“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்” (7:180).

“அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் (மனனமிடுபவர்) சொர்க்கத்தில் நுழைவார்”. என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2736)

 

01 اللَّهُ வணங்கப்படக்கூடியவன்
02 اَلْإِلهَ வணங்கப்படக்கூடியவன்
03 اَلْحَيُّ என்றென்றும் உயிருடன் இருப்பவன்
04 اَلْقَيُّومُ என்றென்றும் நிலைத்திருப்பவன்
05 الرَبُّ படைத்துப் பரிபாலிப்பவன்
06 الرَّحْمَنُ அளவற்ற அருளாளன்
07 الرَّحِيمُ நிகரற்ற அன்புடையோன்
08 الْمَلِكُ பேரரசன்
09 الْقُدُّوسُ மிகப்பரிசுத்தமானவன்
10 السَّلَامُ சாந்தியளிப்பவன்
11 الْمُؤْمِنُ தஞ்சமளிப்பவன்
12 الْمُهَيْمِنُ கண்காணிப்பவன் பாதுகாப்பவன்
13 الْعَزِيزُ (யாவரையும்) மிகைத்தவன்
14 الْجَبَّارُ அடக்கியாள்பவன்
15 الْمُتَكَبِّرُ பெருமைக்குரியவன்
16 الْخَالِقُ படைப்பவன்
17 الْبَارِئُ ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்
18 الْمُصَوِّرُ உருவமளிப்பவன்
19 الْأَوَّلُ முதலாமவன்
20 الْآخِرُ இறுதியானவன்
21 الظَّاهِرُ மேலானவன்
22 الْبَاطِنُ அந்தரங்கமானவன்
23 الْغَفُورُ மிக்க மன்னிப்பவன்
24 الْحَافِظُ பாதுகாவலன்
25 الْحَفِيظُ யாவற்றையும் கண்காணிப்பவன்
26 العَالِمُ நன்கறிந்தவன்
27 الْكَبِيرُ மிகப் பெரியவன்
28 الْمُتَعَالُ மிக உயர்ந்தவன்
29 المَالِكُ தீர்ப்பு நாளின் அதிபதி
30 المَلِيكُ அரசன்
31 المُقْتَدِرُ வலிமைமிக்கவன்
32 الأَحَدُ ஒருவன்
33 الصَّمَدُ எவ்வித தேவையுமற்றவன்
34 الْوَاحِدُ தனித்தவன்
35 الْقَهَّارُ அடக்கியாள்பவன்
36 الْوَلِيُّ பாதுகாவலன்
37 الْحَمِيدُ புகழுக்குரியவன்
38 الْمَوْلَى (சிறந்த) பாதுகாவலன்
39 النَّصِيرُ (சிறந்த) உதவியாலன்
40 الرَّقِيبُ கண்காணிப்பவன்
41 الشَهِيدُ கண்காணிப்பவன் (சாட்சியாளன்)
42 السَّمِيعُ யாவற்றையும் செவியேற்பவன்
43 الْبَصِيرُ யாவற்றையும் பார்ப்பவன்
44 الْحَقُّ உண்மையாளன்
45 الْمُبِينُ தெளிவுபடுத்தக்கூடியவன்
46 اللَّطِيفُ நுட்பமானவன்
47 التَّوَّابُ மிக்க மன்னிப்பவன்
48 الْوَدُودُ மிக்க அன்புடையவன்
49 الْمَجِيدُ மேன்மைமிக்கவன்
50 الرَّزَّاقُ உணவளிப்பவன்
51 الْقَوِيُّ வல்லமை மிக்கவன்
52 الْمَتِينُ உறுதியானவன்
53 الْخَيْرُ சிறந்தவன்
54 الْحَسِيْبُ போதுமானவன்
55 الْوَكِيلُ பொறுப்பாளன்
56 الشَكُورُ நன்றி செலுத்துபவன்
57 الْحَلِيمُ சகிப்புத்தன்மைமிக்கவன்
58 الْبَرُّ பேருபகாரம் செய்பவன்
59 الشَاكِرُ நன்றியுடையவன்
60 الْوَهَّابُ பெருங்கொடையாளன்
61 الْقَاهِرُ அடக்கியாள்பவன்
62 الْغَفَّارُ மிக்க மன்னிப்பவன்
63 الْفَتَّاحُ மேலான தீர்ப்பாளன்
64 الرَءُوفُ கருணையாளன்
65 النُّورُ பிரகாசமானவன்
66 المُقِيتُ கண்காணிப்பவன்
67 الوَاسِعُ விசாலமானவன்
68 الْوَارِثُ உரிமையாளன்
69 الْأَعْلَى மிக உயர்வானவன்
70 المُحِيْطُ சூழ்ந்தறிபவன்
71 العَلَّامُ மறைவானவற்றை அறிந்தவன்
72 الْمُسْتَعَانُ உதவி தேடப்படுபவன்
73 الْخَبِيرُ நன்கறிந்தவன்
74 القَرِيبُ அருகிலுள்ளவன்
75 المُجِيبُ பதிலளிப்பவன்
76 الْكَرِيمِ கண்ணியமானவன்
77 الْأَكْرَمُ மிக கண்ணியமானவன்
78 الْعَلِيُّ மிக உயர்ந்தவன்
79 الْعَظِيمُ மகிமை மிக்கவன்
80 العَفُوُّ மன்னிப்பவன்
81 الْحَاكِمُ தீர்ப்பளிப்பவன்
82 الْغَنِيُّ எந்தத் தேவையுமற்றவன்
83 الكَفِيلُ பொறுப்பாளன்
84 الْحَيِّيُ வெட்கப்படுபவன்
85 السِتِّيرُ மறைப்பவன்
86 الْمُسَعِّرُ விலையைத் தீர்மானிப்பவன்
87 الْقَابِضُ பற்றிப்பிடிப்பவன்
88 الْبَاسِطُ விசாலப்படுத்துபவன்
89 الرَّازِقُ உணவளிப்பவன்
90 الْمُقَدِّمُ முற்படுத்துபவன்
91 الْمُؤَخِّرُ பிற்படுத்துபவன்
92 القَدِيرُ பேராற்றல் உடையவன்
93 السُبُّوحُ மிக்க தூயவன்
94 الرَفِيقُ மென்மையானவன்
95 الطَيِّبُ மிக்க தூயவன்
96 الْحَكَمُ தீர்ப்பளிப்பவன்
97 الدَّيَّانُ விசாரணை செய்பவன்
98 الْهَادِي நேர் வழியில் செலுத்துபவன்
99 النَّاصِرُ உதவி செய்பவன்
1- அல்லாஹ்விற்குரிய திருநாமங்கள் அனைத்தும் மிக அழகானவை.
2- அது அவனது உயர்ந்த பண்புகளை அறிவிப்பவைகளாக இருக்கின்றன.
3- கற்கும் கல்விகளில் மிக உயர்ந்தது.
4- அல்லாஹ் தனது பெயர்களையும் பண்புகளையும் நேசிக்கின்றான்.
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அறிந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள்:
1- ஈமானின் சுவையை கண்டு கொள்வார்.
2- அல்லாஹ்வை உரிய முறையில் வணங்குவார்.
3- அல்லாஹ்வை அனைத்தை விடவும் நேசிக்க ஆரம்பிப்பார்.
4- அல்லாஹ்வை சந்திப்பதில் பேராவல் கொள்வார்.
5- அல்லாஹ் வெறுக்கும் எந்த ஒரு செயலும் அவரிலிருந்து வெளிப்படாது.
6- ஒரு போதும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்.
7- அவரது உள்ளத்தில் அல்லாஹ்வின் மகத்துவம் மேலோங்கியிருக்கும்.
8- அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே வாழ்வார்.
9- அவரது உள்ளத்தில் ஒரு துளியும் பெருமை ஏற்படாது.
10- அல்லாஹ்வுடன் மிக நெருங்கிய தெடர்போடு இருப்பார்.
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *