பெற்றோர் இருக்க பிள்ளைகள் மரணிப்பது
பெற்றோர் இருக்க பிள்ளைகள் மரணிப்பது தாங்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அந்த இறை நாட்டத்தை பொருந்திக் கொள்பவருக்கு சுவனத்தில் ஒரு வீடு நிச்சியம் கிடைக்கும்.
தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன்
ஓர் அடியானின் பிள்ளை மரணித்து விட்டால் அல்லாஹ் மலக்குமார்களிடம் கேட்பான் “எனது அடியானின் குழந்தையின் உயிரை கைப்பற்றி விட்டீர்களா?” மலக்குமார்கள் ஆம் என்பர். பின்னர் “எனது அடியானின் உள்ளத்தின் கனியை (ஈரக் கொழுந்தை) கைப்பற்றி விட்டீர்களா?” மீண்டும் மலக்குமார் ஆம் என்பர். “எனது அடியான் அப்போது என்ன சொன்னான்?” உன்னை புகழ்ந்து உன்னிடம் மீளும் வார்த்தையான (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்) என்றார். “அப்படியென்றால் எனது அந்த அடியானுக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டி அதற்கு புகழுக்குறிய வீடு என பெயர் இடுங்கள்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி)
ஆதாரம்: திர்மிதி 1021