வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்

சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.Iron Was Sent down from Another Giant StarIron Sent Down

தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள்.  (பார்க்கவும் வீடியோ)

இந்த அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள். (பார்க்கவும் வீடியோ)

பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.

பெரிய கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.

பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.Bombardment Period

தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.

ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.Iron Ingot

அல்லாஹ் கூறுகிறான்: –

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
5 thoughts on “வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்”
  1. சுபஹானல்லாஹ்!!! அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை அளவிடமுடியாது..

  2. asalamu alaikum,
    i want to know that author name and book name of islam and science

  3. ASSALAMU ALAIKUM
    SUVARKATHIN IRUTHI ADIYANAI PATRI KURUNGAL PLEASE,

    NOTES ; TAMIL TRANSLATION

  4. the article about iron is beautiful and if you mentioned the Arabic text of the verse it will be very beautiful thank you,

    basheer ahamed.A sivagangai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed