்
2- அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுபவர்கள்.
3- பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்பவர்கள்.
படியுங்கள்: அல்குர்ஆன் 13:25
———————————————————————————————————————————————————————-
அவதூறு சொன்னவர்களுக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும் மூன்று;
1- அவர்களுடைய நாவுகள்
2- அவர்களுடைய கைகள்
3- அவர்களுடைய கால்கள்
படியுங்கள்: அல்குர்ஆன் 24: 24