மீலாது விழா ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்

நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள், தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்பட வில்லை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் ‘ஷியாக்களின் பாத்திமிட்’ ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள்.

உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் என்பவர் கூறுகிறார்: –

“ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.”

மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: –

“ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.”

அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய ‘அல்-பிதாயா வல் நிகாயா’ என்ற நூலில், மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின் சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: –

‘அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின் விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், ‘அவர் அந்த விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் , பத்தாயிரம் கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் கூறினர்’

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல் ‘வாஃபியாத் அல்-அய்யான்’ என்னும் நூலில் கூறுகிறார்: –

‘ஸபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர். கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும் அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு கோபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல் விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்’

இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம் என்று கருதலாயினர்.

இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில் தோற்றுவிக்கப்பட்ட ‘பித்அத்’ என்னும் நூதன செயலேயாகும்.

ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை களைவதற்கு பாடுபட வேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
3 thoughts on “மீலாது விழா ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்”
  1. #நபிகள்நாயகம்நம்மைபோன்றசாதாரணமனிதரா?​​

    உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ﷺ அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதரா?

    ​​
    ♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு


    நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர், அவர்கள் மறைவானவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள். அந்த அடிப்படையில் “நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று நபியே நீர் கூறும்.” (அல்கஹ்பு – 110) என்ற பாதி வசனத்தை வைத்து கொண்டு வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

    ​​ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் அல்ல என்பதையும் அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய மரியாதை, கண்ணியம், முக்கியத்துவம் பற்றி நபிமொழியை ஆதாரமாக காட்டி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியம் பற்றி குறைமதியில் கூட பார்க்க கூடாது, காரணம் இன்று உலகளவில் கண்ணியத்தின் சவாலாக இருக்கின்றது. ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரண மனிதரா? என்ற கேள்விக்குறிய பதில் பின்வருமாறு அலசுவோம்.

    ​​
    ♣ நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ‘எம்மைப் போன்ற சாதாரன மனிதர்’ என்று வஹ்ஹாபிகள் காட்டக்கூடிய போலியான ஆதாரங்களுக்கு தக்க பதில்கள்

    (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது, எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” (அல்குர்ஆன் : 18:110)

    கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்ற சித்தாந்தமாகிறது. “நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று நபியே நீர் கூறும்.” என்ற பாதி வசனத்தை வைத்து உருவானதாகும். ஆகவே வஹ்ஹாபிகள் குர்ஆன் வசனங்களை அவர்களுக்கு தோதுவானதை எடுத்துவிட்டு அரைகுறையாக விவாதிக்கும் மடயர்கள். ‘சாதாரன மனிதர்’ என்று குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

    ​​மாராக “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே” என்றுதான் கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் “(அல்லாஹ்விடமிருந்து) எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றதே அப்படிப்பட்ட உங்களைப் போன்ற மனிதன் என்று (நபியே) நீர் கூறுவீராக” என்ற முழு வசனத்தை சிந்தித்தாலோ அல்லது ரஸுல்மார்களைப் பார்த்து நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் அன்றி வேறில்லை என்று அம்மக்கள் கூறினார்கள். அதற்கு அந்த ரஸுல்மார்கள் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தான் என்றாலுமோ, மேலும் தொழில்கள், செயல்கள் போன்ற விடயங்களில்தான் உங்களைப் போன்றவர் என்பதை புரிந்து கொண்டாலோ! இந்த தவரான வாதம் தவிடுபிடியாக ஆகிவிடுகின்றது.

    ​​ஆனால் அந்த வசனத்தின் தொடர்ச்சியில் எனக்கு அல்லாஹ்வின் புரத்தால் வஹீ அறிவிக்கப்படுகிறது என்ற வசனத்தை வஹ்ஹாபிகள் விழிங்கி விடுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்றால்? இந்த வஹ்ஹாபிகளுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படுகிறதா?

    அல்லது வஹியின் யதார்த்தம் என்ன? அல்லாஹ்விடமிருந்து வஹீ எந்த அமைப்பில் இறங்கும்? ஒரு நொடி பொழுதில் மிஃராஜ் யாத்திரை மூலம் ஏழு வானங்களை கடந்து அல்லாஹ்வை சந்தித்து உறவாடிவிட்டு மீண்டும் மண்ணுலகத்துக்கு திரும்பி வந்த நிகழ்ச்சி? அவர்களின் சைக்கினைக்கிணங்க சந்திரன் இரண்டாக பிளந்திருக்குமா? மரங்கள் தான் சிரம் பணிந்து வந்திருக்குமா? என்று சிந்தித்தால் தெளிவு விளங்கும்.

