இஸ்லாம் கூறும் அரசியல்

‘அரசியல்’ என்ற நேரடியான வார்த்தை அல்-குர்ஆனில் இடம் பெறாத போதும் ஆட்சி அதிகாரம் தொடர்பாகவும் அது வழங்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அல்லாஹ் அவனது திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

ஏகத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கி இணைவைப்பின் சாயல் கூட தனக்கோ, தனது சந்ததியினருக்கோ பட்டு விடக் கூடாது என்ற கொள்கை உறுதியில் இருந்து நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்தியினருக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்;. அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.” (4:54)

அவ்வாறே ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்ட நபி யூசுப் (அலை) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் நமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.

தனக்கு அல்லாஹ் வழங்கிய ஆட்சி அதிகாரத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திய நபி யூசுப் (அலை), அதிகார மோகத்தினால் ஈமான் இழக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்து, ‘யா அல்லாஹ்! என்னை உனக்கு முற்றிலும் வழிப்பட்ட உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்திடுவாகயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!’ (என்று அவர் பிரார்த்தித்தார்.)” (12:101)

மேற்படி சம்பங்கள் அரசியலுக்காக மார்க்கம் இரண்டாம் தரமாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை மிகத் தெளிவாக பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

அரசியலை முதன்மைப் படுத்தி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை பின்னுக்குத் தள்ளிய எவரும் தமது இலக்கை முழுமையாக அடைந்தாக வரலாறு கிடையாது.

அவ்வாறே அரசியலை மையப்படுத்தி போலி ஒற்றுமை கோசங்களை விடுபவர்களின் நிலையும் பல வருடங்களாக வெறும் கோசங்களாகத்தான் இருப்பதை பார்த்து வருகின்றோம்.

மார்க்கத்தை முதன்மை படுத்திய அரசியல் தான் நபியவர்கள் நமக்கு காட்டிய இஸ்லாம் கூறும் அரசியலாகும்..

13-04-2018 அன்று அல் ஜுபைல் ஒரு நாள் மாநாட்டில் அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அவர்களின் உரையில் இருந்து….

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed