இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 1 – அல் குர்ஆன் (For Children and Beginners)
Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.
Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.
Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்
Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.
Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்
Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)
Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)
Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.
Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்
Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா
Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)
Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)
Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)
Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்
Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)
Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.
Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?
A) கஃபா
Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)
Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
A) ஜூதி மலையில் (11:44 )
Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
A) ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)
Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) ஜின் இனம்
Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
A) தொழுகை மற்றும் ஜக்காத்
Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
A) சூரத்துத் தவ்பா
Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
A) 23 வருடங்கள்
Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
A) மர்யம் (அலை)
Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
A) 6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))
Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?
A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.
Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) 99 பெயர்கள்
Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
A) யத்ரிப் (33:13)
Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை
Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?
A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)
Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?
A) நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)
அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.
Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
Q45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?
A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)
Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)
Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)
Q48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)
Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)
Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
A) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)
மாஷா அல்லாஹ்………………
மிகவும் பயனுள்ள முயற்சி
அல்லாஹ் உங்கள் முயற்சிகளை ஏற்று சொர்க்கத்தைப் பரிசாகத் தந்தருள்வானாக!!!!!!!!!!!!!!!!
அந்நிய மத பெண்ணை காதலித்து திருமணம் செய்வது இஸ்லாத்தில் கூடுமா
கூடாது
அந்நிய பெண் அல்லது ஆணை ஒரு முஸ்லிம் திருமணம் செய்தால் அவரும் காபிர் ஆகி விடுகின்றார்
அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் திருமணம் செய்யலாம்.
அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை (ஷிர்க் செய்பவர்களை) திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 2:221)
jazakumulahu haira.inum ifaru kelviku padil anupinal nam kulandaihaluku ilahuvaha irukum andru naan nambugindrain.
Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.
இது தவறு முஹமமத் என மூன்று முறை தான் இடம் பெற்றுள்ளது , அஹ்மது என ஒரு முறையும். மொத்தம் நான்கு தடவை தான் இடம் பெற்றுள்ளது.
@Abdul Rahim, மன்னிக்கவும், அல் குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் 5 தடவைகள் இடம்பெற்றுள்ளது. பார்க்கவும்!
முஹம்மது என இடம்பெற்றுள்ள குர்ஆன் வசனங்கள் 4:
1. 03:144
2. 33:40
3. 47:02
4. 48:29
அஹ்மது என இடம்பெற்றுள்ள குர்ஆன் வசனம் 1:
1. 61:06
-SAFNAS (ADMIN)
#ஷரீஆ நியூஸ்
அப்படியென்றால் அத்தோடு தாஹா ஹாமீம், யாஸீன், தாஸீன், நூர்,… என்னும் சில பெயர்களும் உள்ளது
மிக்க நன்றி.மிகவும் பயனுள்ள தகவல்.
இறைவன் உங்களுக்கு நற்பாக்கியங்களை தந்தருள்வானாக,ஆமின்.
Kabrudaiya vethanai patri konjam sollungal
1)நபி (ஸல்) அவர்களின் பெயர் குர்ஆனில் எத்தனை முறை வந்துள்ளது அதன் பிறகு எந்த அத்தியாயத்தில் இருந்து ரஸூலுல்லாஹ் என்று அழைக்கப்பட்டது? 2)குர்ஆனில் எத்தனை முறை அல்குர்ஆன் அல்லது குர்ஆன் என்று இடம்பெற்றுள்ளது?
அல் குர்ஆன் முழுமையாக இறங்கிய முதலாம் வானத்திலுள்ள இடம் எது? –
குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
Zaid binth Haritha(rali)
நபி அவர்கள் ஹீமைரா என்று யாரை அழைத்தார்கள்?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு சகோதரரே!
உங்களின் கேள்விக்கான பதில்களை மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் அளித்துள்ளார்கள். அதற்கான லிங்கை இங்கு தருகின்றோம். கேட்கவும்.
பதில் ஆடியோ-1
பதில் ஆடியோ-2
சூறத்துல் கிதால் என சிறப்பிக்கப்படும் சூறா எது?
ANS ME
சூரா தவ்பா
Ayesha rali avarhalai nabi sal humaira entru alaitharhal… humaira entral sivanthavalae entru porul…
அன்னை ஆயிஷா رضي الله عنها
محمد رسول الله என்று ஆரம்பிக்கும் ஆயத்தாகும் அது சூரா பத்ஹ்
அல் குர்ஆன் முழுமையாக இறங்கிய முதலாம் வானத்திலுள்ள இடம் பைதுல் இஸ்ஸா
1)குர் ஆனில் அலாஹ் என்ற வார்த்தை 7முறை வரும் வசனம் எது?
2) நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் சமயம் ஒரு துஆ செய்து கொண்டே மக்காவை திரும்பி திரும்பி பார்த்து சென்ற சமயம் ஓதிய. வசனம் எது
நபி(ஸல்) அவர்கள் எந்த ஸஹாபியை பார்த்து “மூஸாவிடம் ஹாரூனுக்கு இருந்த தரத்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்..?
☪☪☪☪☪☪☪☪☪☪☪
அலி(ரலி) அவர்களைப் பார்த்து
தபூக் யுத்தத்திற்கு நபியவர்கள் சென்ற போது அலி (ரழி) அவர்களை மதீனாவிற்கு பொருப்பாளராக நியமித்தார்கள். அப்போது அலி (ரழி) அவர்களை பார்த்து மேற்படி வாசகத்தை நபியவர்கள் கூறினார்கள். இந்த செய்தியை வைத்து ஷியாக்கள் அலி (ரழி) அவர்களுக்கு நபித்துவ அந்தஸ்து கொடுத்து வழிகெட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது.
பிஸ்மி தவிர்த்த எந்த வசனம் அதிக தடவை
அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது? என்ற
கேள்விக்கான பதிலை கூறமுடியுமா?
தவ்பாசூரா9அத்தியாயம்
யா அல்லாஹ்! எனது மரணத்தை உனது தூதரின் ஊரிலேயே ஆக்குவாயாக! என்று பிராத்தனை செய்த நபித்தோழர் யார்?
யா அல்லாஹ்! எனது மரணத்தை உனது தூதரின் ஊரிலேயே ஆக்குவாயாக! என்று பிராத்தனை செய்த நபித்தோழர் உமர் இன்று ஹத்தாப் ரழி ஆவார்கள்.
ஆதாரம் புகாரி
Saibullah endru alaikapatta nabi tholaryar
காலித் இப்னு வலீத் ரழி
ரமழான் மற்றும் ஏனைய காலங்களில் நடாத்தப்படும் போட்டி நிகழ்சிகளில் கேட்க்கப்படும் கேள்விகளை நமது இணையத்தளத்தில் கேட்டு அதற்கான பதிலை வழங்குவது குறித்த போட்டிகளை நடாத்துபவர்களை ஏமாற்றுவதாக அமையும். எனவே தயவு செய்து நீங்களாக முயற்சித்து குறித்த விடைகளை தேடிக் கொள்ளுங்கள்.
தயவு செய்து மார்க்க சட்டங்கள் தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் கேள்விகளை மாத்திரம் இங்கு பதிவு செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைக்கும் போது பதில் வழங்குவோம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் மௌலவி அவர்களே!
அன்பு சகோதர, சகோதரிகளே! உங்கள் கேள்விகளை பின்வரும் சுட்டியை கிளிக் செய்து அங்கு பதியுமாறு வேண்டுகிறோம். இங்கு பதிய வேண்டாம். நேரம் கிடைக்கும் போது அவற்றுக்கு பதிலளிக்கப்படும்.
http://suvanathendral.com/portal/?page_id=9964
நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்
அல்குர்ஆனில் அனஸ்.ரழி அவர்களின் பெயர் எந்த ஆயத்தில் காணப்படுகிறது???
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
கேள்வியை சரிபார்க்கவும்
அரபிக் எழுத்துக்கள் அனைத்தும் உள்ள ஆயத்தது எது?
محمد رسول الله என்று ஆரம்பிக்கும் ஆயத்தாகும் அது சூரா பத்ஹ்
Arumaiyaana muyarcci…. Allah ungaluku narkooli valanguvaanaga…
Quranil Yettana murai TOLUGAIYAI NALAI NATTUNGAL yenru Allah kuriginran..
ஹுதைபியா உடனபடிக்கை ஏற்க மறுத்த நபி தோழர் யார்??
Q7) 7 வது வினா தொடர்பான தெளிவினை தரவும்.
எனக்கு தெரிந்த ஒரு நபர் அந்த கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறார்.
Q7 வினா சரியா
தொழுவிக்கும் இமாமுக்கு மாதாந்த சம்பளம். அவரோடு தொழும் மஃமூம்களுக்கு மாதாந்த சந்தா. இது நியாயமா?? மார்க்கம் அனுமதிக்குமா?
நபிகளின் சிறப்புப் பெயரும் அதன் பொருளும்.sola mudiuma.
ஆண்டில் ஒரு முறையோ என தொடங்கும் வசன தொடரில் சோதனை உண்டு எத்தனை முறை சோதனை எனக்கூறும் குர்ஆனில் உள்ள வசனம் என்ன அத்தியாயத்தின் பெயர் என்ன மொத்த வசனங்கள் எத்தனை ?
Q)8 க்கான பதில் உதுமானா? உஸ்மானா? விளக்கம் தாருங்கள்
மக்காமன் மஹ்மூதா என்னும் சிறப்பு மிக்க இடத்தில் எந்த தொழுகை தொழுவதால் எழுப்பப்படுவோம் ?
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான “தஹஜ்ஜத் தொழுகையைத்” தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், ‘மகாமம் மஹ்முதா’ என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும். (17:79)
1.யாரோடு அழகிய முறையில் நட்பு வைக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது…?
2.மலக்குமார்களே ஒரு மனிதரைக்கன்டு வெட்கப்படுகிறார்கள் என்றால் அவர் யார்…?
சொர்க்கத்திலூம் குர்ஆன் ஓதும் சஹாபி யார்
Q37, குர்ஆனில் நபிமார்களின் பெயர்களில் உள்ள சூராக்களின் எண்ணிக்கை??
இதில் லுக்மான் (அலை) அவர்களின் பெயர் இல்லையே. (சூரா 31)
What are the three aspects that Prophet Muhammad (pbuh) made emphatically serious, free from any amusement?
குர்ஆனில் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ன சில சூராக்களை தொடங்குவது ஏன்?
குர்ஆனில் நோன்பு என்ற வார்தை எத்தனை தடவை உள்ளது???