    ♦ மேலும் இந்த ரஸுல் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் என்று அநீதம் செய்பவர்கள் இரகசியமாக கூறுகின்றார்கள் (அல்அன்பியா -03) என்ற வசனத்தை சிந்தித்தாலோ இந்த தவறான சித்தாந்தத்துக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும். மிகப் பிரமாண்டமான மலையே தாங்கிக்கொள்ள முடியாமல் தவிடுபொடியாகி விடும்” என்று (ஸுரத்துல் ஹஷ்ர்-21) சொல்லப்பட்ட குர்ஆனை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாதாரண மனிதராக இருந்தால் தாங்கியிருக்க முடியுமா?

    ​​தொழுகைக்கு இகாமத்து சொல்லப்பட்டது அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முகத்தைக்கொண்டு எங்களில் பால் முன்னோக்கி உங்களின் சப்புகளை நேராக்கிக்கொள்ளுங்கள். மேலும் ஒருவருக்கொருவர் சேர்ந்து நின்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக நான் எனது முதுகுக்குக் பின்னால் இருந்தும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.
    (புகாரி – 719) அப்படியானால் முதுகுக்குப் பின்னால் இருந்தும் பார்க்கின்

  2. ஈத் மீலாதுன்னபி… மீலாதே வருக…

    தலஅல் பத்ரு அறபு கஸீதா தமிழ் மொழிப்பெயர்ப்பு கவியுடன்

    طلع البدر علينا ، من ثنيات الوداع

    وجب الشكر علينا ، مادعي لله داع

    ايها المبعوث فينا ، جئت بالامر المطاع

    جئت شرفت المدينة ، مرحبا ياخير داع

    قد لبسنا ثوب عز ، بعد تلفيق الرقاع

    انت فى الكل جميل ، وجمال يامطاع

    ورضعنا ثدى وصل ، قبل ايام الرضاع

    ربنا صل على من ، حل في خير البقاع

    وعلى آل وصحب ، ماسعى لله ساع

    واسبل الستر علينا ، يا مجيبا كل داع

    வலிதே பிரயாணஞ் செய்து
    வந்துதித்தது பூரண சந்திரன்
    பொலிவாயே யெம்மை யிறையோன்
    புறத்தே யழைத்தார்க்கு நன்றி
    செலுத்தலே எங்கள் கடமை
    தீதற வேநம்மி னின்று
    நலமா யனுப்பப் பட்டீர்
    நற்செயல்கள் கொண்டு வந்தீர்.

    வருகைதந் தீர்கள் மதீனா
    வதனையுஞ் சிறப்பாக் கினீர்கள்
    அருமையா யழைப்போரில் நல்லீர்
    வருகைநல் வரவா குகவே
    அறுந்தவற் றிற்கண்டை போட்டு
    சிறந்தநல் லுடைக ளுடுத்தோம்
    இருக்கு மனைத்துப் பொருளில்
    எழில்மிக் கீர்தாங்கள் தாமே.

    இணக்கமுள் ளீர்தாங் கள்தாமே
    எதனினும் சுந்தரர் தாங்கள்
    மணக்குமின் னமுதூட்ட முன்னர்
    மறையோனை யிரண்டறச் சேரும்
    குணந்தரு மமுதைக் குடித்தோம்
    குறையிலா நல்லோ ரிடத்தில்
    புணரியாய் வந்துற்ற நாதர்
    பூரணர் பரிபூர ணத்தர்.

    எம்நபீ அவர்தங்கள் மீதும்
    இறைவனுக் காய்த்தொண்டு செய்தோர்
    நம்முயர் கிளையாரும் தோழர்
    நாமுறுங் கருணையும் கூர்வாய்
    சும்மையோ டழைப்ப வர்க்குச்
    சொந்தமாய் விடைகூறு மல்லா
    செம்மையாய் நம்மீது திரையைச்
    சித்தமாய்ச் சோர விடுவாய்.

    (எம்பெருமானார் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்றபோது ஆண்கள் ஒன்று கூடினார்கள். பெண்களும் சிறுபிள்ளைகளும் கூடி அழகாக இசைத்த அருமைப்பாடலே மேல் உள்ளது.)

    (பாடல்களைப் பல இராகங்களிற் பாட வேண்டுமாயின் சீர்களைச் சற்று மாற்றி வைத்துக் கொள்ளல் நன்று.)

    ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

    ஆக்கம் : ஜஉபருல் பர்ஸன்ஜிய் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்

    ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *