40 சிறிய நபி மொழிகளை படிப்போம், விளங்குவோம், மனனமிடுவோம், பரப்புவோம், மகத்தான நன்மைகளை அடைந்து கொள்வோம்!
===============================

عَنْ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ: مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
1- “எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகிறான்” என இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூற நான் கேட்டேன் என முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி 2436)
===============================
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ الله صلى الله عليه وسلم: مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ
2- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள் யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான். என அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புஹாரி 5645)
===============================
عَنْ جَرِيرِ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ
3- இறைத்தூதர் (ﷺ)அவர்கள் கூறினார்கள்’ (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புஹாரி 6013)
===============================
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ
4- இறைத்தூதர் (ﷺ)அவர்கள் கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அறிவித்தார் (புஹாரி 2447)
===============================
عَنْ جَابِرٍ رضي الله عنه قال: سَمِعْتُ رَسُوْلَ الله صلى الله عليه وسلم يَقُوْلُ: يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ
5- “ஒவ்வொரு அடியானும் எந்த நிலையில் மரணிக்கின்றானோ அதே நிலையில் எழுப்பப்படுவான்” என அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூற நான் கேட்டேன் என ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் 7413)
===============================
عَنْ أَنَسٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ: يَسِّرُوا، وَلاَ تُعَسِّرُوا وَبَشِّرُوا، وَلاَ تُنَفِّرُوا
6- ‘இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்’ என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புஹாரி 69)
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي قَالَ: لاَ تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ: لاَ تَغْضَبْ.
7- ஒருவர் நபி (ﷺ) அவர்களிடம், ‘எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், கோபப்படாதே என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (‘அறிவுரை கூறுங்கள்’ எனப்) பல முறை கேட்டபோதும் நபி (ﷺ) அவர்கள் கோபப்படாதே’ என்றே சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். (புஹாரி 6116)
===============================
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
8- “பஃஜ்ருடைய முன் ஸுன்னத் இரண்டு ரக்அத்துகள் இவ்வுலம் அதிலுள்ள வஸ்துக்களை விட சிறந்ததாகும்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். (முஸ்லிம் 1721).
===============================
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ. (البخاري 574)
9- ‘பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’ என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ (البخاري 580)
10- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنِ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ تَحَرَّوْا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ ، وَلاَ غُرُوبَهَا. (البخاري 582)
11- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள: ‘சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أن النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ. (البخاري 594)
12- ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன’ என்று நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளனர்’
===============================
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ ما يَقُولُ الْمُؤَذِّنُ. (البخاري 611)
13- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.’ என அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ثَلاَثًا لِمَنْ شَاءَ. (البخاري 624)
14- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.’ என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً. (البخاري 645)
15- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنِ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ. (البخاري 693)
16- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். ‘உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார்
===============================
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ، قَالُوا : يَا رَسُولَ اللهِ أَيُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ. (البخاري 11)
17- ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
===============================
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ، وَمَنْ لَمْ تَعْرِفْ. (البخاري 12)
18- ‘ஒருவர் இறைத்தூதர் (ﷺ) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ. (البخاري 13)
19- ‘உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
===============================
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: ” آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ.
20- ‘ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்’ என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ. (البخاري 4659)
21- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ உங்களின் கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ كَرِهَ اللَّهُ لِقَاءَه. (البخاري 6508)
22- நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: எவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்பு கின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். எவர் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
===============================
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا. (البخاري 6516)
23- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் செய்த (நன்மை, தீமை, ஆகிய)வற்றின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : يَقْبِضُ اللَّهُ الأَرْضَ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ. (البخاري 6519)
24- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தா
===============================
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ. (البخاري 6521)
25- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்
===============================
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ إِنَّكُمْ مُلاَقُو اللهِ حُفَاةً عُرَاةً غُرْلا. (البخاري 6525)
26- இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ﷺ) அவர்கள் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) மீது இருந்தபடி ‘நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்’ என்று உரையில் குறிப்பிட்டதை கேட்டேன்.
===============================
عَنْ عَبْدِ اللهِ ابْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ. (البخاري 6533)
27- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِئَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا. (البخاري 6552)
28- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது. என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الْغُرَفَ فِي الْجَنَّةِ كَمَا تَتَرَاءَوْنَ الْكَوْكَبَ فِي السَّمَاءِ. (البخاري 6555)
29- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)களை (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள்.
என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ. (البخاري 6446)
30- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا. (البخاري 6460)
31- அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!’ என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
===============================
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ وَقَالَ اكْلَفُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُون. (البخاري 6465)
32- ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி (ﷺ) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்
===============================
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، وَلاَ حِجَابٌ يَحْجُبُهُ. (البخاري 7443)
33- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்கமாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்கமாட்டார்; தடுக்கிற திரையும் இருக்காது. என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ. (البخاري 2083)
34- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كُلُّ بَيِّعَيْنِ لاَ بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا إِلاَّ بَيْعَ الْخِيَار. (البخاري 2113)
35- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘விற்கக் கூடியவரும் வாங்கக் கூடியவரும் பிரியும்வரை அவர்களுக்கிடையே வியாபாரம் ஏற்படவில்லை; முறித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டு அதைப் பயன்படுத்தாவிட்டால் தவிர’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ. (البخاري 6322)
36- அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி (ﷺ) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி’ என்று கூறுவார்கள். (பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: قَالَ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ. (البخاري 7498)
37- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’ ‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
===============================
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (البخاري 781)
38- இறைத்தூதர் (ﷺ) அவர்கள் அறிவித்தார்கள்: ‘உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
===============================
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَفْضَلُ الصَّلاَةِ طُولُ الْقُنُوتِ.
39- “தொழுகையில் மிகச் சிறந்த தொழுகை நீளமான நிலைகளைக் கொண்ட தொழுகையாகும்” என இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், முஸ்லிம் 1804).
===============================
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ مِنَ اللَّيْلِ سَاعَةً لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ خَيْرًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ. (مسلم 1804)
40- இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு. ஒரு முஸ்லிமான அடியார் சரியாக அந்த நேரத்தில் இறைவனிடம் எந்த நன்மையை வேண்டினாலும் இறைவன் அவருக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை என இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், முஸ்லிம் 1804).
===============================
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *