1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.

2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.

3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.

4- இறுதித் தூதருக்கு அருளப்பெற்ற வேதத்தையும், அதற்கு முன்னர் அருளப் பெற்ற வேதங்களையும் நம்பிக்கைக் கொள்வார்கள்.

5- இறுதி நாளை உறுதியாக நம்பிக்கைக் கொள்வார்கள்.

படியுங்கள்: அல்குர்ஆன் அத்தியாயம் அல்பகரா 2: 3,4)

6- அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள்.

7- (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்வார்கள்.

8- தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடிப்பார்கள்.

9- முறையாக ஜகாத் கொடுத்து வருவார்கள்.

10- தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்.

11- (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்பார்கள்.

படியுங்கள்: அல்குர்ஆன், அத்தியாயம் அல்பகரா 2: 177).

12- இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்.

13- கோபத்தை அடக்கி கொள்வார்கள்.

14- மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்.

15- மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்.

16- மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

படியுங்கள்: அல்குர்ஆன், அத்தியாயம் ஆலு இம்ரான் 3: 134, 135).

17- அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்;

18- தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்.

19- தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்பார்கள்,

20- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.

படியுங்கள்: அல்குர்ஆன், அத்தியாயம் அல்ஹஜ் 22: 35).

பயபக்தியுடையோராக வாழ்ந்து பயபக்தியுடையோராகவே மரணிப்போமாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *